For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கத்தரிக்காயின் அட்டகாசமான சில மருத்துவ குணங்கள்!!

By Karthikeyan Manickam
|

தமிழ்நாட்டில் சாம்பார் என்று சொன்னாலே உடனடியாக கத்தரிக்காயின் மணம்தான் வீசும். ஹோட்டல்களிலும் சரி, திருமணப் பந்திகளிலும் சரி, வீடுகளிலும் சரி... சாம்பார் என்றாலே அது மறைமுகமாகக் கத்தரிக்காய் சாம்பார் என்று தான் பொருள். இது தவிர, கத்தரிக்காய் அவியல், கத்தரிக்காய் பொரியல், கத்தரிக்காய் மசியல், கத்தரிக்காய் பச்சடி என்று தமிழர் சமையல்களில் ஒரு அங்கமாகவே ஆகிவிட்டது இந்தக் காய்கறி.

இந்தியாவில் தொன்றுதொட்டு கத்தரிக்காயைப் பயன்படுத்தியதற்கான புராணகாலத்துச் சான்றுகள் உள்ளன. ஆனாலும் சீனாவில் தான் முதல் முதலாக கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் பயிரிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் அது ஆப்பிரிக்கா, ஐரோப்பா என்று பல பகுதிகளிலும் அறிமுகமாகி, பல நூற்றாண்டுகளுக்குப் பின் உலகம் முழுவதும் பரவலாகப் பயிரிடப்பட்டது.

இறால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

தற்போது, கத்தரிக்காய் உற்பத்தியில் இத்தாலி, துருக்கி, எகிப்து, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தான் முன்னணியில் உள்ளன. இந்தியாவில் மட்டுமின்றி, சீனா, இத்தாலி, மத்திய கிழக்கு மற்றும் மொராக்கோ நாடுகளிலும் கத்தரிக்காயை விதவிதமான டிஷ்ஷாகப் பயன்படுத்துகிறார்கள்.

கத்தரிக்காயின் தாவரவியல் பெயர் சொலானம் மெலோஞ்சினா என்பதாகும். சொலானாசியே என்ற குடும்ப வகையைச் சேர்ந்த கத்தரிக்காய், முட்டை செடி மற்றும் ஆபர்ஜீன் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. பல வடிவங்களிலும் வண்ணங்களிலும் கத்தரிக்காய் கிடைத்தாலும், முட்டை வடிவம் அல்லது நீளமாக இருக்கும் கத்தரிக்காய்கள் தான் அதிகம் பயிரிடப்படுகின்றன.

முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் 10 நன்மைகள்!!!

கத்தரிக்காயின் தோல்கள் மிகவும் பளபளப்பாக இருக்கும். அதன் உள்பகுதி பஞ்சு போன்று மிருதுவாக இருக்கும். உள்ளே, அதன் விதைகள் அடுக்கி வைக்கப்பட்டது போல அடர்ந்து வரிசையாகக் காணப்படும். இத்தகைய கத்தரிக்காய் நம் உடல் நலத்திற்கு எந்த அளவிற்குப் பயன்படுகிறது என்பது குறித்து இப்போது நாம் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

22 Amazing Health Benefits Of Eggplant

Eggplants come in a variety of shapes and colors. It is otherwise called as brinjal. It is one of the amazing vegetable that contains lots of nutrients. Here are some of the health benefits of eggplant/brinjal. Take a look...
Desktop Bottom Promotion