நீரில் எலுமிச்சை சாற்றினை அளவுக்கு அதிகமாக கலந்து குடிப்பதனால் சந்திக்கும் பிரச்சனைகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

தொப்பை மற்றும் உடல் பருமனைக் குறைப்பதற்காக பலரும் அன்றாடம் எலுமிச்சை ஜூஸைக் குடிப்பார்கள். அதுமட்டுமின்றி எலுமிச்சை ஜூஸ் குடித்தால், உடலில் உள்ள டாக்ஸின்கள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாகும். மேலும் எலுமிச்சை ஜூஸில் உடலுக்கு தேவையான சத்துக்களான வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை அதிகம் உள்ளது.

ஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்!!!

ஆனால் நீரில் எலுமிச்சை சாற்றினை ஒருவர் அளவுக்கு அதிகமாக கலந்து குடித்தால், அதனால் பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே நீங்கள் வேறு ஏதேனும் ஒரு உடல்நல பிரச்சனைக்கு மருந்து மாத்திரைகளை எடுத்து வருபவராயின், முதலில் உங்கள் மருத்துவரிடம் இதுக்குறித்து ஆலோசனை செய்யுங்கள்.

நைட் தூங்கும் போது இத குடிச்சா தொப்பை குறையுமாம்...!

இப்போது நீரில் எலுமிச்சை சாற்றினை அளவுக்கு அதிகமாக கலந்து குடிப்பதனால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பல் கூச்சம்

பல் கூச்சம்

அமில உணவுகள் அல்லது பானங்களை, குறிப்பாக நீரில் எலுமிச்சை சாற்றினை அளவுக்கு அதிகமாக கலந்து குடித்தால், அதில் உள்ள அதிகப்படியான அமிலம் பற்களில் உள்ள எனாமலை அரித்து, மிகவும் சென்சிடிவ்வாக மாற்றிவிடும். இதனால் மிகவும் சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவே எதையும் உட்கொள்ள முடியாமல் போகும். இனிமேல் அமில பானங்களை பருகும் போது, ஸ்ட்ரா பயன்படுத்துங்கள்.

நெஞ்செரிச்சல்

நெஞ்செரிச்சல்

நீரில் அளவுக்கு அதிகமாக எலுமிச்சை சாற்றினை கலந்து குடித்தால், நெஞ்செரிச்சல் ஏற்படும். நெஞ்செரிச்சல் அதிகமானால், நெஞ்சில் வலி ஏற்படும். எனவே நெஞ்செரிச்சல் உள்ளவர்கள், அமிலம் நிறைந்த உணவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

அடிக்கடி சிறுநீர்

அடிக்கடி சிறுநீர்

எலுமிச்சையில் வைட்டமின் சி அல்லது அஸ்கார்பிக் ஆசிட் ஏராளமாக நிறைந்துள்ளது. இந்த சத்துக்கள், சிறுநீரகத்தில் சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும். இதனால் உடலில உள்ள டாக்ஸின்கள் மற்றும் சோடியம் விரைவில் வெளியேறும். ஆனால் இதை நீரில் அளவாக கலந்து பருகும் போது தான். அதுவே அளவுக்கு அதிகமாக சேர்த்து பருகினால், அதுவே பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.

உடல் வறட்சி

உடல் வறட்சி

சில நேரங்களில் எலுமிச்சை ஜூஸ் குடித்த பின்னர் உங்களுக்கு தாகம் எடுத்தாலோ அல்லது வறட்சி ஏற்பட்டாலோ, உங்கள் ஜூஸில் எலுமிச்சை சாற்றினை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அர்த்தம். ஏனெனில் ஜூஸில் அதிக அளவில் எலுமிச்சை சாறு இருப்பதால், அது வறட்சியை ஏற்படுத்துகிறது.

குறிப்பு

குறிப்பு

உங்கள் பிரச்சனையைப் போக்க எலுமிச்சை ஜூஸை எடுப்பதாக இருந்தால், முதலில் மருத்துவரிடம் கலந்தாலோசியுங்கள். ஒருவேளை நீங்கள் நீரில் எலுமிச்சை சாற்றினைக் கலந்து குடித்ததால் ஏதேனும் பக்க விளைவுகளை சந்தித்தால், அதைக் குடிப்பதை உடனே நிறுத்திவிட்டு, மருத்துவரை அணுகுங்கள். முக்கியமாக ஒரு டம்ளர் தண்ணீரில் பாதி பழத்தின் எலுமிச்சை சாற்றினை மட்டும் கலந்து குடியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Side Effects of Drinking Too Much Lemon With Water

Lemon with water contains nutrients your body needs such as vitamin C, potassium and fiber. However, this beverage may also cause side effects if you drink too much of it.
Subscribe Newsletter