வெஸ்டர்ன் கழிவறை முறையால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

குதத்தில் கால்கள் படும்படி அமர்தல் என்பது தான் மனிதர்களின் இயற்கையான நிலையாகும். தாயின் கருவறையில் இருந்தே இது தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையானது நமது உடல்நலனை காக்கவும் செய்கிறது என்பதை நம்மில் பலர் மறந்துபோன ஒன்று.

ஆம், குத்தை வைத்து (Squat) அமர்தல் என்பது இன்று நாம் கேலியாக கண்டாலும் கூட, முன்னோர்கள் இதை ஒரு ஆசனம் போன்று தான் பின்பற்றி வந்துள்ளனர். இது, குடல், வயிறு போன்ற உடல் பாகங்களின் ஆரோக்கியத்தை காக்கும் நிலை ஆகும். மேலும் இது மலம் கழிக்கும் போது எந்த சிரமும் இன்றி இலகுவாக கழியவும் பயனைளிக்கிறது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பத்து வருடங்களாக

பத்து வருடங்களாக

கடந்த 10 வருடங்களாக தான் வயிறு சார்ந்த பிரச்சனைகள் மற்றும் மலம் கழிக்க சிரமப்படும் பிரச்சனைகள் அதிகரித்து வருவதாகவும், இது நீண்ட நாட்களாக இருந்து வருகிறது என்று கூறியும் நிறைய பேர் மருத்துவமனைக்கு வருகிறார்கள் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

அதிகரித்து வரும் பிரச்சனை

அதிகரித்து வரும் பிரச்சனை

நாம் வெஸ்டர்ன் கழிவறை பயன்படுத்த ஆரம்பித்ததில் இருந்து மூல நோய் (hemorrhoids), குடல் (appendicitis), மலச்சிக்கல் (constipation), எரிச்சல் கொண்ட குடல் நோய் (irritable bowel syndrome) போன்ற உடல்நல கோளாறுகள் அதிகரித்து வருகின்றன.

வெஸ்டர்ன் கழிவறை தான் பிரச்சனை

வெஸ்டர்ன் கழிவறை தான் பிரச்சனை

டயட் மற்றும் வாழ்வியல் முறை மாற்றத்தோடு வெஸ்டர்ன் கழிவறையும் இந்த பிரச்சனைகளுக்கு ஓர் முக்கிய காரணம் என சில ஆய்வுகளின் மூலம் மருத்துவ ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

மலக்குடம்

மலக்குடம்

வெஸ்டர்ன் கழிவறை பயன்படுத்துவதால் நாள்பட இது மலகுடத்தை பாதிக்கிறது. அதன் இயல்பு வடிவம் / நிலை தடைப்படுவதால் மலம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

யோகா பயிற்சி

யோகா பயிற்சி

சஸங்காசனம் (Sasankasanam)எனும் இந்த ஆசனத்தை செய்யும் போது, குடலியக்கம் செய்பாடு சீராகும். மேலும் இது வயிறு உடல் பாகங்களுக்கு வலிமையளிக்கிறது.

சஸங்காசனம் பயன்கள்

சஸங்காசனம் பயன்கள்

சஸங்காசனம் செய்வதால் செரிமான கோளாறு, மலச்சிக்கல், நீரிழிவு, இடுப்பு வலி, முதுகு வலி, வயிற்று வலி போன்றவைக்கு தீர்வுக் காண முடியும். மேலும் இந்த ஆசனம் தொந்தியை குறைக்கவும் உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Indian Toilet Posture Is Best Scientific Reason

Using western closet may affect your abdomen organs and constipation. Actually Indian toilet posture is the best one, here is the scientific reasons.
Subscribe Newsletter