பழங்கள் உடல் எடையை அதிகரிக்குமா..?

Posted By:
Subscribe to Boldsky

டயட்டில் இருக்கும் பலர் உடல் எடையை குறைக்க பழங்களை அதிகம் சாப்பிடுவார்கள். இருப்பினும் உடல் எடை குறைந்த பாடில்லை. எனவே பலருக்கு பழங்கள் உண்மையில் உடல் எடையைக் குறைக்குமா அல்லது அதிகரிக்குமா என்ற எண்ணம் எழும். பழங்களில் இயற்கை சர்க்கரை அதிகம் இருக்கிறது. இத்தகைய சர்க்கரையை சரியாக கவனிக்காமல் இருந்தால், சர்க்கரையானது கொழுப்புக்களாக மாறிவிடும்.

பழங்களில் உள்ள இயற்கை சர்க்கரைகளானது இரத்தத்தில் உள்ள சர்க்கரையை அளவை அதிகரிக்காது. சரி, அதற்காக பழங்களை சாப்பிடலாமா? இங்கு பழங்களை சாப்பிடுவதால், உடல் எடை குறையுமா அல்லது அதிகரிக்குமா என்று கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கலோரிகள் குறைவாகவும், ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளது

கலோரிகள் குறைவாகவும், ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளது

பழங்களில் கொழுப்புக்கள் குறைவாகவும், நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகமாகவும் மற்றும் கலோரிகள் குறைவாகவும் உள்ளது. அதனால் தான் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் பழங்களை சாப்பிட சொல்கின்றனர். மேலும் பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதோடு, உடலுக்கு வேண்டிய ஆற்றலும் கிடைக்கும்.

இயற்கை சர்க்கரை

இயற்கை சர்க்கரை

பழங்களில் உள்ள இயற்கை சர்க்கரை தான் புருக்டோஸ். இது உடலினுள் செல்லும் போது, சுக்ரோஸ் மற்றும் கிளைகோஜெனான மாற்றப்படும். சுக்ரோஸ் என்பது பதப்படுத்தப்பட்ட சர்க்கரையை விட 1 1/2 மடங்கு அதிக இனிப்பாக இருக்கும். மேலும் இது மெதுவாக உடலால் உறிஞ்சப்படும். எனவே பழங்களை சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது.

எடையை அதிகரிக்கும் பழங்கள்

எடையை அதிகரிக்கும் பழங்கள்

சில பழங்களில் கலோரிகள் அதிகமாக இருக்கும். அதிலும் சிறிய வாழைப்பழத்தில் 105 கலோரிகளும், ஒரு கப் ஸ்ட்ராபெர்ரியில் 46 கலோரிகளும் உள்ளது. எனவே இவற்றை உட்கொண்டு வரும் போது, உடற்பயிற்சிகளை செய்யாவிட்டால், உடல் எடை அதிகரிக்கக்கூடும்.

நோயாளிகள் கவனமாக இருக்கவும்

நோயாளிகள் கவனமாக இருக்கவும்

மருந்துகளை எடுத்து வரும் நோயாளிகள், சில பழங்களை சாப்பிடும் போது கவனமாக இருக்க வேண்டும். அதிலும் நீரிழிவு நோயாளிகள் பழங்களை சாப்பிடும் போது கவனமாக இருக்க வேண்டும். அதிலும் வாழைப்பழம், திராட்சை மற்றும் மாம்பழம் போன்றவற்றில் சர்க்கரை அதிகம் இருப்பதால், இவற்றை தவிர்க்க வேண்டும். அதுமட்டுமின்றி, தர்பூசணி, உலர் திராட்சை போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவற்றில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிக அளவில் உள்ளது.

எடை குறைய...

எடை குறைய...

பழங்களை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு வந்தால், அது உடல் எடையைத் தான் அதிகரிக்கும். பெரும்பாலான நேரங்களில் பழங்களை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக, அதனை ஜூஸ் அல்லது இனிப்பு பண்டங்களில் சேர்த்தோ உட்கொள்ள சொல்வார்கள். ஏனெனில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை உள்ள பழங்களை அதிகம் உட்கொள்ளும் போது, அவை தொப்பையை அதிகரித்து, உடலின் மெட்டபாலிசத்தைக் குறைத்துவிடும். உடலின் மெட்டபாலிசம் குறைந்தால், அது உடல் பருமனை ஏற்படுத்திவிடும். எனவே எடையை குறைக்க நினைப்போர் உலர் திராட்சை, பேரிச்சை போன்றவற்றை அதிக அளவில் உட்கொள்ளக்கூடாது.

காய்கறிகள் சிறந்தது

காய்கறிகள் சிறந்தது

எடையை குறைக்க நினைப்போர் பழங்களை சாப்பிடுவதற்கு பதிலாக, காய்கறிகளை சாப்பிடுவது மிகவும் நல்லது. பழங்களை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் தான் உடல் எடை அதிகரிக்கும். ஆனால் காய்கறிகளை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்பில்லை. எனவே எடையைக் குறைக்க நினைப்போர் பழங்களுக்கு, பதிலாக காய்கறிகளை தேர்ந்தெடுப்பது நல்லது.

நீர்ச்சத்துள்ள பழங்கள்

நீர்ச்சத்துள்ள பழங்கள்

பழங்களில் தர்பூசணி, முலாம் பழம் போன்றவற்றில் நீர்ச்சத்து அதிகமாகவும், ஆரஞ்சு, பப்பளிமாஸ் போன்றவற்றில் சிட்ரஸும் உள்ளது. மேலும் இவற்றில் மற்ற பழங்களுடன் ஒப்பிடுகையில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளது.

அடர் வண்ண பழங்கள்

அடர் வண்ண பழங்கள்

அடர் வண்ணமிக்க பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், அவை உடல் எடையைக் குறைக்க உதவுவதாக கருதப்படுகிறது. அதே சமயம் அவை செரிமானமாவதற்கு சற்று நேரம் எடுத்துக் கொள்வதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமலும் தடுக்கும்.

பழச்சாறுகள்

பழச்சாறுகள்

பழச்சாறுகளில் என்ன தான் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் இருந்தாலும், பழங்களுடன் ஒப்பிடுகையில் நார்ச்சத்துக்கள் குறைவாகவே இருக்கும். பலரும் நினைக்கலாம், ஒரு டம்ளர் ஜூஸில் 5-8 பழங்கள் வரை சேர்த்து செய்வதால், இதில் நிறைய சத்துக்கள் உள்ளன. ஆனால் இதில் சுவைக்காக சர்க்கரை சேர்த்தால், அது ஆரோக்கியத்தை கொடுப்பதற்கு பதிலாக, தீங்கு தான் விளைவிக்கும்.

பிரஷ் பழங்கள் தான் பெஸ்ட்

பிரஷ் பழங்கள் தான் பெஸ்ட்

பழங்களை பிரஷ்ஷாக சாப்பிடுவது தான் சிறந்தது. அதுமட்டுமின்றி, பழங்கள் எவ்வளவு தான் ஆரோக்கியமான ஒன்றாக இருந்தாலும், உடல் எடையைக் குறைக்க நினைப்போர் இதனை அளவுக்கு அதிகமாக உட்கொண்டு வந்தால், அது எடையைக் குறைப்பதற்கு பதிலாக எடையை அதிகரிக்கும். ஆகவே பழங்களை அளவாக உட்கொண்டு எடையைக் குறையுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Can Eating Fruits Lead To Weight Gain?

Can eating fruit cause weight gain? Here's a post that well educates you about fruits and their role played in case of weight gain & loss.
Story first published: Friday, March 6, 2015, 16:05 [IST]