For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவர்களது கால் பாதுகாப்பு குறித்து கவனத்தில் கொள்ளவேண்டியவை!!!

By John
|

சர்க்கரை நோய் என கூறப்படும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் அவர்களது கால்கள் மீது அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். பொதுவாகவே, சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு காயங்கள் எளிதில் குணமாகாது. அதிலும் கால் பகுதிகளில் ஏற்படும் காயங்கள் மிகுதியான பாதிப்பும், வலியும் ஏற்படுத்தக் கூடியதாய் இருக்கும்.

நிம்மதியைக் குலைக்கும் நீரிழிவைக் கட்டுப்படுத்த சில வழிகள்!!!

நீங்களே அறிந்திருக்கலாம், சர்க்கரை நோய் காரணமாக காலை இழந்தவர்கள் பல பேர் இருக்கின்றனர். எனவே, தான் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்களிடம் அவர்களது கால்களை பத்திரமாக பார்த்துக்கொள்ள கூறுகின்றனர். இனி, சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவர்களது கால் பாதுகாப்பு குறித்து கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய குறிப்புகள் பற்றிப் பார்க்கலாம்...

நீரிழிவு நோயின் வழக்கத்திற்கு மாறான அறிகுறிகள் - அவசியம் தெரிந்துக்கொள்ள வேண்டியது!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெறும் காலில் செல்லக்கூடாது

வெறும் காலில் செல்லக்கூடாது

சர்க்கரை நோய் உள்ளவர்கள் செருப்பு அல்லது ஷூ அணியாமல் எங்கும் செல்லக்கூடாது. வெறும் கால்களில் கோயில்களுக்கு நடந்து செல்வது, பாதை யாத்திரை செல்வது போன்றவற்றை தவிர்க்கவும்.

வீட்டுக்குள்ளே காலணிகள் அவசியம்

வீட்டுக்குள்ளே காலணிகள் அவசியம்

முக்கியமாக, வீட்டுக்குள்ளே இருந்தாலும் கூட, தனியாக காலணிகள் பயன்படுத்தி நடப்பது பாதுகாப்பானதாக இருக்கும்.

லெதர் செருப்புகள் தவிர்க்கவும்

லெதர் செருப்புகள் தவிர்க்கவும்

லெதர் பொருளில் தயாரிக்கப்பட்ட செருப்பு, ஷூ முதலியவை செருப்புக்கடி எனும் புண் ஏற்படக் காரணமாக இருக்கும். எனவே, ரப்பர் செருப்புகள், மென்மையான காலணிகள் பயன்படுத்துவது சிறந்தது.

சுயபரிசோதனை

சுயபரிசோதனை

காலையும், இரவு வேளைகளிலும் நீங்களே உங்கள் கால்களை சரிப் பார்த்து, ஏதேனும் புண் அல்லது கொப்பளங்கள் உண்டாகியிருக்கிறதா என்று பாருங்கள். அப்படி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். ஏனெனில், சர்க்கரை நோயாளிகளுக்கு புண் மிக விரைவாக பரவ ஆரம்பித்துவிடும்.

சீழ் பிடிக்கும் அபாயம்

சீழ் பிடிக்கும் அபாயம்

ஓரிரு நாட்கள் தாமதித்தால் கூட சீழ் பிடிக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. அதுமட்டும் இல்லாமல் இது மிக விரைவாக கால் முழுதும் பரவி உடலையும் தாக்கும் அபாயமும் இருக்கின்றது.

அறிகுறிகள்

அறிகுறிகள்

கால்களில் வீக்கம், காரணமில்லாமல் காய்ச்சல் ஏற்படுவது, இடுப்பு பகுதிகளில் நெரி கட்டுதல் போன்ற அறிகுறிகள், உங்கள் கால்களில் பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை சொல்லும் எச்சரிக்கை மணி.

அபாயப் பிரச்சனைகள்

அபாயப் பிரச்சனைகள்

கால்களில் வெடிப்பு, காப்பு காய்த்தல், காலில் ஆணி போன்ற கால் பாதிப்புகள் மிகவும் ஆபத்தானவை என சர்க்கரை நோய் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நகங்கள்

நகங்கள்

கால்களில் நகங்களை மிகவும் சதையோடு நெருக்கி வெட்ட வேண்டாம்,. இதனால், விரல் நகம் ஒட்டியுள்ள சதை பகுதியில் புண் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Important Tips To Take Care On Legs For Diabetes Patients

Every diabetes patients should know about this important tips to take care on their legs.
Desktop Bottom Promotion