கர்ப்பவாய் புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள்!!!

Posted By: Staff
Subscribe to Boldsky

இன்றைய காலத்தில் பெண்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று தான் கர்ப்பவாய் புற்றுநோய் (Cervical Cancer). இந்த நோய் இன்று பல பெண்களை சுலபமாக தாக்குகிறது. கர்ப்பவாய் புற்றுநோயின் அறிகுறியை ப்ரீ-மென்ஸ்சுரல் சிண்ட்ரோம் அல்லது கருமுட்டை வெளிப்படுதலின் போது ஏற்படும் வலி என தவறாக நினைக்க வாய்ப்புள்ளது. கர்ப்பவாய் புற்றுநோயில் உள்ள ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால், நோய் முற்றும் வரை நோய்க்கான அறிகுறிகள் சாமானியமாக வெளிப்படாது. இருப்பினும் இது ஒவ்வொரு பெண்களை பொறுத்து மாறுபடும்.

கர்ப்பவாய் புற்று நோய் என்றால் என்ன?

கர்ப்பவாய் (Cervix) என்பது கர்ப்பப்பைக்கு கீழே பெண்ணுறுப்பை தொடர்பு கொள்ளும் பகுதியாகும். அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் 12,000 பெண்கள் கர்ப்பவாய் புற்றுநோயினால் பாதிக்கப்படுகிறார்கள். இது பெரும்பாலும் பாபில்லோமா எனப்படும் கிருமியால் ஏற்படும் தொற்றினால் ஏற்படக்கூடியதாகும். இதனை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டுப்பிடித்தால் கண்டிப்பாக குணப்படுத்தலாம்.

இப்போது அந்த கர்ப்பவாய் புற்றுநோயின் அறிகுறிகளையும், அதற்கான சிகிச்சையையும் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதீத இரத்தக் கசிவு

அதீத இரத்தக் கசிவு

கர்ப்பவாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பெண்ணுறுப்பில் இயல்புக்கு மீறிய இரத்தக் கசிவு ஏற்படும். மாதவிடாயின் போது இது அதிகமாக இருக்கும்.

வெண்ணிற கழிவு அதிகளவில் இருக்கும்

வெண்ணிற கழிவு அதிகளவில் இருக்கும்

பெண்ணுறுப்பில் இருந்து வெளியேறும் வெண்ணிற கழிவு அதிகமாக இருந்தால். இது கர்ப்பவாய் புற்றுநோய்க்கான மற்றொரு அறிகுறியாகும். இதுவும் ஒரு பெண்ணிலிருந்து மற்றொரு பெண்ணுக்கு மாறுபடும். சிலருக்கு இந்த கழிவு அதிக துர்நாற்றத்தை ஏற்படுத்தலாம். இன்னும் சிலருக்கு கெட்டியாக வெளியேறலாம். ஆகவே மருத்துவரை அணுகும் போது, தவறாமல் இயல்புக்கு மீறி நடக்கும் இவைகளைப் பற்றி குறிப்பிடவும்.

இடுப்பு பகுதியில் வலியெடுத்தல்

இடுப்பு பகுதியில் வலியெடுத்தல்

எப்போதும் நடக்கும் மாதவிடாயின் போது இடுப்பு பகுதி வலிக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் கர்ப்பவாய் புற்றுநோய் இருந்தால், இந்த வலி நிச்சயம் ஒவ்வொரு முறையும் வரும். அப்படி வந்தால் சில மணி நேரம் நீடிக்கும். மேலும் இத்தகைய வலி லேசாகவும் இருக்கலாம் அல்லது அதிகமாகவும் இருக்கலாம்.

சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படுதல்

சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படுதல்

நீர்ப்பையில் வலி ஏற்பட்டாலோ அல்லது சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்பட்டாலோ, அது கர்ப்பவாய் புற்றுநோயின் முற்றிய நிலையாகும். புற்றுநோய் நீர்ப்பையை சுற்றி பரவி விட்டால், இந்த அறிகுறி ஏற்படும்.

இரத்தக் கசிவு ஏற்படுதல்

இரத்தக் கசிவு ஏற்படுதல்

உடலுறவு கொண்டப் பின் அல்லது இடுப்பு பகுதி சோதனைக்கு பின் இரத்தக் கசிவு ஏற்பட்டால், அது கர்ப்பவாய் புற்றுநோயாகும். இந்த செயல்களில் ஈடுபடும் போது, கர்ப்பவாயில் எரிச்சல் ஏற்படுவதால் தான் இரத்தக் கசிவு ஏற்படுகிறது. கர்ப்பவாய் ஆரோக்கியமாக இருந்தால், இரத்தக் கசிவு லேசாக இருக்கும்.

அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை

புற்றுநோய் இரண்டாம் நிலை வரை உள்ளதென்றால், புற்றுநோய் பாதித்த இடத்தை அறுவை சிகிச்சை மூலமாக நீக்குவார்கள். அறுவை சிகிச்சை என்றால் கர்ப்பப்பையை நீக்குவதாகும் (hysterectomy). மேலும் அதனுடன் சேர்ந்து, அதனை சுற்றியுள்ள தசைகளும் நீக்கப்படும். குறிப்பாக இந்த இடத்தில் உள்ள சினைப்பை, ஃபலோபியன் குழாய் மற்றும் நிணநீர் முடிச்சுகள் போன்றவைகளும் நீக்கப்படும்.

கதிர் வீச்சு

கதிர் வீச்சு

அறுவை சிகிச்சைக்கு பிறகு எஞ்சியிருக்கும் புற்றுநோய் அணுக்களை வெளிப்புற கதிர்வீச்சு சிகிச்சை மூலமாக நீக்கலாம். உட்புற கதிர்வீச்சு (brachytherapy) என்றால் புற்றுநோய் கட்டியில் நேரடியாக கதிர் இயக்கப் பொருட்களை வைத்து, புற்றுநோய் அணுக்களை நீக்குவது. பொதுவாக கதிர்வீச்சு சிகிச்சை ஹீமோதெரபியுடன் சேர்ந்து அளிக்கப்படும்.

ஹீமோதெரபி

ஹீமோதெரபி

கர்ப்பவாய் புற்றுநோய் உடலில் பரவி முற்றிய நிலைக்கு சென்று விட்டால், ஹீமோதெரபியை கையாளுவதை தவிர வேறு வழியில்லை. கீமோதெரபி என்பது புற்றுநோய் அணுக்களை அழிப்பதற்கு நச்சுத் தன்மையுள்ள மருந்துகளை பயன்படுத்துவது. கீமோதெரபி செய்வதால் சில பக்க விளைவுகளும் ஏற்படும். அயர்ச்சி, முடி கழிதல், பசியின்மை, குமட்டல், வாந்தி மற்றும் சிராய்ப்புப் புண் என இவையாவுமே இதன் பக்க விளைவுகள் தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Symptoms of Cervical Cancer and Treatment

Cervical Cancer symptoms are often misinterpreted as PMS or Ovulation pains. The biggest difficulty in Cervical cancer is that it hardly showsany symptoms, not until it reaches a advanced stage, though it differs from woman to woman. Here symptoms and treatment of cervical cancer was given.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter