இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள சில இயற்கையான வழிகள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

இன்றைய வாழ்க்கை முறை நாகரீகமாக மாறி விட்டாலும் அதனுடன் தொடர்புடைய நோய்கள் ஏமாற்றத்தை தரும் ஒரு விஷயமாக உள்ளது. எந்தளவிற்கு நாகரீகத்தை நோக்கி நாம் செல்கிறோமோ அதே வேகத்தில் நோய்களும் நம்மை வந்தடைகிறது. அதில் சில நோய்கள் மிகவும் ஆபத்தையும் உண்டாக்குவதாகவும் உள்ளது. மனச் சோர்வு மற்றும் அழுத்தம் ஏற்படும் காரணத்தினாலும் சில நோய்கள் தோன்றும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், இரத்த அழுத்தம்.

கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்!!!

இன்றைய தலைமுறையினருக்கு இரத்த அழுத்தம் ஏற்ற இறக்கத்துடன் இருப்பதற்கு முக்கிய காரணியாக இருப்பது அழுத்தமே. அதனால் இரத்த அழுத்தத்தை இயல்பான நிலையில் வைத்திட வேண்டும் என்றால் அழுத்தங்களையும் கட்டுப்படுத்த வேண்டும். இருப்பினும், அழுத்தங்களை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்றால், அதனை சுற்றி பல விஷயங்கள் அடங்கியுள்ளது. அதனால் உங்கள் நோக்கம் நிறைவேற வேண்டும் என்றால், அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைப்பது மட்டும் போதாது.

குறைந்த இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான முக்கியமான 10 காரணங்கள்!!!

சோர்வு மற்றும் அழுத்தங்களை கொண்டுள்ள மனதை கட்டுப்படுத்தி மேய்ப்பது தான் மிகப்பெரிய இலக்காகும். இந்த இலக்கை அடைய வேண்டுமானால், சில பல நடவடிக்கைகளை நீங்கள் எடுக்கலாம். இரத்த அழுத்த ஆரோக்கிய டிப்ஸ் பல வழிகளை பரிந்துரைக்கிறது. அதில் ஒன்று தான் நாம் நம் வாழ்க்கை முறைகளில் சிலவற்றை மாற்றிக் கொள்வது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சீரான உடற்பயிற்சி

சீரான உடற்பயிற்சி

தற்போதைய வாழ்க்கை முறையில் உடற்பயிற்சிக்கென்று நாம் நேரம் ஒதுக்குவதில்லை. இருப்பினும், தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி செய்தால் அது நம் ஆரோக்கியத்தை நீண்ட காலத்திற்கு பேணும் என்பதை நாம் உணர்வதில்லை. தினமும் உங்களால் உடற்பயிற்சி செய்ய முடியவில்லை என்றால், வாரத்திற்கு ஐந்து நாட்களாவது உடற்பயிற்சி செய்யுங்கள். இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும் சிறந்த வழிகளில் உடற்பயிற்சியும் ஒன்றாகும்.

உடல் எடை அதிகரிப்பை கட்டுப்படுத்துதல்

உடல் எடை அதிகரிப்பை கட்டுப்படுத்துதல்

உடற்பயிற்சி செய்யும் போது ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நோக்கி நாம் செல்கிறோம். அதனால் உடல் எடை அதிகரிப்பும் கட்டுப்படுகிறது. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த இது மிகவும் முக்கியமாகும்.

சமநிலையான உணவை எடுத்துக் கொள்ளுதல்

சமநிலையான உணவை எடுத்துக் கொள்ளுதல்

சமநிலையான உணவை எடுத்துக் கொள்வதன் முக்கியத்துவம் எப்போதுமே வலியுறுத்தப்படுகிறது. உங்கள் நாளை நல்ல காலை உணவுடன் தொடங்க வேண்டும். அதன் பின் சமநிலையுடனான மதிய உணவு மற்றும் விரைவான இரவு உணவு. ஒவ்வொரு வேளையிலும் கார்ப்ஸ், புரதம், வைட்டமின்கள் மற்றும் கனிமங்களின் கலவை சரியான அளவில் இருக்க வேண்டும்.

சோடியத்தை குறைத்தல்

சோடியத்தை குறைத்தல்

பேக் செய்யப்பட்ட உணவுகளை தான் இன்றைய காலகட்டத்தில் நாம் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். ஆனால் அதில் சொல்லப்பட்டுள்ள ஊட்டச்சத்துக்களின் விவர பட்டியலை என்றாவது நாம் பார்த்துள்ளோமா? பேக் செய்யப்பட்டுள்ள அனைத்து உணவுகளிலும் சோடியத்தின் அளவு அதிகமாக இருக்கும். இரத்த அழுத்த ஏற்ற இறக்கத்திற்கு இது மிகவும் ஆபத்தானதாகும். அதே போல் உங்கள் உணவில் உப்பின் அளவையும் குறைத்துக் கொள்ளுங்கள்.

மதுபானத்தை அளவுடன் குடியுங்கள்

மதுபானத்தை அளவுடன் குடியுங்கள்

மதுபானம் குடிக்கும் அளவை குறைக்க சொல்லி இரத்த அழுத்த ஆரோக்கிய டிப்ஸ் பரிந்துரைக்கிறது. முடிந்தால் குடிப் பழக்கத்தை கை விடுங்கள். ஒரு வேளை நிறுத்த முடியாவிட்டால், அதனை அளவுடன் குடியுங்கள். தினமும் ஒன்று அல்லது இரண்டு பெக் அளவில் ஆண்கள் குடிக்கலாம்; பெண்கள் என்றால் ஒரு பெக் மட்டுமே.

ரெட் ஒயின் குடியுங்கள்

ரெட் ஒயின் குடியுங்கள்

வெள்ளை ஒயின் ஆபத்தானதாக இருக்கும். ஆனால் ரெட் ஒயின் உதவியை அளிக்கும். சிறிதளவு ரெட் ஒயின் குடிக்கும் போது அது உங்கள் தமனிகளை அமைதிப்படுத்தி, இரத்த அழுத்தத்தை குறைக்கும்.

புகைப்பிடிக்கும் பழக்கத்தை கை விடுதல்

புகைப்பிடிக்கும் பழக்கத்தை கை விடுதல்

புகைப்பிடிக்கும் பழக்கம் எப்போதுமே நன்மையை அளிப்பதில்லை. குறைவாக பிடித்தாலும் கூட அது நன்மையை அளிப்பதில்லை. அது நுரையீரலுக்கு ஆபத்தை விளைவிப்பதோடு மட்டுமல்லாமல் இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கும். அதனால் உங்கள் ஆரோக்கியத்தை மீண்டும் பெற வேண்டுமானால், உடனே புகைப்பிடிக்கும் பழக்கத்தை கை விடுங்கள்.

இரத்த அழுத்தத்தை கண்காணித்தல்

இரத்த அழுத்தத்தை கண்காணித்தல்

இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க ஆரோக்கியமான சில வழிகளை நீங்கள் பின்பற்றினாலும் கூட, அதனை அப்பப்போ சோதித்துக் கொள்ள வேண்டும். முடிந்தால் நல்லதொரு இரத்த அழுத்த கண்காணிப்பு கருவி ஒன்றினை வாங்கி, சீரான முறையில் சோதித்துக் கொள்ளுங்கள்.

இரத்த அழுத்த ஏற்ற இறக்கம் மிகுந்த வலியை உண்டாக்கும். இதன் காரணமாக பல நோய்கள் உண்டாகும். வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை கடைப்பிடித்தால், அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும். இயற்கையான வழிமுறைகளை பின்பற்றினால், முடிந்த வரையில் மாத்திரை மருந்துகளை நீங்கள் தவிர்க்கலாம்.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Natural Ways To Keep Blood Pressure In Check

Controlling and taming a tired and stressed mind is the larger goal. In order to achieve that goal, you can take a couple of measures.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter