For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீரிழிவு நோயின் வழக்கத்திற்கு மாறான அறிகுறிகள் - அவசியம் தெரிந்துக்கொள்ள வேண்டியது!!!

By John
|

பொதுவாக நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள் என்று, அதிக பசி எடுப்பது, உடல் சோர்வு ஏற்படுவது, நாவறட்சி ஏற்படுவது, நிறைய சிறுநீர் வெளியேறுவது என்று பலவன கூறப்படுகையில். இது மட்டுமல்லாது, இன்னும் சில வழக்கத்திற்கு மாறாக ஏற்படும் அறிகுறிகள் இருக்கின்றன என்று கூறப்படுகிறது.

இந்த அறிகுறிகளை வைத்து விரைவாக உங்களுக்கு நீரிழிவு நோய் தாக்கம் ஏற்பட்டிருக்கிறதா? இல்லையா? என்று நீங்களே கண்டறிந்துவிடலாம் என்றும் கூறுப்படுகிறது. இனி, நீரிழிவு நோயின் வழக்கத்திற்கு மாறான அறிகுறிகள் என்னென்னவென்று தெரிந்துக் கொள்ளலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிறுநீரில் மாற்றம் ஏற்படுதல்

சிறுநீரில் மாற்றம் ஏற்படுதல்

நீங்கள் சிறுநீர் சென்று வந்த பிறகு கழிவறை பகுதியில் எறும்புகள் அதிகமாக வந்தால், உங்கள் உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்து இருக்கிறது என்பதற்கான அறிகுறியாம். இதை வைத்து நீங்கள் முன்னவே நீரிழிவு நோய் குறித்த பரிசோதனை செய்துக் கொள்ளலாம்.

களைப்பு

களைப்பு

அதிக வேலைபாடுகள் அல்லது தூக்கமின்மை என எந்த காரணமும் இன்றி நீங்கள் களைப்பாக உணர்வதும் கூட நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள் தானாம். தொடர்ந்து இதுபோல எந்த காரணமும் இன்றி களைப்பு ஏற்பட்டால் மருத்துவரை அணுக மறக்க வேண்டாம்.

காலில் தசைப்பிடிப்பு

காலில் தசைப்பிடிப்பு

நீரிழிவு நோய் ஏற்பட்டால், காயம் சரி ஆக நீண்ட நாள் எடுத்துக்கொள்ளும். அதே போல நீரிழிவு நோய் ஏற்பட்டால், அடிக்கடி காலில் தசைப்பிடிப்பு ஏற்படும் என்றும் புதியதாக கூறுகின்றனர். இது, அதிகப்படியான இரத்த சர்க்கரையின் காரணமாக ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது.

பசியின்மை

பசியின்மை

அதிகமாக பசி எடுப்பதை போலவே, பசியின்மையும் நீரிழிவு நோய்க்கான ஓர் அறிகுறியாம்.

புடைத்த கண்கள்

புடைத்த கண்கள்

இராத்திரி மூக்குமுட்ட குடித்தால் மட்டுமல்ல நீரிழிவு நோய் தாக்கம் ஏற்பட்டாலும் கண்கள் புடைத்தது போன்று காட்சியளிக்கும் என்று கூறுகின்றனர். எனவே, இது போன்ற அறிகுறிகளும் உங்களுக்கு அடிக்கடி ஏற்பட்டால் மறக்காமல் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Five Unusual Signs Of Diabetes You Should Watch Out For

Do you know about Five Unusual Signs Of Diabetes? read here
Story first published: Tuesday, May 26, 2015, 17:27 [IST]
Desktop Bottom Promotion