Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
பச்சை நிற ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
"தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், எந்த நோயும் அண்டாது", என்று வழக்கத்தில் சொல்லுவதுண்டு. அது நிச்சயமாக பச்சை ஆப்பிளுக்குக் கூட உண்மையாகின்றது. இயற்கை தாய் நமக்கு வழங்கிய மிகவும் அற்புதமான பழங்களில் ஒன்று தான் ஆப்பிள். ஆப்பிள்களில், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைய இருப்பதால், ஒவ்வொருவரும் அன்றாட உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆப்பிள்கள் என்று வரும் போது, பல்வேறு வகையான ஆப்பிள்கள் உள்ளன. சிவப்பு வகை ஆப்பிள்கள் மிகவும் பொதுவாக காணப்படுகின்றன மற்றும் பச்சை நிற ஆப்பிள்கள் புளிப்பாக இருந்தாலும், சுவைப்பதற்கு இனிமையாக இருக்கும்.
பச்சை ஆப்பிள் தான் நீண்ட காலமாக ஆரோக்கியமான பழங்களில் ஒன்றாக அங்கீகாரம் பெற்றுள்ளது. இந்த பழத்தில் தான் இயல்பாகவே பல்வேறு வகையான புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துகள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஆகவே இப்போது அந்த பச்சை ஆப்பிளை சாப்பிடுவதால், கிடைக்கும் உடல்நல நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

உயர் நார்ச்சத்துக்களை கொண்டுள்ளது
பச்சை ஆப்பிளில் நிறைய நார்ச்சத்துக்கள் இருப்பதால், குடலை சுத்தம் செய்வதிலும் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தினை அதிகரிக்கவும் செய்கிறது. எனவே இது தடையற்ற குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. அதனால் தான் தோலுடன் ஆப்பிளை சாப்பிடுங்கள் என்று எப்போதும் மருத்துவர்கள் சொல்கிறார்கள். மேலும் குடல்கள் மற்றும் இதர அமைப்புகள் எந்த அளவில் சுத்தமாக இருக்கின்றனவோ, அந்த அளவில் நீங்கள் மகிழ்ச்சியாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.

கனிம உள்ளடக்கம்
பச்சை ஆப்பிள்கள் ஏராளமான தாதுக்களை கொண்டுள்ளது. தாதுப்பொருட்களான இரும்புச்சத்து, துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு, பொட்டாசியம் முதலிய சத்துக்கள் மனித சுகாதாரத்திற்கு வேண்டுவன ஆகும். அதிலும் ஆப்பிள்களில் இருக்கும் நுண்ணூட்டச் சத்தான இரும்புச்சத்து இரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவை உயர்த்த உதவுகிறது.

இதயத்திற்கு ஆரோக்கியமானது
எடையை குறைக்க முயலுபவர்களுக்கு பச்சை ஆப்பிள் ஒரு சிறந்த உணவாக இருக்கிறது. அதிலும் அத்தகையவர்கள் ஒவ்வொரு நாளும் உணவில் ஒரு ஆப்பிளை சேர்க்க வேண்டும். மேலும் இது இரத்த நாளங்களில் கொழுப்பு சேகரிப்பதை தடுத்து, இதயத்திற்கு சரியான இரத்த ஓட்டத்தைப் பராமரிக்க உதவுகிறது.

சரும புற்றுநோயை தடுக்கிறது
பச்சை ஆப்பிளில் வைட்டமின் சி நிறைந்து காணப்படுவதால், இது கட்டற்ற தீவிர மூலக்கூறுகளால் சரும செல்களுக்கு எதிராக ஏற்படும் சேதத்தை தடுக்க உதவுகிறது. இதனால் சரும புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகளை குறைகிறது.

எதிர் ஆக்ஸிகரணிகள் நிறைந்தவை
பச்சை ஆப்பிள்களில் எதிர் ஆக்ஸிகரணிகள் நிறைந்து இருப்பதால், இது செல்கள் மீண்டும் உற்பத்தியாவதற்கும் மற்றும் செல்களுக்கு புத்துயிர் கொடுப்பதற்கும் முடிகிறது. மேலும் இது ஆரோக்கியமான மற்றும் ஒளிரும் சரும பராமரிப்புக்கும் உதவுகிறது. மேலும் இதிலிருக்கும் எதிர் ஆக்ஸிகரணிகளால் கல்லீரல் பாதுகாக்கப்பட்டு, அதன் சரியான செயல்பாட்டுக்கும் உறுதி செய்கிறது.

ஆரோக்கியமான வலுவான எலும்புகள்
பச்சை ஆப்பிள்கள் தைராய்டு சுரப்பியை சரியான செயல்பாட்டில் இருக்க உதவி செய்வதால், அது வாத நோய் ஏற்படுவதைத் தடுக்கிறது.

அல்சைமர் நோய் (நினைவாற்றலிழப்பு)
ஒவ்வொரு நாளும் ஒரு ஆப்பிள் உட்கொண்டால், அல்சைமர் என்னும் நினைவாற்றலிழப்பு நோய் ஏற்படும் வாய்ப்புகளை தடுக்கலாம்.

