Latest Updates
-
கர்நாடகா ஸ்டைல் கசப்பே இல்லாத பாவக்காய் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… காற்று சுத்தமாகும், பணமும் அதிர்ஷ்டமும் தானாக வரும்! -
பணத்தின் வரலாறு: பணம் கண்டுபிடிப்பதற்கு முன் எதை வைத்து மக்கள் பொருட்களை வாங்கினார்கள் தெரியுமா? -
சம்பளம் வந்ததும் மணி பிளாண்ட் வாங்குறீங்களா? பணத்தை அள்ளிக் கொடுக்கும் அந்த ரகசிய திசை இதுதான்! -
May 2026 Monthly Horoscope: மே மாதத்தில் வெற்றிப்படிக்கட்டில் வேகமாக ஏறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
மசாலா பன் தோசையும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 30 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு கேட்டது கிடைக்கும் நாளாக இருக்குமாம் -
புதன் மேஷ ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
1/4 கப் வேர்க்கடலை இருந்தா தேங்காய் சேர்க்காத இந்த சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிந்தால் பலாத்காரமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது?
உங்களுக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருக்கா? அப்ப இதப்படிங்க!
குடிப்பது, புகைப்பது தான் கெட்டப் பழக்கம் என்றில்லை, நகம் கடிப்பது கூட ஆரோக்கியத்தை கெடுக்கும் பழக்கம் தான். இந்த பக்கத்தால் 40 வயது ஆண் தன் உயிரையே இழந்துள்ளார்.
நம்மை சுற்றி இருக்கும் பல நபர்களிடம் இதை நாம் சர்வ சாதாரணமாக பார்க்க முடியும். நகம் கடிப்பது கெட்டப் பழக்கம் என இதை எத்தனை முறை கூறினாலும், அவர்களால் நிறுத்த முடியாது. மது, புகை போல இதுவும் ஒரு பெயரிய அடிக்ஷன் தான்.

பதட்டம்!
நகம் கடிப்பது ஒருவகையான பதட்டம் மற்றும் அசௌகரிய உணர்வின் வெளிபாடு ஆகும். பல சமயங்களில் சில நபர்கள், தாங்கள் நகம் கடித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணராமலே நகம் கடித்துக் கொண்டிருப்பார்கள். கேட்டால், தனக்கே தெரியவில்லை என்பார்கள். இது அபாயமான அடிக்ஷன் ஆகும்.

சிறு, சிறு பிரச்சனைகள்...
நகம் கடிப்பதால், சளி, இருமல் மற்றும் சில சின்ன சின்ன கோளாறுகள் முதல் பெரிய உடல் நலக் கோளாறுகள் வரை உண்டாகலாம். இதற்கு காரணம், நகம் மற்றும் சருமத்தில் தங்கும் நச்சுக்கள் மற்றும் கிருமிகள்.

ஜான் கார்ட்னர்..
ஜான் கார்ட்னர் என்ற 40 வயது மிக்க நபர் ஒருவருக்கும் நகம் கடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. மருத்துவர் கூறிய அறிவுரையையும் மீறி இவர் தொடர்ந்து நகம் கடித்துக் கொண்டே இருந்துள்ளார்.

மாரடைப்பு...
நாளடைவில் இந்த நகம் கடிக்கும் பழக்கத்தால் செப்டிக் இன்பெக்ஷன் உண்டாகி, மாரடைப்பும் ஏற்பட்டது ஜான் ஜான் கார்ட்னர்-க்கு. இதனால், இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரது நகங்கள் அழுகின. மிகுந்த வலி உண்டானது.

மரணம்...
நகங்களில் இருந்து இரத்தம் கசிய ஆரம்பித்தது. செப்டிக் இன்பெக்ஷன் அதிகரித்தது. மருத்துவர்கள் கொடுத்த எந்த மருந்தும் ஜானுக்கு பயனளிக்கவில்லை. அடுத்த சில நாட்களில் அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக 40 வயதில் பரிதாபமாக உயிரிழந்தார் ஜான்.

பாடம்!
மிக வீரியமாக ஜான் கொண்டிருந்த நகம் கடிக்கும் பழக்கம் அவரது உயிரையே குடித்துவிட்டது. ஜானின் இறப்பு இப்போது ஒரு பாடமாக அமைந்திருக்கிறது.



Click it and Unblock the Notifications