மாதவிடாய் பிரச்சனையில் இருந்து தீர்வு காண பாட்டி வைத்தியம்.

By: viswa
Subscribe to Boldsky

மாதவிடாய் பிரச்னை பெண்களைப் பாடாய்படுத்தும் பிரச்னைகளில் ஒன்றாகும். நாட்கள் தள்ளிப் போவது, அதிகப்படியான உதிரப்போக்கு, உடல் சோர்வு அதிகவலி என மாதவிடாய் பிரச்னைகளால் பல பெண்கள் அவதிப்படுகிறார்கள். ஒரு காலத்தில் மாதவிடாய் நேரங்களில் ஓய்வும், சத்தான உணவும் கிடைத்தது. இப்போது அப்படியில்லை. பிஸியான வாழ்க்கை முறையில் நல்ல ஓய்வு என்பது கனவாகிவிட்டது. மாதவிடாய் நேரங்களில் பெண்கள் நன்கு ஓய்வு எடுப்பது அவசியம் ஆகும். நிறைய பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகளுக்கு எத்தனை மருந்து, மாத்திரைகள் மாற்றிப் பார்த்தாலும், ஏன் மருத்துவர்களையே மாற்றிப் பார்த்தாலும் கூட அவர்கள் எதிர்ப்பார்க்கும் பயன் அடைவதில்லை.

நமது எந்த ஒரு உடல் கோளாறுகளுக்கும் சரியான தீர்வடைய வேண்டும் எனில்? நீங்கள் இயற்க்கை மருத்துவத்தை தேர்வு செய்ய வேண்டும். முன்பு எப்பொழுதும் இல்லாத அளவு தொட்டதற்கு எல்லாம் நாம் மருத்துவமனையை நாடுகிறோம். ஆனால், நமக்கு முந்திய தலைமுறையில் அவர்கள் பாட்டி வைத்தியத்தின் மூலமே பல நோய்களுக்கு தீர்வு கண்டு வந்தனர். அதில் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது. சரி, மாதவிடாய் பிரச்சனையில் இருந்து தீர்வு காண பாட்டி வைத்தியம் எந்தெந்த வகையில் பயனளிக்கிறது என தெரிந்துக்கொள்ளலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அருகம்புல்

அருகம்புல்

தினமும் காலை அருகம்புல்லை அரைத்து சாப்பிட்டால் மாதவிலக்கு கோளாறுகள் குணமாகும். மற்றும் வயிறு உபாதைகள் சார்ந்த பிரச்சனைகளுக்கும் இது நல்ல தீர்வளிக்கும்.

அன்னாசிப் பழம்

அன்னாசிப் பழம்

அன்னாசிப் பழத்தை தினமும் சாப்பிட்டால் மாதவிலக்கு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

ஆலமர இலை

ஆலமர இலை

ஆலமர இலைகளை பொடி செய்து வெண்ணெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்குப் பிரச்னையில் இருந்து நல்ல தீர்வுக் கிடைக்கும்.

எள்

எள்

எள்ளைத் தண்ணீரில் போட்டு ஊற வைத்து. மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரை குடித்து வந்தால் மாதவிலக்கு காலத்தில் உண்டாகும் பிரச்சனைகள் குறையும்.

கருஞ்சீரகம்

கருஞ்சீரகம்

கருஞ்சீரகத்துடன் பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும்.

செம்பருத்திப் பூ

செம்பருத்திப் பூ

செம்பருத்திப் பூக்களை அரைத்து அதோடு எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து சாப்பிடுவதன் மூலம் மாதவிலக்கு ஒழுங்காகும். செம்பருத்தி மொட்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்று வலி குணமாகும்.

சோம்பு

சோம்பு

மற்றொரு பாட்டி வைத்தியம் என்னவெனில், சோம்பு, மாவிலங்கப்பட்டை, மிளகு மூன்றையும் சம அளவுக்குக் காய்ச்சி 100 மில்லி அளவுக்குக் குடித்தால், மாதவிலக்குப் பிரச்னைகள் விரைவில் சரியாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Natural Home Remedies For Period Problems

here you know about the natural home remedies for period problems.
Story first published: Wednesday, February 11, 2015, 14:58 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter