For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோடையில் அதிகம் விற்கப்படும் தர்பூசணியை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

By Maha
|

கோடைகாலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவரும் உடலை குளிர்ச்சியுடனும், வறட்சியில்லாமலும் வைத்துக் கொள்ள முயற்சிப்போம். அதற்காக தண்ணீர் அதிகம் குடிப்பதுடன், நிறைய பழங்களையும் வாங்கி சாப்பிடுவோம். அப்படி கோடைகாலத்தில் உடலின் வறட்சியை தடுக்கும் வண்ணம் பல பழங்கள் விலைமலிவில் விற்கப்படும்.

அதில் ஒன்று தான் தர்பூசணி. தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதுடன், கலோரிகள் குறைவாக இருக்கிறது. இதனால் உடல் வறட்சி நீங்குவது, எடை குறைவது மட்டுமின்றி, வேறு சில நன்மைகளும் தர்பூசணியில் நிறைந்துள்ளன. அதிலும் தர்பூசணி ஒரு இயற்கை வயாகரா என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், தர்பூசணி ஆண்களுக்கு ஒரு வயாகரா போன்றது. இதுப்போன்று இப்பழத்தில் நிறைய உள்ளன.

இங்கு அந்த தர்பூசணி பழத்தின் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியம்

தர்பூசணியில் தமனி மற்றும் இரத்த நாளங்களை பாதுகாக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. மேலும் இதில் கொழுப்புக்கள் மற்றும் கொலஸ்ட்ரால் குறைவாக இருப்பதால், இது இதயத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

எடை குறைவு

எடை குறைவு

தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் மற்றும் கொழுப்புக்கள் குறைவாகவும் இருப்பதால், இதனை டயட்டில் அதிகம் சேர்த்துக் கொண்டால் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

வயாகரா

வயாகரா

தர்பூசணியில் ஆண்குறிக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கம் அமினோ ஆசிட்டுகள் அதிகம் இருப்பதால், இது விறைப்புத்தன்மை குறைபாட்டை தடுத்து, நீண்ட நேரம் சந்தோஷமாக இருக்க உதவி புரியும்.

சிறுநீரகத்தை சுத்தப்படுத்தும்

சிறுநீரகத்தை சுத்தப்படுத்தும்

தர்பூசணியில் சிறுநீரகத்தில் படிந்துள்ள உப்பை வெளியேற்றி சுத்தப்படுத்தும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. மேலும் இது யூரிக் ஆசிட்டின் அளவைக் குறைக்கும்.

இரத்த அழுத்தத்தை சீராக வைக்கும்

இரத்த அழுத்தத்தை சீராக வைக்கும்

தர்பூசணியில் இரத்த அழுத்தத்தை சீராக வைக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு அதிகம் உள்ளது.

சர்க்கரையின் அளவை குறைக்கும்

சர்க்கரையின் அளவை குறைக்கும்

தர்பூசணியை அளவாக உட்கொண்டு வந்தால், அது இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.

சரும பராமரிப்பு

சரும பராமரிப்பு

தர்பூசணி உடலுக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் மிகவும் நல்லது. அதிலும் இது சருமத்தின் நிறத்தைக் கூட்டும் டோனராகவும், சருமத்தின் வறட்சி மற்றும் முதுமையை தடுக்க உதவும் பொருளாகவும், முகப்பருக்களை குணமாக்கவும் பெரிதும் துணை புரிகிறது. எனவே அதனை சாப்பிடும் முன், சிறு தர்பூசணி துண்டால், சருமத்தை மசாஜ் செய்யுங்கள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Juicy Watermelon

As summer is knocking on the door, you have to prepare yourself for a healthy body. The best way to do that is to eat watermelon. Rich in nutrients, vitamin and minerals, watermelon is one of the healthiest fruits. Here are some of the health benefits of having watermelon.
Story first published: Saturday, March 15, 2014, 10:28 [IST]
Desktop Bottom Promotion