உடல் எடை குறைப்பு பற்றிய கட்டுக்கதைகள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

உடல் எடை குறைப்பு பற்றிய கட்டுக்கதைகளை நம்மில் பலர் இன்றளவும் கூட நம்பிக்கொண்டிருக்கிறோம். நம்மை சுற்றியுள்ள சமுதாயம் உடல் எடை குறைப்பைப் பற்றி அதிகமாக வலியுறுத்துவதால், உடல் எடை குறைப்பு இலக்குகளை நாம் தீவிரமாக கடைப்பிடித்து வருவோம். ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்புடனும் இருப்பதற்கு முயற்சி செய்வதில் ஒன்றும் தப்பில்லை தான். சொல்லப்போனால், ஆரோக்கியமான உடல் எடையுடன் இருப்பது நல்லது தான். ஆனால் நாம் பிரமைகளுடன் வாழும் போது பிரச்சனையே தொடங்குகிறது.

இரண்டே வாரத்தில் எடையைக் குறைக்க உதவும் சிறந்த ஒர்க்-அவுட்கள்!!!

முதலில், நம் உடலில் பட்டினி செயல்வகை ஒன்று உள்ளது என்பது நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. அதிக கொழுப்புகளை குறைக்கலாம் என்ற எண்ணத்தில் உங்கள் உடலுக்கு போதிய உணவுகளை நீங்கள் வழங்கவில்லை என்றால், அங்கே தொடங்குகிறது உங்கள் தவறு. உங்களுக்கு உணவு கிடைக்க போவதில்லை என்று உங்கள் உடல் கருதி விடும். இதனால் உங்களை உயிருடன் வைத்திருக்க நீங்கள் உண்ணும் அனைத்து உணவுகளையும் கொழுப்பு வடிவில் மாற்றி விடும். இம்மாதிரி விஷயங்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் பட்டினி கிடந்து உங்களை நீங்களே வருத்தி கொள்ள மாட்டீர்கள். மேலும் பல காரணிகளின் அடிப்படையில் தான் உடல் எடை குறைப்பு அடங்கியிருக்கிறது. அதனால் அவதி அவதியென ஓடுவதற்கு பதிலாக அவை அனைத்தையும் பொறுமையாக எடுத்துக் கொள்ளவும்.

பத்தே நாள் தான் டைம்.. அதுக்குள்ள தொப்பையை சுருக்கனும்.. எப்படி?...இப்படிச் செய்யலாம்!

சரி, மேற்கூறிய பட்டினி சமாச்சாரத்தை படித்த பிறகு, இப்போது உடல் எடையை பற்றிய மேலும் சில கட்டுக்கதைகளை தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆவலாக உள்ளதா? தொடர்ந்து படியுங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பட்டினி கிடத்தல்

பட்டினி கிடத்தல்

பட்டினி கிடந்தால் உடல் எடையை குறைக்க உதவிடும் என பலரும் நினைக்கின்றனர். ஏற்கனவே சொன்னதை போல் இது ஒரு கட்டுக்கதையாகும். சொல்லப்போனால், பட்டினி கிடப்பது மிகவும் ஆபத்தானது. முதலில் அது உங்கள் பசியை அளவுக்கு அதிகமாக அதிகரிக்க செய்யும். இதனால் உணவுகளை கண்டு விட்டால் போதும், அளவுக்கு அதிகமாக உண்ண ஆரம்பித்து விடுவீர்கள். உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொண்டு பட்டினி இருக்க தொடர்ந்தால், பல்வேறு உடல் கோளாறுகளை உண்டாக்கி விடும். மொத்தத்தில் பட்டினி கிடப்பது உங்களுக்கு எவ்வகையிலும் உதவப்போவதில்லை.

உடல் எடை குறைப்பு திட்டங்களை வாங்குதல்

உடல் எடை குறைப்பு திட்டங்களை வாங்குதல்

விளம்பரங்கள் மூலமாக தாங்கள் காணும் உடல் எடை குறைப்பு திட்டங்களின் மீது சிலருக்கு நாட்டம் ஏற்படுவதுண்டு. அவைகளை பின்பற்றுவதினால் மட்டும் உங்கள் கதைக்கு சுபம் போட்டு விட முடியாது. இவ்வகையான திட்டங்களையும் தாண்டி உடல் எடை குறைப்பிற்கு பல விஷயங்கள் தேவைப்படும்.

