For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் எபோலா வைரஸ் காய்ச்சல்!

By Maha
|

1976 இல் ஆப்பிரிக்காவில் பல உயிர்களை வாங்கிய ஒரு கொடிய உயிர்க்கொல்லி நோய் தான் எபோலா வைரஸ். இந்த வைரஸ் மேற்கு ஆப்பிரிக்காவில் காங்கோவில் உள்ள எபோலா ஆற்றங்கரையில் தோன்றியதால் இந்த நோய்க்கு, 'எபோலா வைரஸ்' என, பெயர் வந்தது. இதுவரை ஆப்பிரிக்காவில் பரவி பல மக்களை கொன்ற இந்த வைரஸானது, தற்போது இந்தியாவில் மும்பை, தமிழ்நாடு போன்ற இடங்களில் பரவி வருவதாக வந்த தகவல்களால், மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

இந்தியாவில் பரவி வரும் உயிரைப் பறிக்கும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல்!

ஏனெனில் ஆப்பிரிக்காவில் இந்த நோயால் தாக்கப்பட்டவர்கள் உயிர் பிழைத்தது இல்லை. மேலும் இதற்கு இன்னும் போதிய மருந்துகளும் கண்டுபிடிக்கப்படாததால், இந்த நோயினால் தாக்கப்பட்டால் மரணத்தைக் கூட தழுவக்கூடும். எபோலா வைரஸ் நோயானது காற்று, நீர் போன்றவற்றினால் பரக்கூடியது அல்ல. விலங்குகளான குரங்கு, வௌவால் மூலம் மனிதர்களுக்கு பரவும். மேலும்ம் இந்த வைரஸால் தாக்கப்பட்டவர்களின் இரத்தம் மற்றும் மலத்தில் இருந்து மற்ற மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவுகிறது.

மாரடைப்புக்கான இயல்பில்லாத சில அறிகுறிகள்!!!

இப்போது இந்தியாவில் பரவியுள்ளதாக கூறப்படும் இந்த எபோலா வைரஸின் அறிகுறிகள் மற்றும் அந்த நோய் பரவுவதை எப்படி தடுப்பது என்று பார்ப்போம். முக்கியமாக இந்த நோய் தாக்கி இதன் அறிகுறிகள் தெரிய 5-10 நாட்கள் ஆகும். ஆகவே கவனமாக இருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எபோலா வைரஸின் ஆரம்ப அறிகுறிகள்...

எபோலா வைரஸின் ஆரம்ப அறிகுறிகள்...

எபோலா வைரஸ் தாக்கியிருந்தால், முதலில் காய்ச்சல் வரக்கூடும்.

எபோலா வைரஸின் ஆரம்ப அறிகுறிகள்...

எபோலா வைரஸின் ஆரம்ப அறிகுறிகள்...

காய்ச்சலைத் தொடர்ந்து உடல் எப்போதும் மிகவும் சோர்வுடன் வலிமை இல்லாமல் இருக்கும்.

எபோலா வைரஸின் ஆரம்ப அறிகுறிகள்...

எபோலா வைரஸின் ஆரம்ப அறிகுறிகள்...

குறிப்பாக தலைவலி வரும்.

 எபோலா வைரஸின் ஆரம்ப அறிகுறிகள்...

எபோலா வைரஸின் ஆரம்ப அறிகுறிகள்...

இந்த வைரஸ் தாக்குதலால் தொண்டையில் புண் ஏற்படும்.

எபோலா வைரஸின் ஆரம்ப அறிகுறிகள்...

எபோலா வைரஸின் ஆரம்ப அறிகுறிகள்...

கடுமையான தசை மற்றும் மூட்டு வலி வந்து, பெரும் தொந்தரவைத் தரும்.

நோய் முற்றிய நிலையில்....

நோய் முற்றிய நிலையில்....

எதை சாப்பிட்டாலும் வாந்தி வரக்கூடும்.

நோய் முற்றிய நிலையில்....

நோய் முற்றிய நிலையில்....

வயிற்று வலி வந்தால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஏனெனில் எபோலா வைரஸ் தாக்கியிருந்தால் கடுமையான வயிற்று வலி வரும்.

நோய் முற்றிய நிலையில்....

நோய் முற்றிய நிலையில்....

வயிற்றுப்போக்கும் ஏற்படக்கூடும்.

நோய் முற்றிய நிலையில்....

நோய் முற்றிய நிலையில்....

அதைத் தொடர்ந்து சருமத்தில் அரிப்புகளும், கட்டிகளும் ஏற்படும்.

நோய் முற்றிய நிலையில்....

நோய் முற்றிய நிலையில்....

குறிப்பாக சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழக்க ஆரம்பிக்கும்.

நோய் முற்றிய நிலையில்....

நோய் முற்றிய நிலையில்....

சிலருக்கு நெஞ்சு வலி வரும்.

நோய் முற்றிய நிலையில்....

நோய் முற்றிய நிலையில்....

அதுமட்டுமின்றி மூச்சு விடுவதில் கூட சிலருக்கு சிரமம் ஏற்படும்.

நோய் முற்றிய நிலையில்....

நோய் முற்றிய நிலையில்....

உடலின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் இரத்தம் வழிய ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி கண்கள் சிவப்பாகவும், அடிக்கடி விக்கல் ஏற்படும்.

எபோலா நோய் பரவுவதை தடுக்கும் வழிகள்

எபோலா நோய் பரவுவதை தடுக்கும் வழிகள்

நோயால் பாதிக்கப்பட்டவர்களின் அருகில் அதிகம் செல்வதை தவிர்க்க வேண்டும்.

எபோலா நோய் பரவுவதை தடுக்கும் வழிகள்

எபோலா நோய் பரவுவதை தடுக்கும் வழிகள்

முக்கியமாக அந்நோயால் பாதிக்கப்பட்டால், அவர்களின் அருகில் செல்லும் போது கையுறை மற்றும் முகத்திற்கு மாஸ்க் அணிந்து கொண்டு அவர்களை பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்களின் இரத்தம் உங்கள் மீது பட்டாலும் உங்களுக்கும் இந்நோய் தொற்றிக் கொள்ளும்.

எபோலா நோய் பரவுவதை தடுக்கும் வழிகள்

எபோலா நோய் பரவுவதை தடுக்கும் வழிகள்

எப்போதும் எந்த ஒரு பொருளை உட்கொள்ளும் முன்னர் கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவி விட வேண்டும்.

குறிப்பு

குறிப்பு

இந்த நோயை முற்றிலும் குணப்படுத்த சரியான மருந்துகள் கண்டுபிடிக்கப்படாவிட்டாலும், உடலில் அந்த வைரஸை எதிர்த்துப் போராடும் வண்ணம் மருத்துவர் கொடுக்கும் மருந்துகளை தொடர்ந்து எடுத்து வந்தால், இந்த உயிர்க்கொல்லி நோயின் தாக்குதலில் இருந்து வெளிவரலாம்.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ebola Virus: Signs And Symptoms Of Infections

Signs and symptoms typically begin abruptly within five to 10 days of infection with Ebola virus. Ebola is a rare but deadly virus that causes bleeding inside and outside the body. 
Desktop Bottom Promotion