Latest Updates
-
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க..
உடல் சூட்டை தணிக்கும் வெங்காயத்தின் அற்புதமான நலன்கள்!!!
வெங்காயம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வல்லமைக் கொண்டது. நோய் பரப்பும் கிருமிகளை உடலில் அண்டவிடாது. அதனால் தான் நமது முன்னோர்கள் வெங்காயத்தை அனைத்து உணவிலும் சேர்த்து வந்தனர்.
நாம் நல்லதை மொத்தமாய் ஒதுக்கிவிட்டு, தீயதை மட்டுமே சேர்த்துக் கொள்ளும் கலிகாலத்தில் வாழ்ந்து வருகிறோம். ஏதோ சம்பிரதாயத்திற்காக உணவில் வெங்காயத்தை சேர்த்துவிட்டு, சாப்பிடும் போது ஏதோ தீண்ட தகாததைப் போல ஒதுக்கிவிடுவோம்.
கூந்தல் அதிகமா கொட்டுதா? அப்ப வெங்காயத்தை யூஸ் பண்ணுங்க...
ஆனால், மேகி நூடுலேஸ் போன்றவற்றை ஒரு துளி கூட விட்டுவைக்காமல் உறுஞ்சி உண்ணுவோம். வெங்காயம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வல்லமைக் கொண்டது. நோய் பரப்பும் கிருமிகளை உடலில் அண்டவிடாது.
கல்லீரலின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் உணவுகள்!!!
அதனால் தான் நமது முன்னோர்கள் வெங்காயத்தை அனைத்து உணவிலும் சேர்த்து வந்தனர். ஏன், நீராகாரமான பழைய சோறுக்குக் கூட அதைக் கடித்துக்கொள்ள பயன்படுத்தினர். ஆனால் மிளகு, வெங்காயம் போன்ற சத்து வாய்ந்த உணவுகளை சாப்பாட்டில் ஒதுக்குவதே நமது பண்பாடாகிவிட்டது.
இனி, உடல் சூட்டை தணிக்கும் வெங்காயத்தின் அற்புதமான நலன்கள் குறித்துப் பார்க்கலாம்...

சிறுநீரை வெள்ளையாக்கும்
வெங்காயத்தை பச்சையாக வாயில் மென்று சாப்பிட்டு வந்தால், சிறுநீரை நன்கு வெள்ளையாக்கும்.

உடல் சூட்டை தணிக்கும்
உடல் சூட்டால் அவதிப்படுபவர்கள், வெங்காயத்தை நெய்விட்டு நன்கு வதக்கி சாப்பிட்டு வந்தால் உடல் சூடுக் குறையும்.

மயக்கம் தெளியும்
மயக்க உற்றிருப்பவர்களின் மூக்கில் வெங்காயச் சாற்றைப் பிழிந்துவிட்டால் மயக்கம் தெளியும்.

காது பிரச்சனைகள்
காது வலி, காதிரைச்சல், போன்ற நோய்களுக்கு வெங்காயச்சாற்றை ஓரிருத் துளிகள் காதில் விட்டால், சீக்கிரம் அந்த பிரச்சனைகளில் இருந்து தீர்வுக் காணலாம்.

மூலச்சூடு
பசு பாலால் எடுக்கப்பட்ட நெய்யில், வெங்காயத்தை வதக்கி சீரகமும், கற்கண்டும் தேவையான அளவு சேர்த்து, சாப்பிட்டு வந்தால் மூலச்சூடு தணியும்.

இதய நோய்கள்
வெங்காயத்தை உணவில் தினமும் சேர்த்து வந்தால், இதய நோய்களை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். பல வகையான தோல் நோய்களுக்கும் நல்ல மருந்தாக வெங்காயம் பயன்படுகிறது.

இரத்த சோகை
வெங்காயத்தைத் தினமும் உணவில் சேர்த்து வந்தால், இரத்த சோகை பிரச்சனையில் இருந்து நல்ல தீர்வுக் காணலாம்.

வாந்தி பேதி நிற்கும்
முப்பது கிராம் வெங்காயத்துடன் ஏழு மிளகும் சேர்த்து நன்கு அரைத்து உண்டு வர வாந்தி, பேதி நிற்கும். சிறிது சர்க்கரையும் சேர்த்துக்கொள்ளலாம்.

பல் பிரச்சனைகள்
பல் சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள், தினமும் பச்சை வெங்காயத்தை நன்கு மென்று சாப்பிட்டு வந்தால் பல் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து நல்ல தீர்வுக் காணலாம்.

வெங்காயத்தின் சத்துகள்
நூறு கிராம் வெங்காயத்தில், ஈரப்பதம் - 86.6% ; புரதம் - 1.2% ; கொழுப்புச்சத்து - 0.1% ; நார்ச்சத்து - 0.6% ; தாதுச்சத்து - 0.4% ; மாவு சத்து (கார்போஹைட்ரேட்டுகள்) - 11.7% போன்ற சத்துகள் அடங்கியிருக்கின்றன.

குளிர் காய்ச்சல்
குளிர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்கள், வெங்காயத்துடன் மூன்று மிளகு சேர்த்து சாப்பிட்டு வந்தால், காய்ச்சல் குறையும்.



Click it and Unblock the Notifications