மாத்திரைகள்

மாத்திரைகள்

உடல் எடை குறைப்பு பற்றிய மற்றொரு பொதுவான கட்டுக்கதை இதுவாகும். உடல் எடையை குறைக்க உடல் எடை குறைப்பு மாத்திரைகளை உட்கொண்டாலே போதுமானது என சிலர் நினைக்கிறார்கள். இது உண்மைக்கு புறம்பானது. பொய்யான வாக்குறுதிகளை சந்தையில் பல நிறுவனங்களும் அள்ளி வீசுகின்றன. மாத்திரைகள் கண்டிப்பாக இதற்கு உதவிடாது. சில வேலை செய்தாலும் கூட, மருத்துவரை கலந்தாலோசிக்காமல் அவைகளை உண்ணுவது ஆபத்தில் முடியலாம்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

உடல் எடையை குறைக்க ஏதாவது சில உடற்பயிற்சிகளை செய்தாலே போதுமானது என்பது மற்றொரு கட்டுக்கதையாகும். சொல்லப்போனால், உடல் எடை குறைப்பு பல காரணிகளை நம்பி இருக்கிறது. அதில் ஒன்று மட்டும் தான் உடற்பயிற்சி. உணவு, மெட்டபாலிசம் போன்ற இன்னும் சில காரணிகளையும் நீங்கள் கண்டிப்பாக கருத வேண்டும்.

ஒரு வேளை உணவை தவிர்ப்பது

ஒரு வேளை உணவை தவிர்ப்பது

உடல் எடையை குறைக்க, காலை உணவு அல்லது மதிய உணவை தவிர்ப்பதை மட்டுமே நீங்கள் கடைப்பிடித்து வந்தால், கண்டிப்பாக அது ஆரோக்கியமான தேர்வு கிடையாது. சொல்லப்போனால் இப்படி செய்வது கூடுதல் பசியை ஏற்படுத்தும். அதனால் அடுத்த வேளையின் போது சேர்த்து வைத்து ஒரு கட்டு கட்டுவீர்கள். மேலும், ஏற்கனவே சொன்னதை போல் பட்டினி கிடக்க போகிறீர்கள் என்ற எண்ணத்தில், உங்கள் உடலில் கொழுப்புகள் அதிகமாக தேங்க தொடங்கும்.

கலோரிகள்

கலோரிகள்

சில கலோரிகளை மட்டும் எடுத்துக் கொள்வதால், உடல் எடையை குறைக்க சாத்தியமில்லை. அது கொஞ்சம் எடையை குறைக்க உதவும். ஆனால் மற்ற அம்சங்களும் தன பங்கிற்கு அதன் வேலையை காட்டும். உங்கள் மரபியல், உங்கள் மெட்டபாலிசம் மற்றும் உடல் உழைப்பின் அளவு போன்றவைகளே சில உதாரணங்கள்.

நொறுக்குத் தீனிகளை கைவிடுதல்

நொறுக்குத் தீனிகளை கைவிடுதல்

நொறுக்குத் தீனிகள் உண்ணுவதை கைவிட்டால் உடல் எடை குறைந்து விடும் என நீங்கள் எண்ணினால் அது தவறு. நொறுக்குத் தீனிகள் உட்கொள்வதை குறைப்பது கண்டிப்பாக நல்ல விஷயமே. ஆனால் உங்களின் ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளளவு மற்றும் செலவீனம் போன்ற சில காரணிகளை பொறுத்து தான் அதன் விளைவு அமையும்.

கார்போஹைட்ரேட்ஸை விலக்குதல்

கார்போஹைட்ரேட்ஸை விலக்குதல்

உடனடியாக உடல் எடையை குறைப்பதால் ஏற்படும் ஆபத்துகளை தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். புரதச்சத்து நிறைந்துள்ள உணவுகளை உண்ணுவது நல்லது தான். ஆனால் கார்போஹைட்ரேட்ஸை தவிர்ப்பது நாம் செய்யும் மிகப்பெரிய தவறாகும். உடல் எடையை குறைக்கும் தீவிரத்தில் உள்ளவர்கள் இதை செய்தாலும், அது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Myths About Weight Loss

Most of us still believe in some myths about weight loss.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter