ஜின்னா, வோட்காவா உங்க உடம்புக்கு எது ஒத்துப் போகும்'னு தெரிஞ்சுக்குங்க!!!

By: John
Subscribe to Boldsky

மது அருந்துவதே தவாறன பழக்கம் தான். ஆனால், மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்று விளம்பரம் செய்யும் அரசாங்கம் தான் டாஸ்மாக்கை தலைமை ஏற்று நடத்தி வருகிறது. இதில் சமீபத்தில் மால்களில் எல்லாம் கிளைகள் திறந்திருக்கிறது.

வோட்கா குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

எனவே, நம் நாட்டு குடிமகன்கள் அதிகம் விரும்பிக் குடிக்கும் ஜின் மற்றும் வோட்காவில் என்னென்ன எல்லாம் கலக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலமாக உங்கள் உடல்நலம் என்னென்னவெல்லாம் ஆகிறது என்பதை பற்றி கூற வேண்டியது நமது கடமையல்லவா.

ஆல்கஹால் குடிச்சாலும், உடலை ஆரோக்கியமா வெச்சுக்கலாம்!!!

அந்த வகையில் தமிழகத்தில் அதிகமாக விற்கப்படும் மதுபானங்களாக கருதப்படும் ஜின் மற்றும் வோட்காவை பற்றியும் அதில் இருக்கும் உடல்நலம் சம்மந்தப்பட்ட விஷயங்கள் குறித்தும் தான் இங்கு பார்க்கவிருக்கிறோம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கலோரிகள்

கலோரிகள்

ஜின்னோடு ஒப்பிடுகையில் வோட்காவில் கலோரிகள் கம்மியாக இருக்கின்றது. இதனால் தொப்பை போடும் பிரச்சனையில் இருந்து குடிமகன்கள் சிறிதளவு தப்பிக்க வோட்கா உதவும்.

கார்போஹைட்ரேட்

கார்போஹைட்ரேட்

ஜின்னில் 13 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது, அதுவே வோட்காவில் 1 கிராம் தான் இருக்கின்றது. கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பது தான் நல்லது. எனவே, இந்த வகையிலும் வோட்காதான் ஜின்னை விட சிறந்து விளங்குகிறது.

அல்கஹால் அளவு

அல்கஹால் அளவு

ஜின்னில் 21 கிராமும், வோட்காவில் 16 கிராமும் அல்கஹால் அளவு உள்ளது. ஏறத்தாழ இரண்டும் ஒரே அளவு தான் என்பதனால். இரண்டும் சமநிலையில் தான் உள்ளது.

சர்க்கரையின் அளவு

சர்க்கரையின் அளவு

ஜின் மற்றும் வோட்காவில் உள்ள சர்க்கரை அளவு பற்றி ஒப்பிட்டு பார்த்தல், ஜின்னில் 13 கிராம் சர்க்கரை அளவு சேர்க்கப்படுகிறது. வோட்காவில் உள்ள சர்க்கரையின் அளவு 0 கிராம். எனவே, இந்த பிரிவிலும் வோட்கா தான் வெற்றிப் பெற்றுள்ளது.

வைட்டமின் சி

வைட்டமின் சி

ஜின்னில் வைட்டமின் சி'யின் அளவு 3% உள்ளது. அதுவே வோட்காவில் பார்க்கும் போது வைட்டமின் சி'யின் அளவு 0%. எனவே, இந்த பிரிவில் ஜின் முன்னிலை வகிக்கிறது.

மக்னீசியம்

மக்னீசியம்

இதயத்திற்கு வலு சேர்க்கும் மக்னீசியத்தின் அளவு ஜின்னை விட வோட்காவில் தான் அதிகம் இருக்கின்றது. ஜின்னில் 0.2%, வோட்காவில் 0.5%.

ஜிங்க் (Zinc)

ஜிங்க் (Zinc)

நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவிக்கும் ஜிங்க் சத்து ஜின்னில் 1% இருக்கின்றது. ஆனால், வோட்காவில் துளி கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சோடியம்

சோடியம்

இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் சோடியத்தின் அளவு ஜின்னில் 18 மி.கி.மும், வோட்காவில் 2 மி.கி.மும் இருக்கின்றது.

கருத்து

கருத்து

என்னதான் அது இருக்கிறது, இது இருக்கின்றது என்றாலும், உங்கள் வீட்டில் உங்களை நம்பி தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள் எல்லாம் இருக்கின்றனர். அவர்கள் இவைக்கு எல்லாம் மேல் மிக மிக முக்கியமானவர்கள். எனவே, ஜின்னும் வேண்டாம், வோட்காவும் வேண்டாம். நாம் இந்தியாவின் குடிமகன்களாக மட்டும் இருப்போம் என்று கூறி வணக்கம் சொல்லி விடைப்பெறுகிறேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Which Is Healthier Gin VS Vodka Martini

Do you know which is healthier gin or vodka martini? read here.
Story first published: Thursday, April 30, 2015, 9:32 [IST]
Subscribe Newsletter