ஆரோக்கியமான வாழ்வுக்கு பாபா ராம்தேவின் 8 அட்டகாசமான யோகாசனங்கள்!!

Posted By: Karthikeyan Manickam
Subscribe to Boldsky

நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சித்து, அதில் தோல்வியடைந்தவர்களா? அல்லது நீளமான மற்றும் அழகான முடியை வளர்க்க ஆசைப்பட்டு, அது உங்களால் முடியாமல் போய்விட்டதா? இதற்கெல்லாம் ஒரு சரியான ஆயுதம் உள்ளது. ஆம், அது யோகா தான்!

உங்கள் உடம்பில் தலை முதல் கால் வரை அத்தனை உறுப்புக்களும் தத்ரூபமாக இயங்கி, உடல் ஆரோக்கியத்துடனும் திகழ தவறாமல் யோகாசனம் செய்யுங்கள். யோகா என்றாலே, அதில் தலைசிறந்து விளங்கும் பாபா ராம்தேவ் தான் பெரும்பாலோனோருக்கு ஞாபகத்திற்கு வரும். யோகாவில் பெரும் புரட்சியையே படைத்தவர் ராம்தேவ்.

சருமத்தின் அழகை அதிகரிக்க.. யோகா குரு பாபா ராம்தேவ் கொடுக்கும் சில அழகு குறிப்புகள்!!!

ராம்தேவின் யோகா முறைகளைக் கற்றுக் கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்தி வந்தால், உங்கள் தேகம் ஆரோக்கியமாக இருக்கும். உடல் உபாதைகள் மட்டுமன்றி, மன அழுத்தங்களைப் போக்குவதற்கும் இந்த யோகா முறைகள் மிகவும் உதவும். உங்கள் எடையை மளமளவென்று குறைக்க உங்களுக்கு விருப்பமா? உங்கள் கூந்தலை நீளமாக வளர்த்து, அழகாகப் பராமரிக்கவும் விருப்பமா? ராம்தேவின் யோகாசனங்களைக் கடைப்பிடியுங்கள். நீங்கள் நினைத்ததைச் சாதிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வஜ்ராசனா

வஜ்ராசனா

இந்த நிலையில் நீங்கள் இருக்கும் போது உங்கள் உடலின் மேற்பாகம் முழுவதும் இரத்தம் சீராகப் பாய்ந்து, நல்ல எனர்ஜியைக் கொடுக்கும். முடி இழப்பிற்கு ஒரு நல்ல தீர்வாக அமைவதோடு, செரிமானத்திற்கும் இந்த யோகா முறை உதவுகிறது.

முழங்காலிட்டு அமர்ந்து கொண்டு, கால்களை உங்கள் பிருஷ்டத்திற்கு அடியில் கொண்டு வரவும். அதாவது நீங்கள் உங்கள் பாதங்களின் மேல் இப்போது அமர்ந்துள்ளீர்கள். பின், உங்கள் இரு உள்ளங்கைகளையும் உங்கள் தொடைகளின் மேல் குப்புற வைக்கவும். உங்கள் முதுகுப் பகுதி நேராக இருக்க வேண்டும். இந்த நிலையில் அமர்ந்து கொண்டே, சீராகவும் ஆழமாகவும் மூச்சை இழுத்து இழுத்து விடவும்.

இவ்வளவுதான். இந்த போஸில் தொடர்ந்து ஒரு நிமிடத்திற்கு, அல்லது, முடிந்தால் 2 நிமிடங்கள் வரை இருக்கலாம். பின் இதே முறையைப் பல தடவை தொடர்ச்சியாகச் செய்து வந்தால் உங்கள் உடம்புக்கும் முடிக்கும் நல்லது.

அர்த சந்திராசனா

அர்த சந்திராசனா

உங்களுடைய தொடைகளுக்கும் பிருஷ்டத்திற்கும் இந்த ஆசனம் மிகவும் நல்லது. நிறைய பெண்கள் தங்களுடைய பிருஷ்டம் பெரிதாக இருப்பதாகக் கவலைப்படுவதுண்டு. அவர்களுக்கெல்லாம் இந்த யோகா நிலை ஒரு வரப்பிரசாதம் தான். உங்களுக்கு முதுகுத் தண்டில் அடிபட்டிருந்தாலோ அல்லது செரிமானத் தொந்தரவுகள் இருந்தாலோ இந்த யோகாவை செய்யாமல் இருப்பது நலம்.

முதுகை நேராக வைத்துக் கொண்டு நின்று, உங்கள் இரண்டு பாதங்களையும் ஒன்றாகச் சேருங்கள். பின், உங்கள் கைகளை தலைக்கு மேலே தூக்கி, இரு உள்ளங்கைகளையும் ஒன்றாகச் சேர்த்துக் குவிக்கவும். கைகளிலிருந்து கால்கள் வரை அனைத்துப் பாகமும் நேராக இருக்க வேண்டும். இப்போது, மூச்சை நன்றாக இழுத்து, இடது மற்றும் வலது பக்கங்களில் மாறி மாறிச் சாய வேண்டும். உடலில் வேறு எந்த வளைவும் இருக்கக் கூடாது. உங்கள் விரல் முனைகளும் தொடைகளும் இறுக்கமடைவதை உங்களால் உணர முடியும்.

இந்த போஸில் உங்களால் எவ்வளவு நேரம் இருக்க முடியுமோ, மேலும் இதை எத்தனை முறை செய்ய முடியுமோ அந்த அளவுக்கு பலன் கிடைக்கும்.

பாத கோணாசனா

பாத கோணாசனா

இது உங்களுடைய உள் தொடைகளுக்கு மட்டுமல்லாமல் உங்கள் முழு உடம்புக்குமே நல்லது. குறிப்பாக, மாதவிடாய் மற்றும் செரிமானத் தொந்தரவுகள் இருப்பவர்கள் இதை நிச்சயம் முயற்சிக்கலாம்.

யோகா மேட்டில் கால்களை நன்றாக நீட்டி அமர்ந்து கொள்ளவும். முதுகுத் தண்டு நேராக இருக்க வேண்டும். பின், பாதங்களிரண்டும் ஒன்றை ஒன்று தொட்டுக் கொள்ளும் அளவுக்கு உங்கள் கைகளால் கால்களைப் பிடித்து இழுக்க வேண்டும். பிறகு இரு தொடைகளையும் வண்ணத்துப் பூச்சி சிறகசைப்பது போல மேலும் கீழும் அசைக்க வேண்டும்.

இதை ஒரு நாளைக்கு எத்தனை முறை செய்ய முடியுமோ அந்த அளவு நல்லது.

அதோ முக ஸ்வானாசனா

அதோ முக ஸ்வானாசனா

இது உங்களிடமுள்ள மன அழுத்தங்கள் அனைத்தையும் அகற்ற உதவுகிறது. இரத்த ஓட்டம் அதிகமாகவும் சீராகவும் இருப்பதற்கு இந்த போஸ் உதவுகிறது. உடம்பை ரிலாக்ஸ் செய்வதற்கும், முடி வளர்வதற்கும் கூட இந்த யோகா முறை உதவும்.

முதுகை நேராக நிமிர்த்திக் கொண்டு பாதங்கள் இரண்டும் நன்றாகத் தரையில் ஊன்றுமாறு நிற்க வேண்டும். பின் முகம் தரையைப் பார்க்குமாறு நன்றாக முன்னோக்கிக் குனிந்து, இரு உள்ளங்கைகளையும் தரையைத் தொடுவது போல் கொண்டுவர வேண்டும். அப்போது இடது காலை சிறிது பின் புறம் நீட்ட வேண்டும். அதன் பின் அதேபோல் வலது காலையும் நீட்ட வேண்டும். இப்படியே இரு கால்களையும் மாற்றி மாற்றி செய்ய வேண்டும். மூச்சையும் சீராக இழுத்து விட வேண்டும். ஒவ்வொரு மூவையும் சுமார் ஒன்றரை நிமிடங்கள் செய்தல் நலம்.

உஸ்த்ராசனா

உஸ்த்ராசனா

இந்த ஒட்டக போஸ் உங்கள் மூளையில் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. கொஞ்சம் கஷ்டம்தான் என்றாலும், முடி வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான யோகா நிலை என்று ராம்தேவ் இதற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள்ளார்.

யோகா மேட்டில் முதுகுத் தண்டு நேராக இருக்குமாறு அமர வேண்டும். பின் 90 டிகிரிக்கு முழங்கால்களை மடக்கி, இடுப்பில் கைகளை வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது மூச்சை நன்றாக இழுக்க வேண்டும். இந்த போஸை மிகவும் மெதுவாகச் செய்ய வேண்டும். பின் இடது கையால் இடது பாதத்தையும், வலது கையால் வலது பாதத்தையும் பிடித்துக் கொள்ள வேண்டும். உங்கள் பார்வை விட்டத்திலேயேதான் இருக்க வேண்டும். சுமார் ஒரு நிமிடத்திற்குப் பின் இயல்பாக மூச்சை விட்டுக் கொள்ளலாம்.

இந்த யோகா செய்ய கஷ்டமாக இருந்தால், விட்டு விடுங்கள்.

கபலாபதி பிரணாயாமம்

கபலாபதி பிரணாயாமம்

இது ஒரு சாதாரண, எளிதான மூச்சுப் பயிற்சி முறைதான். இந்த யோகா முறை உங்கள் தசைகளுக்கும் வயிற்றுக்கும் அதிக வலு கொடுக்கும். உடல் எடையைக் குறைக்கவும் செரிமானத்தை அதிகரிக்கவும் கூட இந்த யோகாவை செய்யலாம். இதய சம்பந்தமான வியாதி இருப்பவர்கள் இதைச் செய்ய வேண்டாம்.

யோகா மேட்டில் நேராக அமர்ந்து, உள்ளங்கைகளை முழங்கால்கள் மேல் வைத்துக் கொள்ளவும். இப்போது மூச்சை நன்றாக வெளியே விட்டு, வயிற்றை நன்றாக உள் நோக்கி இழுத்துக் கொள்ளவும். பின் மூச்சை உள்ளிழுக்கும்போது, வயிறை இயல்பு நிலைக்குக் கொண்டுவரவும். இப்படியே மாற்றி மாற்றி 50 முறை மூச்சை இழுத்து இழுத்து விட வேண்டும். இதைப் பலமுறை செய்து பார்த்தால் உங்களுக்கே ஒரு முன்னேற்றம் தெரியும்.

செட்டுபந்தாசனா

செட்டுபந்தாசனா

பாலம் போன்ற அமைப்பில் இந்த ஆசனம் இருக்கும். உங்கள் தொடைகளுக்கும் தோள்களுக்கும் இந்த யோகா முறை மிகவும் நல்லது. இந்த யோகாவை செய்வதால் உங்கள் செரிமான சக்தி அதிகரிக்கும். மனம் அமைதியாகும். இரத்த அழுத்தமும் கட்டுக்குள் வரும். கழுத்து அல்லது முதுகில் அடிபட்டவர்கள் இதைச் செய்ய வேண்டாம்.

பாதங்களைத் தரையில் ஊன்றி இருக்குமாறு யோகா மேட்டில் படுத்துக் கொள்ள வேண்டும். மூச்சை இழுக்கும் போது, உங்கள் பிருஷ்டத்தையும் முதுகையும் 90 டிகிரிக்கு மேல் நோக்கித் தூக்க வேண்டும். கழுத்து மற்றும் தலை மட்டும்தான் தரையில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும். சப்போர்ட்டுக்கு வேண்டுமானால் கைகளைத் தரையில் ஊன்றிக் கொள்ளலாம். இந்த யோகா முறையைத் தொடர்ந்து செய்வது கழுத்துக்கும் நல்லது.

வில்லோ போஸ்

வில்லோ போஸ்

இது மிகவும் எளிமையான யோகாதான். வயிற்றுக்கு மிக மிக அருமையான ஒரு யோகா முறையாகும்.

நேராக நின்று கொண்டு, கைகளை இரு பக்கங்களிலும் தொங்க விட்டவாறு வைத்துக் கொள்ள வேண்டும். பின் இடது பாதத்தைத் தூக்கி, முழங்காலை மடக்கியவாறு. அதை வலது தொடையின் மேல் நிறுத்தி வைக்க வேண்டும். பின் இரு கைகளையும் மார்புக்கு நேராகக் கொண்டு வந்து இரு முறை மூச்சை இழுத்து விடவும். அதன் பிறகு இடது தொடையின் மேல் வலது பாதத்தை வைத்து இதேபோல் செய்ய வேண்டும். இப்படியே மாற்றி மாற்றி 5 முறை செய்வது நல்லது.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    8 Ramdev Yoga Poses For Leading A Healthy Life

    Baba Ramdev’s yoga poses can help all aspects of your life. They will also help you lead a healthier and happier life! Here is a guide about all there is to know about Baba Ramdev Yoga.
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more