நல்ல திடமான உடலுக்கு அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

அனைவரும் ஷாருக்கான், சல்மான் கான், சூர்யா, விக்ரம் போல இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறோம். ஆனால், அதற்கான செயலில் இறங்க தான் முற்றிலுமாக மறந்துவிடுகிறோம். இன்றைய சூழ்நிலையில் நோய்களிடம் இருந்து நாம் தான் தப்பி ஓடி ஒளிந்துக் கொள்ள வேண்டும். அந்த அளவிற்கு புதிது புதிதாக பல நோய்கள் தினம் தினம் தோன்றுகின்றன. அவைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று ஒரு கேள்வி எழுந்தால், நீங்கள் செய்ய வேண்டிய ஒரே செயல் ஆரோகியமான உணவு மட்டுமே. நாம் ஏதோ ஒரு சில காரணங்களினால் நமது உணவுப்பழக்கத்தை மாற்றிக்கொண்டுவிட்டோம். அதன் விளைவுகளே நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்ததற்கான காரணம்.

கோடையில் உடல் வறட்சி அடையாமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்கள்!

ஒருசில உணவுகளைப் பொருட்களை நமது அன்றாட உணவுகளில் நாம் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு மஞ்சள், தேன், முட்டை, இஞ்சி போன்றவை நமது உடல்திறனையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது. இது போல ஒருசில உணவுகள் நமது தினசரி உணவில் பங்கெடுக்கும் பட்சம், நமது உடல்திறன் எப்போதும் உச்சத்திலேயே இருக்கும். சரி இனி நமது உணவுப்பழக்கத்தில் நாம் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுகளை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்...

அஞ்சறை பெட்டிய கண்டா, அஞ்சி ஓடும் நோய்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இஞ்சி

இஞ்சி

இஞ்சி உடல் வலியை குறைக்கவும். குமட்டல் ஏற்படாமல் இருக்கவும் உதவுகிறது.

செர்ரி

செர்ரி

சரும செல்களை புதிப்பிக்கவும், அதில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவும் செர்ரி உதவுகிறது. சருமப் பிரச்சனைகளில் இருந்து விரைவில் வெளிப்பட உதவுகிறது.

 மஞ்சள்

மஞ்சள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மஞ்சள் வெகுவாக உதவுகிறது. மற்றும் மூட்டு வழிகளில் இருந்து விடுபடவும் நல்ல பயனளிக்கிறது.

முட்டை

முட்டை

தசைகளுக்கு நல்ல ஊட்டமளிக்க வல்லது முட்டை. இதிலுள்ள உயர்த்தர ஊட்டச்சத்துகள் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது. இதில் உள்ள புரதச்சத்து உங்களது உடல்திறனை அதிகரிக்க உதவுகிறது

மீன்

மீன்

உங்கள் உணவுப்பழக்கத்தில் தினமும் மீனை சேர்த்துக் கொள்வதினால் கண் பார்வைக்கு நல்லது மற்றும் இதில் அதிகம் புரதச்சத்து இருக்கிறது. இது உங்களது உடல் வலிமையை அதிகரிக்க உதவுகிறது.

 பிஸ்தா

பிஸ்தா

உடற்பயிற்சி செய்பவர்கள் மட்டுமல்லாது அனைவரும் பிஸ்தாவை தினசரி சாப்பிடலாம். இதிலுள்ள உயர்தர வைட்டமின் சத்துகள் எலும்புகள் வலுபெற உதவுகிறது.

பட்டாணி

பட்டாணி

பட்டாணியில் உங்களது உடல் எடையைக் கட்டுப்படுத்தும் தன்மை இருக்கிறது மற்றும் இது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

திராட்சை

திராட்சை

திராட்சை உங்களது உடலில், சக்தியை அதிகரிக்க உதவுகிறது, உடற்பயிற்சி செய்யும் முன்னர் நீங்கள் திராட்சையை உட்கொள்வது நல்ல பயன் தரும்

வாழைப்பழம்

வாழைப்பழம்

ஒரு நாளுக்கு உங்களுக்கு தேவையான சத்துகளில், அதிகமானதை தரவல்லது வாழைப்பழம்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

ஓட்ஸ் உங்களது உடல் எடையை குறைக்க உதவும் சரியான உணவு. மற்றும் உங்கள் உடல் வலுவை அதிகரிக்க ஓட்ஸ் உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

10 Power Foods You Should Eat Daily

do you know about 10 power foods you should eat daily. if no, read here.