தினமும் தேனுடன் எள் சேர்த்து உட்கொண்டு வந்தால் பெறும் நன்மைகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

தேன் மிகவும் அற்புதமான மருத்துவ குணம் நிறைந்த பொருள். தேனைக் கொண்டு பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். அந்த அளவில் தேன் தன்னுள்ளே நிறைய சத்துக்களை உள்ளடக்கியுள்ளது. தேனைப் போலவே எள்ளும் ஆரோக்கியமான ஓர் உணவுப் பொருள் தான். இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து தினமும் உட்கொண்டு வந்தால், நிறைய ஆரோக்கிய பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம்.

அப்படி என்ன நன்மை இதிலிருந்து கிடைக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். மேலும் இவற்றை உட்கொள்வதால் பெறும் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொண்டால், நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். சரி, இப்போது தேன் மற்றும் எள்ளை ஒன்றாக கலந்து தினமும் உட்கொண்டு வந்தால் பெறும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு நல்லது

நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு நல்லது

தேன் மற்றும் எள்ளை ஒன்றாக கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும். மேலும் இந்த கலவையை தினமும் உட்கொள்ளும் போது உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களின் வளர்ச்சி தடுக்கப்படும்.

எடையைக் குறைக்க உதவும்

எடையைக் குறைக்க உதவும்

இக்கலவையை தினமும் உட்கொண்டு வரும் போது, அதில் உள்ள தேன் மற்ற இனிப்பு உணவுகளின் மீதுள்ள நாட்டத்தைக் குறைத்து, உடல் எடையைக் குறைக்க உதவும். அதுமட்டுமின்றி, வாய் ஆரோக்கியமும் மேம்படும்.

மாதவிடாய் வலி தடுக்கப்படும்

மாதவிடாய் வலி தடுக்கப்படும்

பெண்கள் தேன் மற்றும் எள்ளை கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், மாதவிடாய் சுழற்சியின் போது ஏற்படும் அடிவயிற்று வலியைத் தடுக்கலாம். மேலும் எள்ளில் உள்ள இரும்புச்சத்து, உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும்.

வயிற்றுப் புண்

வயிற்றுப் புண்

உங்கள் வயிற்றில் புண் இருந்தால், தினமும் எள்ளையும் தேனையும் ஒன்றாக கலந்து உட்கொண்டு வாருங்கள். இதனால் தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் வயிற்றுச் சுவரைப் பாதுகாக்கும் மற்றும் எள் வயிற்றில் உள்ள புண் குணமாக உதவும்.

எலும்புகளின் ஆரோக்கியம்

எலும்புகளின் ஆரோக்கியம்

எள் மற்றும் தேனில் கால்சியம் அதிகம் உள்ளதால், இவற்றை உட்கொண்டு வர, எலும்புகளின் ஆரோக்கியம் அதிகரிக்கும். அதிலும் தினமும் உட்கொண்டு வந்தால், வயதான காலத்தில் எலும்புகளில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

மூளைக்கான சிறந்த உணவு

மூளைக்கான சிறந்த உணவு

தேன் மற்றும் எள் கலவை மூளைக்கு ஆற்றலை வழங்கி, சிறப்பான செயல்பட உதவும். அதிலும் படிக்கும் குழந்தைகளுக்கு இதனைக் கொடுப்பது மிகவும் நல்லது.

ஆற்றலை வழங்கும்

ஆற்றலை வழங்கும்

எள் மற்றும் தேன், உடலுக்கு ஆற்றலை ஏராளமாக அள்ளி வழங்கும். அத்தகைய பொருட்களை ஒன்றாக கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், ஒரு நாளுக்கு வேண்டிய ஆற்றல் கிடைத்து, சுறுசுறுப்புடன் நாள் முழுவதும் செயல்படலாம்.

கொலஸ்ட்ரால் குறையும்

கொலஸ்ட்ரால் குறையும்

கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள், எள் மற்றும் தேனை ஒன்றாக கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், அதிகப்படியான கொலஸ்ட்ரால் குறைக்கப்படும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது

நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது

சர்க்கரை நோய் உள்ளவர்கள் அன்றாடம் எள்ளை உட்கொள்வது நல்லது. அதிலும் அந்த எள்ளை தேனுடன் கலந்து உட்கொண்டு வந்தால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.

சிறுநீரகங்களுக்கு நல்லது

சிறுநீரகங்களுக்கு நல்லது

தேன் மற்றும் எள் கலவையை தினமும் உட்கொண்டு வருபவர்களுக்கு, சிறுநீரக கல் உருவாவது தடுக்கப்படும். ஏனெனில் இந்த இரண்டு பொருட்களுமே சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுப் பொருட்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Do You Know Why Honey & Sesame Seeds Are Healthy?

When honey and sesame seeds are combined, they provide 10 health benefits. Here are some reasons why you should add this healthy sweet treat to your diet.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter