ஆயுர்வேதத்தில் உள்ள கோமியம் தெரபி பற்றி உங்களுக்குத் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

கோமாதாவான பசு மாட்டின் கோமியத்தை வீட்டில் தெளித்தால், வீட்டில் உள்ள கிருமிகள் மற்றும் தீய சக்திகள் அகலும் என்று நம் முன்னோர்கள் சொல்வதைக் கேட்டு, இன்று வரை பலரும் வீட்டில் ஏதேனும் விஷேசம் என்றால் கோமியத்தை தெளிப்போம். உடல் எடையைக் குறைக்க உதவும் ஆயுர்வேத டீ!

ஆனால் அதே கோமியம் ஆயுர்வேத சிகிச்சையில் முக்கியப் பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது தெரியுமா? அதுவும் இந்த கோமியத்தைக் கொண்டு பல ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கப்படுகிறது என்பது தெரியுமா? பிறந்த மேனியில் யோகா செய்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!!

நிச்சயம், கட்டுரையின் தலைப்பைப் படித்ததுமே பலரும் ஆச்சரியப்படலாம் அல்லது முகத்தை சுளிக்கலாம். ஆனால் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பலரும் இன்னும் கோமிய தெரபியை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் ஆய்வு ஒன்றில், நீரிழிவு நோய் உள்ள எலிக்கு தினமும் 25 மிலி கோமியத்தைக் கொடுத்து வந்ததில், அந்த எலிக்கு இருந்த நீரிழிவு நோய் குணமாகியிருப்பது தெரிய வந்துள்ளது. ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வைத் தரும் ஆயுர்வேத ஜூஸ்கள்!!!

அதுமட்டுமின்றி, இந்த கோமியத்தைக் குடிப்பதால் இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இங்கு அந்த நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சத்துக்கள்

சத்துக்கள்

கோமியத்தில் வைட்டமின்களான ஏ, பி, சி, டி, ஈ போன்றவற்றுடன், தாது உப்புக்களும், நைட்ரஜன், சல்பர், பாஸ்பேட், சிலிகான், சோடியம், மாங்கனீசு, குளோரின், கால்சியம், மக்னீசியம், இரும்பச்சத்து போன்றவையும் அடங்கியுள்ளன.

கிருமிகள் அழிக்கப்படும்

கிருமிகள் அழிக்கப்படும்

பொதுவாக கோமியத்தில் சக்தி வாய்ந்த கிருமி நாசினி பொருள் உள்ளதால், இது பல்வேறு தீங்கு விளைவிக்கும் கொடிய கிருமிகளை அழித்துவிடும். அதிலும் அதனைக் குடித்தால், உடலினுள் உள்ள கேடு விளைவிக்கும் கிருமிகள் அழிக்கப்பட்டு, உடல் சுத்தமாகும்.

தோஷங்களை நீக்கும்

தோஷங்களை நீக்கும்

மனித உடலில் பித்தம், கபம், வாதம் என்னும் மூன்று தோஷங்கள் இருக்கும். இவை மூன்றும் சமநிலையில் இல்லாவிட்டால் தான், உடலில் பிரச்சனைகள் வரும். ஆனால் கோமியம் இவைகளை சமநிலையாக்கி, இதனால் உடலில் ஏற்பட்டபிரச்சனைகளைக் குணப்படுத்தும்.

ஆரோக்கியமான கல்லீரல்

ஆரோக்கியமான கல்லீரல்

கோமியம் கல்லீரலின் செயல்பாட்டினை சரிசெய்யும். அதுவும் கல்லீரல் சீராக செயல்பட்டு, இரத்தத்தை சுத்தமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் மாற்றி, நோய்களை எதிர்த்துப் போராடும் சக்தியை அதிகரிக்கும்.

மன அழுத்தம் குறையும்

மன அழுத்தம் குறையும்

ஒருவர் அதிக மன அழுத்தத்துடன் இருந்தால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, அதனால் மூளை மற்றும் இதயம் பாதிப்பிற்குள்ளாகும். ஆனால் கோமியமானது மன அழுத்தத்தைக் குறைத்து, மூளை மற்றும் இதயம் பாதிக்கப்படாமல் பாதுகாக்கும்.

நச்சுக்களை நீக்கும்

நச்சுக்களை நீக்கும்

இதுவரை உடலில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு அன்றாடம் ஒருசில மருந்து மாத்திரைகளை எடுத்து வந்திருப்போம். அப்படி தினமும் எடுத்து வரும் மருந்து மாத்திரைகளால், உடலில் நச்சுப் பொருட்கள் தேங்கி, ஒரு கட்டத்தில் நோய்களை உருவாக்கும். ஆனால் அந்த நச்சுப் பொருட்களை கோமியமானது வெளியேற்றி, உடலுக்கு பாதுகாப்பளிக்கும்.

முதுமையைத் தடுக்கும்

முதுமையைத் தடுக்கும்

நம் உடலில் இளமையைப் பாதுகாக்கும் சில நுண் ஊட்டச்சத்துக்கள் இருக்கும். ஆனால் அவை நம் சிறுநீரின் வழியே வெளியேற்றப்படுவதால், வயதாக ஆக நம் இளமைத்தன்மை குறைய ஆரம்பிக்கிறது. கோமியத்தில் அனைத்தும் இருப்பதால், அதனை எடுத்து வர உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, இளமைத்தன்மை தக்க வைக்கப்படும்.

சரும நோய்கள்

சரும நோய்கள்

சரும நோய்களான சொறி, சிரங்கு, படை போன்றவற்றால் கஷ்டப்படுபவர்கள், கோமியத்தை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வருவதன் மூலம் நிவாரணம் கிடைக்கும்.

கொழுப்புக்கள் குறையும்

கொழுப்புக்கள் குறையும்

உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புக்களை கரைப்பதில் கோமியம் சிறந்தது என்கின்றனர் நிபுணர்கள். மேலும் ஞாபக சக்தி அதிகரிப்பதாகவும் கூறுகின்றனர்.

செரிமானம் மேம்படும்

செரிமானம் மேம்படும்

செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் போன்றவற்றால் கஷ்டப்பட்டு வருபவர்களுக்கு கோமியம் நல்ல தீர்வை வழங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Benefits Of Cow Urine

Here are some benefits of cow urine. Read on to know...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter