For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் சுடுநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

ஆயுர்வேத மருத்துவம், அதிகாலையில் வெறும் வயிற்றில் குளிர்ந்த நீருக்கு பதிலாக சுடுநீரைக் குடிப்பதால், இன்னும் ஏராளமான நன்மைகளைப் பெறலாம் என்று கூறுகிறது.

|

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் காபி, டீ குடிப்பதற்கு முன் ஒரு டம்ளர் நீரைக் குடிப்பார்கள். இது உண்மையில் ஓர் ஆரோக்கியமான பழக்கம் தான். இருப்பினும் ஆயுர்வேத மருத்துவம், அதிகாலையில் வெறும் வயிற்றில் குளிர்ந்த நீருக்கு பதிலாக சுடுநீரைக் குடிப்பதால், இன்னும் ஏராளமான நன்மைகளைப் பெறலாம் என்று கூறுகிறது.

MOST READ: உங்க வயிறு 'பானை' போல அசிங்கமா இருக்கா? அப்ப 2 ஸ்பூன் தேனை தினமும் இப்படி சாப்பிடுங்க...

கீழே காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் சுடுநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொண்டு, நீங்கள் காலையில் காபி, டீ குடிப்பவராயின், அதைத் தவிர்த்து இனிமேல் சுடுநீரைக் குடியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உறுப்புக்கள் சுத்தமாகும்

உறுப்புக்கள் சுத்தமாகும்

காலையில் வெறும் வயிற்றில் சுடுநீரை ஒரு டம்ளர் குடிப்பதல், உடலில் தேங்கியுள்ள டாக்ஸின்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, உடல் உறுப்புக்களின் செயல்பாடு சீராக இருக்கும்.

மெட்டபாலிசம் மேம்படும்

மெட்டபாலிசம் மேம்படும்

ஒருவர் காலையில் சுடுநீரை முதல் வேளையாகப் பருகினால், அவரது மெட்டபாலிசம் மேம்படுத்தப்பட்டு, உடல் உறுப்புக்களின் இயக்கம் சீராக இருக்கும்.

வலிகள் குறையும்

வலிகள் குறையும்

மாதவிடாய் காலத்தில் நிறைய பெண்கள் வயிற்று வலியால் கஷ்டப்படும் போது, சுடுநீர் ஓர் நல்ல நிவாரணியாகக் கருதப்படுகிறது. ஏனெனில் சுடுநீர் வயிற்றுத் தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்து, வலியைக் குறைக்கும். இது மாதவிடாய் வலிகள் மட்டுமின்றி, உடலில் ஏற்படும் இதர வலிகளையும் போக்கும்.

எடை குறையும்

எடை குறையும்

உடல் எடை அதிகம் இருப்பவர்கள், காலையில் வெறும் வயிற்றில் சுடுநீரைப் பருகுவதன் மூலம், உடலின் வெப்பநிலை அதிகரித்து, மெட்டபாலிசம் மேம்பட்டு, கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் வேகமாக கரைக்கப்பட்டு, உடல் எடை குறையும்.

இரத்த ஓட்டம் மேம்படும்

இரத்த ஓட்டம் மேம்படும்

முக்கியமாக சுடுநீரை அதிகாலையில் பருகுவதன் மூலம், உடலில் நச்சுக்கள் வெளியேற்றப்படுவதோடு, உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

முதுமை தடுக்கப்படும்

முதுமை தடுக்கப்படும்

இன்றைய காலத்தில் இளம் வயதிலேயே முதுமைத் தோற்றத்தைப் பெறுகின்றனர். இதனைத் தடுப்பதற்காக எத்தனையோ க்ரீம்களைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அப்படி கண்டதைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, சுடுநீரை தினமும் பருகி வந்தால், விரைவில் முதுமை தோற்றத்தைப் பெறுவதைத் தடுக்கலாம்.

செரிமானம் மேம்படும்

செரிமானம் மேம்படும்

முக்கியமாக சுடுநீரை காலையில் பருகி வந்தால், செரிமான பிரச்சனைகள் ஏற்படுவது குறையும். மேலும் மலச்சிக்கல், வயிற்று உப்புசம் போன்றவை ஏற்படாமலும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Benefits Of Drinking A Glass Of Hot Water On An Empty Stomach In The Morning

Here are some health benefits of drinking a glass of hot water on an empty stomach in the morning. Read on to know more...
Desktop Bottom Promotion