For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலில் தங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்க உதவும் 14 சிறந்த வழிகள்!

By Boopathi Lakshmanan
|

அதிகமான கொழுப்பு உடம்பில் சேர்ந்துவிட்டதா? இதை குறைப்பதற்கான வழிகளை மேற்கொண்டுள்ளீர்களா? இதனுடன் சேர்த்து உணவையும் எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் இந்த பகுதியில் பார்ப்போம். கொழுப்பை கரைக்கும் செயலில் உதவும் உணவுகள் கடைகளில் எளிதாக கிடைக்கின்றன.

ஆனால் மற்றவர்கள் சொல்வதை கேட்டு அதே முறையை பின்பற்றினால் உங்களுக்கும் அதே வகையில் குறையும் என்று எதிர்பார்க்க முடியாது. அவர்களின் கொழுப்பு குறைவதற்கு வேறு ஏதாவது காரணம் இருந்தாலும், அவர்களுக்கு சில நேரங்களில் தெரியாமல் போய்விடும்.

அவசியம் படிக்க வேண்டிவை: இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான சிறந்த 25 வழிகள்!!!

மேலும் அவர்கள் அதற்கு தவறான ஒரு காரணத்தை நினைத்துக் கொண்டு, அதையும் உங்களுக்கு கூற வாய்ப்புகள் அதிகம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் உங்கள் எடையை குறைக்க உதவும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.

மாரடைப்பை தடுக்க 30 எளிய வழிகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஓட்ஸ்

ஓட்ஸ்

முதல் படியாக உடல் எடையை குறைக்க உதவுவது ஓட்ஸ். இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஒரு கப் ஓட்ஸை காலை உணவாக சாப்பிடலாம் அல்லது ஓட்ஸ் கலந்த பயிர் வகைகளை காலை உணவாக சாப்பிடலாம். மேலும் அத்துடன் வாழைப்பழம் அல்லது ஸ்ட்ராபெர்ரிகளை சேர்த்துக் கொள்ளலாம். ஓட்ஸ் இரண்டு கிராமாக இருந்தால் பழங்களை சேர்த்தால் கூடுதல் அரை கிராம் ஆகிவிடும். தற்போதைய அறிவியல் கணிப்புகளின் படி ஏறத்தாழ ஒரு நாளைக்கு 15 முதல் 30 கிராம் வரை நார்ச்சத்தை சாப்பிட வேண்டும் என்றும், குறிப்பாக அதில் 10 முதல் 15 கிராம் கரையும் நார்ச்சத்து இருக்க வேண்டும் என்றும் சொல்கிறது.

பார்லி மற்றும் முழு தானிய வகைகள்

பார்லி மற்றும் முழு தானிய வகைகள்

பார்லி மற்றும் இதர தானிய வகைகள் இதய நோயிலிருந்து நம்மை காக்க வல்லதாய் இருக்கின்றன. ஏனெனில் இதில் அதிக அளவு கரையும் நார்ச்சத்து உள்ளது.

பீன்ஸ்

பீன்ஸ்

கரையும் நார்ச்சத்து நிறைந்த காய்கறி பீன்ஸ் ஆகும். இதை உண்டால் செரிப்பதற்கு அதிக நேரம் எடுக்கும். இதனால் தான் உடலை குறைக்க விரும்புபவர்கள் பீன்ஸை சாப்பிடுகின்றனர். கிட்னி பீன்ஸ் வகையிலிருந்து நேவி பீன்ஸ், பிளாக் ஐட், கார்பான்சோஸ், அவரை, பட்டாணி ஆகிய பல வகையான பீன்ஸ்களும் உள்ளன. இதை தயாரிப்பதற்கும் பல வழிகள் உள்ளன.

வெண்டைக்காய் மற்றும் கத்தரிக்காய்

வெண்டைக்காய் மற்றும் கத்தரிக்காய்

இவை இரண்டும் குறைந்த கலோரிகளை கொண்டவையாகும். இதில் அதிக அளவு கரையும் நார்சத்து உள்ளது.

வால்நட்ஸ்

வால்நட்ஸ்

இந்த பருப்புக்களை உண்பது இதய நோயை கட்டுப்படுத்தும். அதிலும் ஒரு நாளைக்கு இரண்டு அவுன்ஸ் பருப்புகளை சாப்பிடுவதன் மூலம் கொழுப்பை குறைக்க முடியும். இதில் உள்ள மற்ற 7 சதவிகித பருப்பு வகைகளில் உள்ள ஆரோக்கியமூட்டும் பொருட்கள் இதயத்தை பாதுகாக்கின்றன.

வெஜிடேபிள் எண்ணெய்

வெஜிடேபிள் எண்ணெய்

சூரியகாந்தி, கனோலா மற்றும் பல எண்ணெய்களையும், வெண்ணெய் மற்றும் பன்றி கொழுப்பால் செய்யும் எண்ணெய்களை தவிர்த்தோ அல்லது குறைத்து சாப்பிடுவதும், உடலின் குறைந்த அடர்த்தியுள்ள கொழுப்புகளை குறைக்கின்றன.

திராட்சை, ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி மற்றும் புளிப்பு பழங்கள்

திராட்சை, ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி மற்றும் புளிப்பு பழங்கள்

இப்பழ வகைகளில் உள்ள பெக்டின் என்ற பொருள் கரையக் கூடிய நார்ச்சத்தை கொண்டுள்ளது. இவை கொழுப்பை கரைக்க உதவுகின்றன.

ஸ்டாநோல்ஸ் மற்றும் ஸ்டீரால்ஸ் உள்ள உணவு வகைகள்

ஸ்டாநோல்ஸ் மற்றும் ஸ்டீரால்ஸ் உள்ள உணவு வகைகள்

மரத்தின் பசையிலிருந்து எடுக்கப்படும் ஸ்டனோல்ஸ் மற்றும் ஸ்டெரொல்ஸ் ஆகியவை உடலில் உள்ள கொழுப்புகளை உறிஞ்சிக் கொள்கின்றன. இவற்றை சாக்லெட்டுகள், வெண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள், கிரானோலா பார்ஸ் மற்றும் ஆரஞ்சு பழச்சாறு ஆகிய உணவு பொருட்களிலும் கலப்பதுண்டு. ஒரு நாளைக்கு இரண்டு கிராம் தவிர ஸ்டாநோல்ஸ் உண்டால், அது நமது குறைந்த அடர்த்தியுள்ள கொழுப்புகளை 12 சதவிகிதம் குறைக்க உதவுகிறது.

சோயா

சோயா

சோயா மற்றும் இதை மூலப்பொருளாக பயன்படுத்தி செய்யப்பட்ட சோயா பால், டோஃபு ஆகிய உணவுகள் உடல் எடையை குறைக்க ஏற்ற மிகவும் உறுதியான வழியாக உள்ளன. அதிலும் ஒரு நாளைக்கு 27 கிராம் சோயா சாப்பிடுவதன் மூலம் 6 முதல் 9 சதவிகிதம் குறைந்த அடர்த்தியுள்ள கொழுப்புகளை கரைக்க முடியும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

கொழுப்பு நிறைந்த மீன் வகைகள்

கொழுப்பு நிறைந்த மீன் வகைகள்

ஒரு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை மீன் சாப்பிடுவது கொழுப்பை குறைக்க உதவுகின்றன. ஏனெனில் மீனில் உள்ள ஒமேகா-3 குறைந்த அடர்த்தியுள்ள கொழுப்புகளை குறைக்க உதவுகிறது. இது இரத்தத்தில் உள்ள ட்ரைகிளிசரைடுகளை குறைத்து இதயத்தை காக்கின்றது. அதுமட்டுமல்லாமல் இதயத் துடிப்பை சீராக்கின்றது.

நார்ச்சத்து சேர்க்கை

நார்ச்சத்து சேர்க்கை

கரையக் கூடிய நார்ச்சத்து நிறைந்த உணவுகளை இணை சேர்கையாக எடுத்துக் கொண்டால், அது கொழுப்பை குறைக்க சிறந்த உதவியை செய்யும். மேட்டாமூசில்லில் உள்ள சைலியம் என்ற நார்ச்சத்து மிக்க பொருளை தினமும் இரண்டு டீஸ்பூன் உண்டு வரலாம். லாக்சேட்டிவ்களில் உள்ள ஒருவகையான சைலியம் உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்க இது உதவுகிறது.

கொழுப்பு மிக்க உணவுகள்

கொழுப்பு மிக்க உணவுகள்

மாட்டுக்கறி, பால் மற்றும் பால் கொண்டு செய்யப்பட்ட பொருட்கள், தேங்காய் மற்றும் பனை எண்ணெய் ஆகியவற்றால் கொழுப்பானது உடலிலேயே தங்கி விடுகிறது. இத்தகைய உணவுகளை குறைத்தால், உடலில் கொழுப்பு சேர்வது குறையும். இதற்கு பதிலாக குறைந்த கொழுப்பு உள்ள பால், ஆலிவ் எண்ணெய் அல்லது வெஜிடேபிள் எண்ணெய் ஆகியவற்றை உண்பதால் கொழுப்பு உடலில் சேர்வதை குறைக்கலாம். அதுமட்டுமல்லாமல் வெண்ணெய்க்கு பதிலாக மார்கரின் (செயற்கை வெண்ணெய்), மீன் அல்லது கோழியை பொரிக்காமல் சுட்டு சாப்பிடலாம்.

டிரான்ஸ் கொழுப்பு

டிரான்ஸ் கொழுப்பு

சாச்சுரேட்டட் கொழுப்பை போல டிரான்ஸ் கொழுப்பு வகையும் குறைந்த அடர்த்தியுள்ள கொழுப்புகளை அதிகப்படுத்துகிறது. இதனால் நல்ல கொழுப்பு உடலில் சேர்வதில் சிரமம் ஏற்படுகிறது. அது மட்டுமல்லாமல் இரத்த குழாய்களில் இரத்தத்தை உறையவும் இது வகை செய்கிறது. ஆகையால் ஒரு நாளைக்கு அதிகபட்சம் இரண்டு கிராம் டிரான்ஸ் கொழுப்பை உட்கொள்ளலாம். இதை குறைவாக சாப்பிட்டாலும் உடலுக்கு நல்லது.

எடை மற்றும் உடற்பயிற்சி

எடை மற்றும் உடற்பயிற்சி

அதிக எடையும், குறைந்த உடற்பயிற்சியும் இரத்தத்தில் உள்ள கொழுப்புகளை உடலிலேயே தங்க செய்கின்றது. அதிக எடையுடன் இருப்பதால், கெட்ட கொழுப்புகள் சேரவும், நல்ல கொழுப்பு குறையவும் துவங்கும். ஒரு வேளை நீங்கள் அதிக எடையுடன் இருந்தால், உடற்பயிற்சி செய்து நல்ல கொழுப்புகளை சேர்த்து, குறைந்த அடர்த்தியுள்ள கொழுப்புகளை உடனடியாக நீக்குங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

14 Ways To Decrease Your Bad Cholesterol Level

If you are looking for a natural way to decrease your cholesterol additionally to controlling what you eat and working out there are tones of dietary supplements on the market that claim to do the trick.
Desktop Bottom Promotion