For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாய் துர்நாற்றத்தை தவிர்ப்பதற்கான சில இயற்கை வழிகள்!!!

By SATEESH KUMAR S
|

நாம் அன்றாட வாழ்வில் பலரை சந்திக்கிறோம். பல விழாக்களுக்கு செல்கிறோம். வெளியே செல்லும் போது மற்றவர் மதிக்கும் வகையில் உடையணிந்து நல்ல தோற்றத்தை பெற மெனக்கெடுகிறோம். நம் எவ்வளவு தான் விலை உயர்ந்த உடை அணிந்திருந்தாலும் நாம் பேசும் போது வாய் துர்நாற்றம் வீசுமெனில, அது மற்றவரை முகம் சுளிக்க வைக்கும்.

இதனால் நாம் மற்றவரிடம் நன்மதிப்பை பெற முடியாது, நன்மதிப்புக்கு மட்டுமன்றி வாய் துர்நாற்றமானது நமது ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கும். ஆகவே துர்நாற்றத்தை களைய கூடிய வழிகள் குறித்து காணலாம்.

சுவாரஸ்யமான வேறு: ஆரோக்கிய பிரச்சனைகளும்.. அதற்கான பாட்டி வைத்தியங்களும்...

பொதுவாக சில குறிப்பிட்ட உணவுகள் மற்றும் வறட்சியான வாய் தான் துர்நாற்றமுடைய சுவாசத்திற்கு ஆளாக்குகின்றன. நாம் ஒவ்வொரு முறை வெளியே செல்லும் போதும் அல்லது வெளியிடங்களுக்கு செல்லும் போதும் துர்நாற்றத்தை விரட்டுவதற்காக, நாம் பல் துலக்கி கொண்டு இருக்க முடியாது.

இதுப்போன்று வேறு: குறட்டை சத்தம் அதிகமா இருக்கா? அத நிறுத்த இதோ சில டிப்ஸ்...

சந்தையில் எண்ணற்ற வாய் புத்துணர்வூட்டிகள் கிடைக்கின்றன. எனினும் நமது சமயலறையில் எப்போதும் தயாராக உள்ள, உடனடியாக கிடைக்கின்ற சில இயற்கையான சுவாச புத்துணர்வூட்டிகளை நாம் நம்முடன் எடுத்து செல்லலாம்.

அவ்வகையான சில பொருட்களின் பட்டியல் இதோ...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெருஞ்சீரகம்

பெருஞ்சீரகம்

வழக்கமாகவே நாம் உணவு உண்ட பின் அஜீரணத்தை விரட்டும் பொருட்டு, நாம் பெருஞ்சீரகத்தை மெல்லுகிறோம். ஆனால் அவை சிறந்த வாய் புத்துணர்வூட்டிகள் என்பது நாம் அறியாத ஒன்று. அவை நமது உமிழ்நீர் சுரப்பதை அதிகரிக்கும்.மேலும் துர் சுவாசத்தை உண்டாக்கும் கிருமிகளை எதிர்த்து போரிடும். ஏப்பம் வருவது மற்றும் ரீஃப்லெக்ஸ் அமிலம் உருவாவதை குறைக்கிறது. நமது சுவாசத்திற்கு இயற்கையாகவே இனிமையூட்ட சில பெருஞ்சீரகத்தை மென்று துர்நாற்றத்தை விரட்டலாம்.

புதினா

புதினா

சந்தையில் கிடைக்கின்ற பெரும்பாலான, சுவாச புத்துணர்வூட்டிகள், புதினாவை முக்கிய மூலப்பொருள் ஆக கொண்டுள்ளன. உணவை அலங்கரிப்பதில் புதினா முக்கிய பங்கு வகிக்கிறது. தனது வலிமையான குளிர்ச்சியூட்டக்கூடிய பண்பினால் நமது சுவாசத்திற்கு உடனடியான புத்துணர்வை வழங்குகிறது. நாம் சில பச்சையான இலைகளை மெல்லுவதன் மூலமும் அல்லது புதினா டீ அருந்துவதன் மூலமும் துர்நாற்றத்தை விரட்டலாம்.

பார்ஸ்லி

பார்ஸ்லி

நமது உணவை அலங்கரிக்க பயன்படும் பார்ஸ்லி உபயோகமற்றது என்றே நாம் எண்ணுகிறோம். கிருமிகளுடன் போரிடும் பண்பினையுடைய குளோரோஃபில் பார்ஸ்லியில் நிறைந்துள்ளது. நாம் உணவு உண்டு முடித்த பின் நாம் இதனை எடுத்துக் கொள்ள வேண்டும். இது மிக சிறந்த சுவாச புத்துணர்வூட்டி. அதனால் தான் சோப்புகள், வாசனை திரவியங்கள் மற்றும் சுவாச புத்துணர்வூட்டிகளில் இதன் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.

