ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோனின் 5 ஆரோக்கிய நன்மைகள்!!!

Posted By: Ashok CR
Subscribe to Boldsky

டெஸ்டோஸ்டிரோன் என்பது கருவில் இருக்கும் சிசுவை ஆண் குழந்தையாக மாற்றும் பொறுப்பை கொண்டுள்ள ஆண் ஹார்மோனாகும். ஆண்மை தன்மையுடன் விளங்க ஒவ்வொரு ஆண்களின் உடலிலும் சுரக்க வேண்டிய மிக அடிப்படையான ஹார்மோன் இதுவாகும். டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் அதிகமாக இருப்பது உடலில் ரோமம், கரகரப்பான குரல் மற்றும் தசைகள் மூலமாக வெளிப்படும். இருப்பினும், இந்த உடல் ரீதியான அம்சங்கள் தவிர, சில முக்கியமான பயன்களையும் டெஸ்டோஸ்டிரோன் அளிக்கிறது.

ஒரு ஆண் கருவளத்துடன் இருக்கிறாரா இல்லையா என்பதை கண்டறிய சில அறிகுறிகள்!!!

டெஸ்டோஸ்டிரோன் தெரபியின் மூலம் இதயத்தை குணப்படுத்தும் தன்மை அதிகமாக பேசப்படுபவை. தவிர, நெஞ்சு வலியில் இருந்தும் நம்மை திறம்பட காக்க டெஸ்டோஸ்டிரோன் உதவுகிறது. டெஸ்டோஸ்டிரோன் ஏன் ஆரோக்கியத்தை அளிக்கிறது என நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? ரொம்ப ஆழமாக செல்ல வேண்டாம். இதோ, டெஸ்டோஸ்டிரோனால் ஆண்களுக்கு ஏற்படும் சில உடல்நல பயன்களை இப்போது பார்க்கலாமா...?

ஆண்மை குறைவு ஏற்படுகின்றது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை உயரும்

இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை உயரும்

டெஸ்டோஸ்டிரோன் அளவு மேம்படும் போது உங்கள் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதனால் தான் பெண்களை காட்டிலும் ஆண்களுக்கு இரத்த சிவப்பணுக்களும், ஹீமோகுளோபினும் அதிகளவில் உள்ளது. உங்களுக்கு அதிகளவில் இரத்த இழப்பு ஏற்படும் போது இதனால் உங்கள் உயிரும் கூட காக்கப்படலாம்.

அதிகளவிலான தசை திணிவு

அதிகளவிலான தசை திணிவு

ஜிம்மிற்கு செல்லும் சில ஆண்களின் செதுக்கப்பட்ட தசைகளை பார்த்து நீங்கள் வாயடைத்து போயிருப்பீர்கள். தசை திணிவு என்பது அதிகளவிலான டெஸ்டோஸ்டிரோனால் ஏற்படுவது. ஆரோக்கியமான அளவில் டெஸ்டோஸ்டிரோன் இருந்தால் மெல்லிய தசையையும் குறைந்த கொழுப்பையும் கொண்டிருப்பீர்கள்.

திடமான எலும்புகள்

திடமான எலும்புகள்

டெஸ்டோஸ்டிரோனால் கிடைக்கும் மற்றொரு சிறந்த உடல்நல பலன் - ஆரோக்கியமான எலும்புகளை பெறுவது. எலும்புகள் தேய்மானம் ஆகாமல் பாதுகாக்கும் ஹார்மோன் தான் டெஸ்டோஸ்டிரோன். இதனால் தான் எலும்புத்துளை நோய் எனப்படும் ஆஸ்டியோபோரோசிஸ் ஆண்களுக்கு அரிதாக ஏற்படுகிறது.

மனநிலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படாது

மனநிலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படாது

பெண்களின் மனநிலையை குறைக்கும் ஹார்மோன்களை போல் அல்லாமல், இனிமையான மனநிலையை அளிக்கும் பொறுப்பு டெஸ்டோஸ்டிரோனுடையது. மனநிலையின் ஏற்ற இறக்கத்திற்கும் டெஸ்டோஸ்டிரோனுக்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது. டெஸ்டோஸ்டிரோன் எப்போதுமே உங்களுக்கு நல்ல மனநிலையையே அளிக்கும்.

ஆரோக்கியமான இதயம்

ஆரோக்கியமான இதயம்

குறைந்த அளவிலான டெஸ்டோஸ்டிரோனால் பலவித இதய கோளாறுகள் ஏற்படும். இதய தசைகள் இரத்தத்தை வேகமாக பம்ப் செய்ய டெஸ்டோஸ்டிரோன் உதவும். இதயம் சேதமடையாமல் இருக்கவும் டெஸ்டோஸ்டிரோன் பாதுகாக்கும். அதனால் தான் டெஸ்டோஸ்டிரோன் ஆண்களுக்கு ஆரோக்கியமானது.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

5 Health Benefits Of Testosterone

Health benefits of testosterone can be missed easily. However, testosterone is healthy for you. To know the healing effects of testosterone, read on..