ஆஸ்துமாவைத் தடுக்கிறது
வழக்கமாக ஆப்பிள் பழச்சாற்றை குடிப்பதால், மிக நுண்ணிய உணர்வு நிலை ஒவ்வாமை நோயான ஆஸ்துமா ஏற்படும் வாய்ப்பைத் தடுக்க முடியும்.

நீரிழிவு நோயைத் தடுக்கிறது
ஆப்பிள்கள் நீரிழிவு நோயை தடுக்கிறது. அதனால் நீரிழிவு நோயாளிகள் தினமும் ஆப்பிள் உண்பதென்பது அவசியமாகிறது.

வைட்டமின் ஏ, பி மற்றும் சி நிறைந்தவையாகும்
பச்சை ஆப்பிள்களில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி நிறைந்துக் காணப்படுவதால், இது கட்டற்ற தீவிர மூலகூறுகளால் சரும செல்களுக்கு எதிராக ஏற்படும் சேதத்தை தடுக்க உதவுவதோடு, இது சருமத்தை பிரகாசிக்கவும் உதவுகிறது.

பச்சை ஆப்பிளின் அழகு நன்மைகள்
பச்சை ஆப்பிள் ஒரு சிறந்த அழகு மேம்படுத்தியாக உள்ளது. சரும பராமரிப்பு மற்றும் முடி பராமரிப்பு போன்ற நிறைய நன்மைகள் பச்சை ஆப்பிள்களுடன் தொடர்புள்ளது.

முதுமையைத் தடுக்கும்
பச்சை ஆப்பிள்கள் மூப்படைதலுக்கு எதிரான ஒரு சிறந்த மூலப்பொருளாக உள்ளது. இந்த ஆப்பிளில் எதிர் ஆக்ஸிகரணிகள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துக் காணப்படுவதால், தோலின் நெகிழ்வு திறன் மற்றும் நீண்ட நாட்கள் இளமையாக இருக்க செய்கிறது.

சரும சுருக்கத்தை தடுக்கிறது
பச்சை ஆப்பிள்களை தினமும் உட்கொள்வதால், அது சருமத்தை ஆழமாக ஈரப்பதமூட்டப்பட்டு மற்றும் சருமத்தின் ஒட்டுமொத்த திசு அமைப்பை மேம்படுத்தி, சுருக்கங்கள் ஏற்படுவதை நீக்க உதவி செய்கிறது.

வெள்ளையான சருமம்
பச்சை ஆப்பிளில் உள்ள அதிகமான வைட்டமின்கள், சருமத்தை பராமரிக்க உதவுகிறது. மேலும் இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால், இது சருமத்தின் நிறத்தை வெண்மையாக்குகிறது.

சரும நோய்களை தடுக்கிறது
பச்சை ஆப்பிளானது அத்தியாவசிய வைட்டமின்களின் பற்றாக்குறையால் ஏற்படும் பல்வேறு சரும நோய்களைத் தடுக்க உதவுகிறது.

முகப்பரு
பச்சை ஆப்பிள்கள் முகப்பருவிற்கு எதிரான சிகிச்சையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அதிலும் பச்சை ஆப்பிள்களை வழக்கமாக உண்பதால், பருக்கள் வெடிப்பதை கட்டுப்படுத்துவதோடு, பருக்கள் வருவதைத் தடுக்க உதவுகிறது.

கருவளையம்
குறிப்பாக பச்சை ஆப்பிள் கண்ணைச் சுற்றி ஏற்படும் கருவளையங்களை நீக்கி, கண்களுக்கு புத்துணர்ச்சி அளிக்க உதவுகிறது.

பச்சை ஆப்பிளால் கூந்தலுக்கு கிடைக்கும் நன்மைகள்
பச்சை ஆப்பிள்களால் சருமத்திற்கு நன்மை ஏற்படுவது போலவே, கூந்தலுக்கும் பல்வேறு நன்மைகளைச் செய்கிறது.

பொடுகை நீக்கும்
பச்சை ஆப்பிள்களின் இலைகள் மற்றும் தோல்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு பேஸ்ட்டை பொடுகு நீக்க பயன்படுத்தும் போது, அதிசயக்கத்தக்க விளைவுகளை கொடுக்கிறது. அதிலும் இந்த பேஸ்ட்டை ஷாம்புவை பயன்படுத்துவது போன்றே பயன்படுத்த வேண்டும். மேலும் பச்சை ஆப்பிள் பழத்தின் சாற்றை உச்சந்தலையில், தொடர்ந்து மசாஜ் செய்தாலும், அதே விளைவுகளைக் கொடுக்கிறது.

முடி உதிர்தல்
பச்சை ஆப்பிள்கள் முடிகளை வலுப்படுத்தி, முடியின் வளர்ச்சியை அதிகரித்து மற்றும் முடி உதிர்தலைத் தடுக்க உதவுவதால், இதனை தினமும் தவறாமல் உட்கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications











