For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

துளசிச் செடியால் ஏற்படும் எதிர்பாராத 6 பக்க விளைவுகள்!!

By Karthikeyan Manickam
|

துளசிச் செடி ஒரு அருமையான மூலிகை மருந்து என்பது நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். பலவிதமான நோய்களுக்கு துளசிச் செடி ஒரு மருந்தாக விளங்குகிறது என்பதில் சந்தேகமே இல்லை.

சிறு வயதில் நமக்கு சாதாரண சளி, காய்ச்சல் வந்தாலும் துளசி இலைகளைக் கொண்டு நம் தாயார்கள் கசாயம் செய்து கொடுப்பார்கள். துளசியின் பெருமைகளையும் நமக்கு நிறையக் கற்றுக் கொடுத்திருப்பார்கள்.

ஆயுர்வேத மருத்துவத்திலும் முக்கிய இடத்தை வகிக்கும் துளசிச் செடியால் சில பக்க விளைவுகளும் ஏற்படும் என்பதைக் கேள்விப்பட்டால் ஆச்சரியமாக இருக்கும். நம்மில் பலருக்கும் தெரியாத இதுப்போன்ற சில பக்க விளைவுகள் குறித்து இங்கே நாம் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யூஜினால் ஓவர்டோஸ்

யூஜினால் ஓவர்டோஸ்

துளசியில் யூஜினால் என்ற பொருள் தான் அதிகம் உள்ளது. துளசியின் வாசனைக்கும் இதுதான் காரணம். ஆனால் அளவுக்கு அதிகமாகத் துளசியைச் சாப்பிடும் போது, அது விஷமாகக் கூட மாறி விடலாம் என்று கூறப்படுகிறது.

அறிகுறிகள்: இருமலின் போதும், சிறுநீர் கழிக்கும் போதும் இரத்தம் வருதல், மூச்சு விடுவதில் சிரமம்

இரத்தம் அடர்த்தியாகும்

இரத்தம் அடர்த்தியாகும்

நம் உடம்பில் இரத்த அணுக்களை குண்டக்க மண்டக்கப் அதிகரிக்கச் செய்யும் வலிமை துளசிக்கு உள்ளது. எனவே, இரத்தம் உறைவதற்கு எதிரான மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது, துளசி கலந்திருக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.

அறிகுறிகள்: மாதவிடாயின் போது இரத்தம் அதிகம் வெளிப்படுதல்

இரத்தத்தில் சர்க்கரை குறையும்

இரத்தத்தில் சர்க்கரை குறையும்

இரத்தத்தில் அசாதாரணமாக சர்க்கரையின் அளவு குறைவதால் இக்குறைபாடு ஏற்படுகிறது. ஆனால், இது நோயல்ல! நீரிழிவு ஏற்பட்டிருப்பவர்கள் துளசி அல்லது துளசி கலந்த மருந்தை சாப்பிட்டால் இரத்தத்தின் அளவு மளமளவெனக் குறையும். இது மிகவும் ஆபத்தானது.

அறிகுறிகள்: உடல் வெளிறுதல், மயக்கம் வருதல், பசி எடுத்தல், உடல் தளர்தல்

விந்தணுக்கள் குறையும்

விந்தணுக்கள் குறையும்

அடிக்கடி துளசியை சாப்பிடும் ஆண்களிடம் விந்தணுக்கள் குறைவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது. இதனால் கரு உருவாவதில் பாதிப்பு ஏற்படும். முயல்களின் மூலம் இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு

கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு

கர்ப்பிணிகள் அளவுக்கு அதிகமாகத் துளசிச் செடியை எடுத்துக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. இல்லையென்றால் தாய்க்கும், சேய்க்கும் நீண்ட காலப் பாதிப்புகள் ஏற்படும். குழந்தை பிறப்பு அல்லது மாதவிடாயின் போது கூட பாதிப்புகள் ஏற்படலாம்.

அறிகுறிகள்: முதுகு வலி, வயிற்றுப் போக்கு, அதிக இரத்தம் வெளிப்படுதல்

துளசியும் மருந்துகளும்

துளசியும் மருந்துகளும்

நம் உடலில் இயல்பாக உற்பத்தியாகும் மருந்துகளுடன் துளசி சேரும் போது பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. கல்லீரல் நொதிகள் உருவாக்கும் 'சைட்டோக்ரோம் பி450', இரத்தத்தை அதிகரிக்கவோ குறைக்கவோ செய்யும். வயிற்றுப் போக்கு, வாந்தி மற்றும் நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றைக் குறைப்பதில் டயஸெப்பம் மற்றும் ஸ்கோபோலமைன் ஆகிய மருந்துகள் உதவுகின்றன. இந்த மருந்துகளால் ஏற்படும் அம்னெசிக் விளைவை துளசிச் செடி குறைத்து விடலாம்.

அறிகுறிகள்: நெஞ்சு இரைச்சல், தலைவலி, வயிற்றுப் போக்கு

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

6 Unexpected Side Effects Of Tulsi

Here are some unexpected side effects of Tulsi. Read this to know more.
Desktop Bottom Promotion