For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒருவருக்கு தினமும் 8 மணிநேர தூக்கம் ஏன் அவசியம் என்று தெரியுமா?

By Maha
|

ஒருவருக்கு தினமும் 8 மணிநேர தூக்கம் அவசியம் என்று பல மருத்துவர்களும் கூறுவதைக் கேட்டிருப்பீர்கள். அக்காலத்தில் எல்லாம் சரியான நேரத்தில் தூங்கி, எழுந்ததால் தான், நம் தாத்தா பாட்டிக்கள் நீண்ட நாட்கள் நோயின்றி வாழ்ந்தனர். இதற்கு காரணம் என்னவென்று தெரியுமா?

இரவில் நல்ல ஆழ்ந்த உறக்கத்தைப் பெற உதவும் உணவுகள்!!!

தினமும் 8 மணிநேர தூக்கத்தை மேற்கொண்டு வந்தால், நாள் முழுவமும் ஓயாமல் வேலை செய்த உடலுக்கு போதிய ஓய்வு கிடைத்து, மறுநாள் புத்துணர்ச்சியுடன் செயல்பட முடியும். ஒருவேளை 8 மணிநேரத்திற்கு குறைவாக தூங்கினால், அவர்களுக்கு பல்வேறு உடல்நல கோளாறுகள் மறுநாளே நன்கு தெரியும்.

நிம்மதியான தூக்கம் வேண்டுமா? அப்ப இரவில் இந்த உணவுகளை தவிர்த்திடுங்கள்...

முக்கியமாக 8 மணிநேரத்திற்கு குறைவாக தூக்கத்தை மேற்கொண்டால், மாரடைப்பு, மற்ற இதய நோய்கள், எடையில் ஏற்றத்தாழ்வு, சில நேரங்களில் மூளையில் கூட பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. தூக்கத்திற்கும், இந்த பிரச்சனைகளுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்று தானே கேட்கிறீர்கள். அப்படியென்றால் தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆரோக்கியமாக இருக்கலாம்

ஆரோக்கியமாக இருக்கலாம்

பொதுவாக ஒருவர் நல்ல நிம்மதியான தூக்கத்தை மேற்கொண்டால், அவர்களுக்கு மறுநாளே தாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பதை உணர முடியும். அதிலும் இரவில் 8 மணிநேரம் தூக்கத்தை மேற்கொண்டால், நாள் முழுவதும் அயராது உழைத்த உடலுக்கு போதிய ஓய்வு கிடைத்து, பாதிக்கப்பட்ட புத்துயிர் பெறும்.

மூளைக்கு நல்லது

மூளைக்கு நல்லது

நீண்ட நேரம் மூளைக்கு கடுமையான வேலை கொடுத்து, இரவில் 8 மணிநேரம் தூங்கினால், மூளை செல்கள் சீரான இடைவெளியில் ஓய்வு பெறுவதோடு, புத்துயிர் பெற்று, ஆரோக்கியமாக செயல்படும்.

வாழ்நாள் நீடிக்கும்

வாழ்நாள் நீடிக்கும்

உங்களுக்கு ஒன்று தெரியுமா? தினமும் 8 மணிநேர தூக்கத்தை மேற்கொண்டால், வாழ்நாளின் அளவு நீடிக்கும்.

சீரான உடல் எடையை பராமரிக்கலாம்

சீரான உடல் எடையை பராமரிக்கலாம்

நம் உடலில் லெப்டின் என்னும் ஹார்மோன் உள்ளது. இந்த ஹார்மோன் தான் நாம் பசியுடன் உள்ளோமா இல்லையா என்பதை நமக்கு உணர்த்தும். ஒருவர் சரியாக தூங்காவிட்டால், இந்த ஹார்மோனின் அளவு குறைந்து, அதிகப்படியான பசியை தூண்டி, அதிக அளவில் உணவை உட்கொள்ள வைத்து, உடலை பருமனாக்கிவிடும். அதுவே நல்ல தூக்கத்தை மேற்கொண்டால், லெப்டின் அளவு சீராக இருக்கும்.

மன அழுத்தம் குறையும்

மன அழுத்தம் குறையும்

ஒருவர் தினமும் 8 மணிநேரம் தூங்கினால், உடனே மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதோடு, மன அழுத்தத்தினால் மற்ற உறுப்புக்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கலாம்.

செக்ஸ் வாழ்க்கை மேம்படும்

செக்ஸ் வாழ்க்கை மேம்படும்

தூக்கமின்மையால் ஒருவர் அவஸ்தைப்பட்டால், அவரால் எந்த ஒரு செயலையும் கவனத்துடனும், ஆர்வத்துடனும் செய்ய முடியாது. குறிப்பாக தூக்கமின்மை ஒருவரின் செக்ஸ் வாழ்க்கையை கூட பாதிக்கும். எப்படியெனில் சரியான அளவில் தூக்கத்தை மேற்கொள்ளாமல் இருக்கும் ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் அளவு பாதிக்கப்படும். இதனால செக்ஸ் வாழ்க்கை பாதிக்கப்படும். எனவே தினமும் 8 மணிநேர தூக்கத்தை மேற்கொண்டு, வாழ்க்கைத் துணையுடன் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருங்கள்.

புற்றுநோயைத் தடுக்கலாம்

புற்றுநோயைத் தடுக்கலாம்

ஆய்வு ஒன்றில் பெண்களுள் 6 மணிநேர தூக்கத்தை மேற்கொண்டவர்களுக்கு 62 சதவீதம் மார்பக புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிய வந்துள்ளது. எனவே தினமும் 8 மணிநேர தூக்கத்தை மேற்கொண்டால், புற்றுநோயில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

நோயெதிர்ப்பு சக்திக்கு நல்லது

நோயெதிர்ப்பு சக்திக்கு நல்லது

குறைவாக அளவில் தூக்கம் மேற்கொள்பவர்களை விட, 8 மணிநேர தூங்குபவர்களின் நோயெதிர்ப்பு சக்தி வலிமையாக உள்ளது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனவே நோய்களின் தாக்கத்தில் இருந்து விடுபட நினைப்பவர்கள், தினமும் 8 மணிநேர தூக்கத்தை தவறாமல் மேற்கொண்டு வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why You Should Sleep For 8 Hours A Night?

Here are some of the reasons why you should sleep for 8 hours a night, take a look.Make yourself comfortable, put to rest stimulants and get some rest.
Story first published: Thursday, July 16, 2015, 16:44 [IST]
Desktop Bottom Promotion