For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க சில வழிகள்!!!

By Super
|

வேகமாக ஓடும் இன்றைய உலகத்தில் மக்களின் வாழ்க்கைத் தரம், உணவுப்பழக்கம் மற்றும் வேலை பார்க்கும் நேரம் என அனைத்தும் மாறி விட்டது. மேலும் தூய்மையில்லாத சுற்றுச்சூழல் மத்தியில் வாழ்ந்து, ஆரோக்கியமில்லாத உணவுகளை உண்ண ஆரம்பித்துவிட்டோம். உணவால் நாம் இழந்து வரும் பெரிய சொத்து என்ன தெரியுமா? நம் உடல் ஆரோக்கியம் தான். ஆம், இதனால் சிறிய வயதிலேயே பலரும் பல வியாதிகளுக்கு உள்ளாகின்றனர். அவைகள் சாதாரண சிறிய வியாதிகளில் ஆரம்பித்து, உயிரை வாங்கும் பெரிய வியாதிகள் வரை அடங்கும்.

அவைகளில் முக்கியமான ஒன்று தான் இரத்த அழுத்தம். மிகவும் ஆபத்தான இந்த நோயை சரிவர கவனித்து தடுக்க வேண்டும். இந்த நோய் குணமாக மருத்துவ துறையின் மேல் மட்டும் நம்பிக்கை வைத்திருந்தால் போதாது. அதையும் மீறி இதனை எதிர்த்து நிற்க ஆரோக்கியமான வாழ்வை வாழ்ந்து, இதனை தடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இப்போது அதை எப்படி செய்ய வேண்டும் என்று தானே கேட்கிறீர்கள்? இதோ உங்களுக்காக பட்டியலிட்டுள்ளோம். படித்து பயன்பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எடையின் மேல் கவனம் வேண்டும்

எடையின் மேல் கவனம் வேண்டும்

அதிக எடையுடன் இருந்தால், முக்கியமான பல நோய்களால் அவதிப்பட வேண்டியிருக்கும். அதில் ஒன்று தான் இரத்த அழுத்தம். உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளவும், இவ்வகை ஆபத்தான நோய்களில் இருந்து பாதுகாப்பாக இருக்கவும், உடற்பயிற்சியில் ஈடுபட்டு உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளுங்கள். சோம்பேறித்தனத்தால் உடற்பயிற்சி செய்வதை தவிர்த்தால், உடல் ஆரோக்கியம் கண்டிப்பாக பாதிக்கப்பட்டுவிடும்.

மன அழுத்தத்தை குறைக்கவும்

மன அழுத்தத்தை குறைக்கவும்

இரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கு மற்றொரு முக்கிய காரணமாக விளங்குவது மன அழுத்தம். இதனால் ஏற்பட போகும் பாதிப்புகளை தவிர்க்க மன அழுத்தத்தை எப்படி குறைக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். குறிப்பாக இதனை யோகா, தியானம், இசை போன்ற வழிகள் மூலம் கட்டுப்படுத்தலாம்.

உப்பின் சேர்க்கையை குறைக்கவும்

உப்பின் சேர்க்கையை குறைக்கவும்

குறிப்பிட்ட வயதிற்கு பிறகு உணவில் உப்பின் சேர்க்கையை கட்டுப்படுத்த வேண்டியது முக்கியமாகும். அதனை அசால்டாக எண்ணிக் கொள்ளக்கூடாது. இரத்த அழுத்தம் கூடுவதற்கு, உப்பு மற்றும் சோடியமும் ஒரு காரணமாகும். அதனால் அதன் பயன்பாட்டை குறைத்தால், நோய்வாய்ப்படுதலில் இருந்து தப்பிக்கலாம்.

மதுபானம் குடிப்பதை குறைக்கவும்

மதுபானம் குடிப்பதை குறைக்கவும்

மதுபானத்தை குறைந்த அளவில் குடிக்கும் போது, அது உடலுக்கு நன்மையை விளைவிக்கும். ஆனால் அதிக அளவில் குடிக்கும் போது இரத்த அழுத்தம், நுரையீரல் பாதிப்பு மற்றும் மூளை பாதிப்பு போன்றவைகள் ஏற்படும். ஆகவே ஆரோக்கியமான வாழ்வு வேண்டுமானால் மதுபானத்தை தவிர்க்கவும்.

பழங்களும் காய்கறிகளும்

பழங்களும் காய்கறிகளும்

தினசரி உணவில் நற்பதமான பழங்கள் மற்றும் காய்கறிகளையும் சேர்த்துக் கொண்டால், உடலுக்கு தேவையான பொட்டாசியம் கிடைக்கும். இது இரத்த கொதிப்பை கட்டுப்பாட்டில் வைக்கும். எனவே தினமும் நற்பதமான காய்கறி மற்றும் பழங்களுடன் ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுங்கள்.

சுறுசுறுப்புடன் இருங்கள்

சுறுசுறுப்புடன் இருங்கள்

உடலுக்கு வேலை கொடுப்பதை அதிகரித்தால், உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக கார் பயன்படுத்துவதற்கு பதிலாக நடங்கள். குறிப்பாக உங்களால் செய்து முடிக்கக்கூடிய எளிய வேலைக்கு எல்லாம் உதவி நாடாதீர்கள். உங்கள் வேலையை நீங்களே உடலை வளைத்து செய்யுங்கள். இது இரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.

புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுங்கள்

புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுங்கள்

மதுபானத்தை போலவே, புகைப்பிடிக்கும் பழக்கமும் உடலுக்கு மிகவும் தீங்கானது. புகைப்பிடிப்பதால் இரத்த அழுத்தம், வாதம், புற்றுநோய் போன்ற பல கொடிய வியாதிகள் வந்தடையும்.

சீரான முறையில் உடல் பரிசோதனை

சீரான முறையில் உடல் பரிசோதனை

குடும்ப மருத்துவரை அணுகி சீரான இடைவேளையில் உடல் பரிசோதனை செய்து கொண்டால், முக்கியமான நோய்களில் இருந்து விலகி இருக்கலாம். ஆரோக்கியமான உடலை பெற ஒழுக்கமான வாழ்வு முறை அவசியமான ஒன்றாகும். அதிலும் உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையில் சிறிய மாற்றம் ஏற்பட்டால் கூட, உடல் பாதிப்படைய தொடங்கும். ஆகவே சிறிய வயதிலிருந்தே இதில் எல்லாம் கவனமாக இருந்தால், வருங்காலத்தில் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ways to Keep High Blood Pressure at Bay

High blood pressure is one of the most common health problems today and needs to be watched and prevented.
Story first published: Friday, October 4, 2013, 18:58 [IST]
Desktop Bottom Promotion