Latest Updates
-
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்.. -
இந்தியாவிலுள்ள இந்த கிராமத்திற்குள் இந்தியர்களே நுழையக்கூடாதாம் - இது எந்த நாட்டுக்கு சொந்தம் தெரியுமா? -
ஜூன் 22-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியுடன், லாபமும் கிடைக்கும்.. -
பீன்ஸை பட்டாணியுடன் சேர்த்து இந்த மாதிரி பொரியல் பண்ணுங்க - பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க
இயற்கை தந்த வரப்பிரசாதமான வெற்றிலையின் அற்புத மருத்துவ குணங்கள்!!!
வெற்றிலை மருத்துவ குணம் கொண்ட தாவரம். மேலும் இது மிகவும் பயன்தரக்கூடியது. இதன் அனைத்து பாகங்களும் கிருமிநாசினியாக செயல்படுகின்றன. இது பெரும்பாலும் மூக்கில் இரத்தம் ஒழுகுதல், சிவந்த கண்கள், வெள்ளைப்படுதல், உரத்தக்குரல் மற்றும் விறைப்பு செயல் பிறழ்ச்சி போன்றவைகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுகின்றது.
எட்டே வாரங்களில் எடையில் மாற்றம் தெரிய வேண்டுமா? அப்ப வெற்றிலை போடுங்க...
வெற்றிலையானது பயன் தரும் மருத்துவத் தாவரமாக நூற்றாண்டுகளாக நம் முன்னோர்களால் அறியப்பட்டு வருகின்றது. மருத்துவத் தாவரமாக மட்டுமின்றி இந்தோனேசியாவின் சிலப்பகுதிகளில் நடைபெறும் வழக்கமான நிகழ்வுகளில் ஒரு சிறப்பான இடத்தையும் பெற்றுள்ளது.
வெற்றிலையினால் கிடைக்கும் உடல்நல நன்மைகள்!!!
பல நோய்களைக் குணப்படுத்த உதவும் வெற்றிலையை எப்படி பயன்படுத்தினால், நோய்களை விரைவில் குணமாக்கலாம் என்று இங்கே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

இருமல்
15 வெற்றிலைகள் மற்றும் 3 டம்ளர் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். வெற்றிலையை நன்றாக அலசி நீருடன் சேர்த்து கொதிக்க விட வேண்டும். இதனை தேன் சேர்த்து அருந்தலாம்.

மூச்சுக்குழாய் அழற்சி
7 வெற்றிலையை கற்கண்டு கொண்டு நன்றாக சுத்தம் செய்து இரண்டு கப் தண்ணீர் சேர்த்து, ஒரு டம்ளர் ஆக வற்றும் வரை கொதிக்க விட வேண்டும். இதனை தினமும் மூன்று வேளை எடுத்துக் கொள்ளவும்.

உடல் நாற்றத்தை அகற்ற
5 வெற்றிலையை எடுத்துக் கொண்டு இரண்டு கப் நீரில் கொதிக்க விட வேண்டும். ஒரு குவளை அளவாக அதனை வற்ற விட வேண்டும். அதனை மதிய வேளையில் குடித்து வரவும்.

தீப்புண்
சிறிதளவு வெற்றிலையை எடுத்து, அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதனை நன்றாக கசக்கி சாறு எடுத்து அதனுடன் சிறிது தேன் சேர்த்து, தீப் புண் பட்ட இடத்தில் போட வேண்டும்.

மூக்கில் இரத்தம் வடிதல்
கொழுந்து வெற்றிலையை எடுத்துக் கொண்டு நன்றாக கசக்கி சுருட்டி, மூக்கில் வைத்தால், மூக்கிலிருந்து இரத்தம் வருவது தடுக்கப்படும்.

அல்சர்
சிறிதளவு வெற்றிலையை எடுத்து சுத்தம் செய்து கொள்ளவும். அதனை நீரில் போட்டு கொதிக்க வைக்கும் போது சட்டியை சுற்றி உருவாகும் சிறிய வெற்றிலை துண்டுகளை எடுத்து, உருண்டைகளாக்கி தினமும் இரு முறை உட்கொண்டு வரவும்.

கண் நமைச்சல் மற்றும் சிவந்த கண்
5-6 நற்பதமான, கொழுந்து வெற்றிலைகளை எடுத்துக் கொண்டு, அதனை ஒரு டம்ளர் நீரில் நன்கு கொதிக்க வைக்கவும். பின் ஆறியவுடன் அந்த நீரைக் கொண்டு தினமும் மூன்று முறை என குணமாகும் வரைக் கண்களைக் கழுவி வர வேண்டும்.

புண் மற்றும் நமைச்சல்
20 வெற்றிலையை எடுத்துக் கொண்டு நீரில் நன்கு கொதிக்க வைக்கவும். அந்த நீரை வெதுவெதுப்பாக புண் மற்றும் நமைச்சல் உள்ள இடங்களில் ஊற்றிக் கழுவவும்.

ஈறுகளில் இரத்தத்தை நிறுத்துதல்
நான்கு வெற்றிலையை இரண்டு கப் நீரில் நன்கு கொதிக்க வைக்கவும். அந்த நீரை வாயைக் கொப்பளிப்பதற்குப் பயன்படுத்தவும்.

சீத பேதி
1-2 வெற்றிலையை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். அதனை வாயில் போட்டு நன்றாக சாறு வரும் வரை மென்று சாற்றினை விழுங்கி, பின் சக்கையை துப்பி விடவும்.

வாய் துர்நாற்றத்தை நீக்க
2-4 வெற்றிலையை எடுத்துக் கொண்டு நன்றாக சுத்தம் செய்து சாறு எடுத்துக் கொள்ளவும். பின் அதனை சூடான நீருடன் வாயைக் கொப்பளிக்கப் பயன்படுத்தவும்.

முகப்பரு
7-10 வெற்றிலையை எடுத்துக் கொண்டு நன்றாக சுத்தம் செய்து அதனை அரைத்து வைத்துக் கொள்ளவும். அதனை சூடான நீருடன் சேர்த்து ஒரு நாளைக்கு இரு முறை முகம் கழுவவும்.

வெள்ளைப்படுதல்
2.5 லிட்டர் நீரில் சுத்தம் செய்த 10 வெற்றிலையை கொதிக்க வைக்கவும். கொதிக்க வைத்த நீரை பயன்படுத்தி வெதுவெதுப்பான சூட்டில் பிறப்புறுப்பை சுத்தம் செய்யவும்.

தாய்ப்பால் அதிகரிப்பைக் குறைத்தல்
சில வெற்றிலையை எடுத்து கழுவிக் கொண்டு அதில் தேங்காய் எண்ணெய் தடவி தீயில் நன்றாக வாட்டவும். வெதுவெதுப்பான நிலையில் மார்பகங்களில் உள்ள வீக்கங்களில் வைத்து ஒற்றி எடுக்கவும். இதனால் தாய்ப்பால் அதிகமாக சுரப்பது தடுக்கப்படும்.



Click it and Unblock the Notifications