கிராம்பு

கிராம்பு

நம் உணவிற்கு மணத்தையும் சுவையையும் கூட்ட நாம் கிராம்பினை பயன்படுத்துகிறோம். இது பல்வலியை குறைக்க பயன்படுகிறது. மேலும் பற்பசை மற்றும் மௌத் வாஷ்களில் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு சிறந்த துர்நாற்றத்தை அகற்றும் பொருள் .கிராம்பில் பாக்டீரியா எதிர்ப்பு யூஜினால் நிறைந்துள்ளது. இவற்றை மெல்லுவதன் மூலம் சுவாசத்திற்கு புத்துணர்வூட்டலாம்.

பட்டை

பட்டை

பட்டை பாக்டீரியா எதிர்ப்புக் குணம் நிறைந்துள்ள நறுமண பொருட்களில் ஒன்று. மேலும் இது கெட்ட சுவாசத்தை குறைக்கிறது. நாம் சில பட்டைகளை மெல்லுவதன் மூலமோ அல்லது தேனீரில் சேர்த்து அருந்துவதன் மூலமோ வாய் துர்நாற்றத்தை குறைக்கலாம் அல்லது சில பட்டைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, குளிர விட்டு மவுத் வாஷாக பயன்படுத்தலாம்.

ஏலக்காய்

ஏலக்காய்

ஏலக்காய் விதைகளின் நறுமணத்துடன் கூடிய இனிய சுவை நமது சுவாசத்திற்கும் இனிமையூட்டுகிறது. ஒரு ஏலக்காயை நமது வாயில் போட்டு மெல்லுவதன் மூலம், துர்நாற்றத்தை விரட்டலாம். ஆகவே நமது உணவினை ஏலக்காய் டீயுடன் முடிப்பது சிறந்தது.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்கள்

எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு போன்ற பழங்கள் உமிழ்நீர் சுரப்பியை தூண்டி உமிழ்நீர் உற்பத்தியை ஊக்கப்படுத்துகிறது. பல் காரையினால் உருவாகின்ற அமிலங்களை உமிழ்நீர் செயலிழக்க செய்கிறது. இறந்த செல்களை அகற்றுகிறது. மேலும் வாயில் எஞ்சியுள்ள உணவு துகள்களையும் அகற்றுகிறது.

சோம்பு

சோம்பு

இவை இனிப்பு உணவு மற்றும் வேக வைத்த உணவு வகைகள் தயாரிப்பதில் பயன்படுத்தும் பொருளாகும். மதுவிற்கு மணமூட்ட இவற்றை பயன்படுத்துகின்றனர். இந்த விதைகளில் நிறைந்துள்ள அனித்தோல், இவற்றிற்கு இனிப்பான மற்றும் நறுமண பண்புகளை வழங்குகிறது. சோம்பு விதைகளின் பாக்டீரியா எதிர்ப்பு குணத்துடன் கூடிய நறுமணம், அவற்றை பயனுள்ள சுவாச புத்துணர்வூட்டி ஆக்குகிறது. நாம் அவற்றை நமது வாயில் போட்டு மெல்லலாம் அல்லது கொதிக்க வைக்கப்பட்ட நீரில் ஊற வைத்து, இயற்கையான சுவாச புத்துணர்வூட்டியாக பயன்படுத்தலாம்.

கொத்தமல்லி அல்லது தனியா

கொத்தமல்லி அல்லது தனியா

வெங்காயம் மற்றும் பூண்டு போன்ற உணவு பொருட்கள் நமது வாயில் துர்நாற்றாத்தினை ஏற்படுத்தலாம். ஆனால் கொத்தமல்லியின் மனம் அந்த துர்நாற்றத்தை மறைக்க உதவும். வாய் துர்நாற்றாத்தினை தவிர்க்க உணவிற்கு பின் சில கொத்தமல்லி இலைகளை மெல்லலாம். மேலும் வறுக்கப்பட்ட கொத்தமல்லி விதைகளுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வாய் புத்துணர்வூட்டியாக பயன்படுத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ways To Lose Bad Breath Naturally

There are many mouth fresheners that are available in the market. But, how about carrying some natural breath fresheners readily available in your kitchen cabinet to help tame your bad mouth odour? Here is a list of few of them:
Desktop Bottom Promotion