நீங்க அடிக்கடி சோடா குடிப்பீங்களா? அப்ப கண்டிப்பா படிச்சு பாருங்க...

Posted By:
Subscribe to Boldsky

வெயில் அதிகம் இருக்கிறது என்று பலரும் கடைகளில் விற்கப்படும் சோடாவை வாங்கி குடிப்போம். ஆனால் அப்படி கடைகளில் விற்கப்படும் சோடாக்களை அதிக அளவில் குடித்தால், அதனால் பல்வேறு உடல்நல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

என்ன தான் பார்ப்பதற்கு பல வண்ணங்களில், அழகான பாட்டில்களில் விற்கப்பட்டாலும், அவை தற்காலிக புத்துணர்ச்சியைக் கொடுக்குமே தவிர, தொடர்ந்து குடித்து வர, உடலின் உட்புறத்தில் பல உறுப்புகளின் செயல்பாட்டிற்கு இடையூறை ஏற்படுத்தும்.

மேலும் சோடாக்களில் சர்க்கரை அதிகம் இருப்பதால், இதனை குடித்தால், இதுவரை வராத நோய்களும் விரைவில் வந்துவிடும். அதிலும் உடனே தெரியாது. திடீரென்று ஆரம்பமாகி, அதனால் உயிரே போகும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

சரி, இப்போது சோடாக்களை குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பற்களை சொத்தையாகும்

பற்களை சொத்தையாகும்

காற்றூட்டப்பட்ட பானங்களில் அசிடிக் தன்மை இயற்கையாகவே உள்ளதால், இதனை அதிக அளவில் குடித்து வந்தால், பற்களின் எனாமல் பாதிக்கப்பட்டு, விரைவில் பற்கள் சொத்தையாகும். மேலும் இதில் சர்க்கரை அதிக அளவில் இருப்பதால், அதனாலும் பற்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

கலோரிகள் நிறைந்தது

கலோரிகள் நிறைந்தது

காற்றூட்டப்பட்ட கார்போனேட்டட் பானமான சோடாக்களில் தண்ணீர், செயற்கை நிறமூட்டிகள், செயற்கை ப்ளேவர்கள், அதிகப்படியான சர்க்கரை, காப்ஃபைன் மற்றும் பாஸ்பரிக் ஆசிட் போன்றவைகள் உள்ளது. இவை எதுவுமே உடலுக்கு தேவையில்லாதது. மேலும் இந்த பானங்களில் இருந்து வெறும் கலோரிகள் மட்டும் தான் கிடைக்கிறது. அதனால் தான் இதனை குடித்தால், தாகம் குறைவதோடு, பசியும் தணிக்கப்படுகிறது.

காற்றூட்டப்பட்ட கார்போனேட்டட் பானமான சோடாக்களில் தண்ணீர், செயற்கை நிறமூட்டிகள், செயற்கை ப்ளேவர்கள், அதிகப்படியான சர்க்கரை, காப்ஃபைன் மற்றும் பாஸ்பரிக் ஆசிட் போன்றவைகள் உள்ளது. இவை எதுவுமே உடலுக்கு தேவையில்லாதது. மேலும் இந்த பானங்களில் இருந்து வெறும் கலோரிகள் மட்டும் தான் கிடைக்கிறது. அதனால் தான் இதனை குடித்தால், தாகம் குறைவதோடு, பசியும் தணிக்கப்படுகிறது.

எலும்புகள் பாதிப்படையும்

எலும்புகள் பாதிப்படையும்

சோடாக்களில் உள்ள பாஸ்பாரிக் ஆசிட், எலும்புகளுக்கு விஷம் போன்றது. இந்த பானங்களை அளவுக்கு அதிகமாக குடித்து வந்தால், ஆஸ்டியோபோரோசிஸ் விரைவில் ஏற்படும். இப்படி எலும்புகளின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால், அதனால் வாழும் நிம்மதியான வாழ்க்கை பாதிக்கப்படும்.

சிறுநீரக கற்கள்

சிறுநீரக கற்கள்

பாஸ்பாரிக் ஆசிட் சிறுநீரகங்களுக்கும் பிரச்சனையை ஏற்படுத்தும். எப்போது அளவுக்கு அதிகமாக பாஸ்பாரிக் ஆசிட் சிறுநீரகங்களில் சேர்கிறதோ, அவை கால்சியத்தை வெளியேற்றிவிட்டு, பாஸ்பாரிக் ஆசிட்டுகளை சிறநீரகங்களில் படியச் செய்து, கடுமையான வலியுடன் கூடிய சிறுநீரக கற்களை ஏற்படுத்தும்.

சருமம் பாதிக்கப்படும்

சருமம் பாதிக்கப்படும்

அளவுக்கு அதிகமான சர்க்கரை, சரும செல்களை பாதித்து, சருமத்தின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும். அதிலும் சோடாக்களை அன்றாடம் குடித்து வந்தால், விரைவில் முதுமைத் தாற்றத்தைப் பெறக்கூடும்.

உடல் பருமன்

உடல் பருமன்

சோடாக்களில் கலோரிகள் அதிகம் இருக்கிறது. இப்படி கலோரிகள் நிறைந்த சோடாவைக் குடித்தால், உடல் பருமன் அதிகரிக்கும். எனவே குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே கொடுப்பதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால், உங்கள் குழந்தைகள் இளமையிலேயே உடல் பருமனடைந்து மிகுந்த கஷ்டத்தை சந்திப்பார்கள்.

ஊட்டச்சத்து குறைபாடு

ஊட்டச்சத்து குறைபாடு

எப்போதும் சோடாவை குடித்தவாறே இருந்தால், அதனால் சரியாக உணவுகளை உட்கொள்ள முடியாமல் போய், ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படக்கூடும். பின் கடுமையான விளைவுகளை சந்திக்கக்கூடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What Happens If You Drink Soda?

We have a doubt, if diet soda is healthy, or it is good to drink diet soda? What happens if you drink diet soda? Read the article to know more.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter