Latest Updates
-
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி!
உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள உதவும் 9 உணவு கலவைகள்!!!
உடல் எடை கூடுவதற்கும் குறைவதற்கும் முக்கிய காரணியாக விளங்குகிறது உணவு. சில உணவுகள் எடையை அதிகரிக்க செய்யும் போது சில வகை உணவுகள் எடையை குறைக்க உதவும். உடல் எடை மட்டுமல்லாது நோய் எதிர்ப்பு சக்தி, சரும பராமரிப்பு போன்றவற்றிற்கும் இவை பயன்படும்.
உடல் ஆரோக்கியத்திற்கு வழி வகை செய்யும் பல உணவுகளை பற்றி படித்திருப்போம், அதனை பின்பற்றியும் வருவோம். ஆனால் சில பொருட்கள் சேரும் போது, அதன் கூட்டு நமக்கு மேலும் சில பயன்களை அளிக்கலாம். அப்படிப்பட்ட கூட்டை பற்றி நம்மில் பல பேர் அறிந்திருக்க மாட்டோம். ஆகவே ஆரோக்கியமாகவும், கட்டுகோப்பாகவும் வைப்பதற்கு 9 வகையான உணவு கலவைகளைப் பற்றி கொடுத்துள்ளோம். சில வகை உணவுக் கலவைகள் கேட்பதற்கு விசித்திரமாக இருக்கலாம். ஆனால் அவை உடலுக்கும், சருமத்திற்கும் மாயாஜாலங்கள் நிகழ்த்தப் போவது உறுதி. அதில் சில வகைகள் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
கீழே கொடுக்கப்பட்ட இந்த உணவுகள் அனைத்தும் ஏதாவது ஒரு விதத்தில் நம் டயட்டின் ஒரு பகுதியாக விளங்கும். அதனால் நல்ல விளைவுகள் ஏற்பட இதனை நாடிடுங்கள்.

முட்டைகளும்... மாம்பழமும்...
கிடைக்கும் பலன்: திடமான சருமம்
நல்ல திடமான சருமம் கிடைப்பதற்கு பல அழகுப் பொருட்களை கொண்டு சருமத்தைப் பராமரிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. கொஞ்சம் முட்டைகள் மற்றும் மாம்பழங்களை உண்ணுங்கள். முக்கியமாக சீசன் காலத்தில் தவறாமல் சாப்பிடுங்கள். முட்டைகளில் இயற்கையாகவே அமினோ அமிலம் வளமையாக உள்ளதால், சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கும் கொலாஜென்னை அது உருவாக்க உதவும். மாம்பழத்தில் வைட்டமின் சி வளமையாக உள்ளதால், அவை இந்த அமிலத்தோடு கலக்கும் போது, கொலாஜென் உற்பத்தியை ஊக்குவிக்கும். இதனால் இவை சரும தோற்றத்தை வெகுவாக மேம்படுத்தும்.
சரியான முறை: காலை உணவு சிறப்பாக அமைய ஒரு ஆம்லெட்டை நற்பதமான மாம்பழ துண்டுகளுடன் உண்ணுங்கள். இது அன்றைய நாளுக்குரிய வைட்டமின் சி முழுவதையும் உங்களுக்கு அளிக்கும்.

குடைமிளகாய் மற்றும் கருப்பு பீன்ஸ்
கிடைக்கும் பலன்: நோய் எதிர்ப்பு சக்தி
இவைகள் காய்கறி கடையின் தோற்றத்தை அழகுபடுத்தும் விலை உயர்ந்த வகையறாவாகும். ஆனால் இவைகளை வாங்குவதற்கு நல்ல காரணங்கள் உண்டு. கொஞ்சம் குடைமிளகாய் சேர்த்துக் கொள்வதால், இரும்புச்சத்தை உண்டாக்கி, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் கருப்பு பீன்ஸில் உள்ள இருப்புச்சத்தை, நம் உடல் ஈர்த்துக் கொள்வதில் சிரமப்படும். இருப்பினும் வைட்டமின் சி வளமையாக உள்ள குடைமிளகாய், கருப்பு பீன்ஸில் உள்ள இரும்புச்சத்தை சுலபமாக உடம்பிற்குள் நுழைய வைக்கும்.
சரியான முறை: இணையதளத்தில் தேடி பார்த்தால், பீன்ஸ் மற்றும் குடை மிளகாயை வைத்து சமைக்க பல உணவு வகைகளை காணலாம். அதனை பார்த்து சுவைமிக்க உணவுகளை தயார் செய்யுங்கள்.

வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் மற்றும் தக்காளி
கிடைக்கும் பலன்: நோய்களில் இருந்து பாதுகாக்கும்
தக்காளியில் நான்கு முக்கிய கரோடினாய்டுகள் மற்றும் மூன்று முக்கிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அடங்கியுள்ளது. இது புற்றுநோய் மற்றும் இதய நோய்களை எதிர்த்து போராடும். இந்த பாதுகாப்பான இரசாயனங்கள் கூடுதல் வெர்ஜின் ஆலிவ் எண்ணெயுடன் கலக்கும் போது, சுலபமாக உடலில் ஊடுருவும். அதிலும் இவற்றை ஒன்றாக கலக்கும் போது, அதில் ஆரோக்கியமான மோனோ சேச்சுரேட்டட் கொழுப்புகள் கிடைக்கும்.
சரியான முறை: தக்காளி தோளில் பைட்டோ ரசாயனங்கள் உள்ளதால், அதனை நீக்காதீர்கள். கூடுதல் வெர்ஜின் ஆலிவ் எண்ணெயில் அதிக பயனுள்ள சேர்வைகள் உள்ளது. அது புளித்து போகாமல் இருக்க, அதனை வெளிச்சம் மற்றும் வெப்பத்தில் இருந்து பாதுகாப்பாக வைத்திடுங்கள்.

ப்ராக்கோலி மற்றும் தக்காளி
கிடைக்கும் பலன்: புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும்
இவை இரண்டுமே புற்றுநோய் எதிர்ப்பு குணங்களை கொண்டவை. ஆனால் இவை இரண்டும் ஒன்று சேரும் போது, இந்த குணம் பன்மடங்கு அதிகமாக வேலை செய்கிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது. இவைகளை தனித்தனியாக சாப்பிடுவதை விட, இரண்டையும் ஒரே நேரத்தில் சேர்த்து சாப்பிடும் போது, புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சி கட்டுப்படுத்தப்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
சரியான முறை: ஒன்றரை கப் ப்ராக்கோலியை நற்பதமான இரண்டரை கப் தக்காளியுடன் கலந்து, பீட்சா அல்லது நூடுல்ஸ் உடன் சேர்த்து உண்ணுங்கள்.

ஓட்ஸ் மற்றும் ஸ்ட்ராபெர்ரி
கிடைக்கும் பலன்: ஆரோக்கியமான இதயம்
ஓட்ஸில் அவெனான்த்ராமைட்ஸ் மற்றும் ஃபீனாலிக் அமிலம் என இரண்டு முக்கிய பைடோ ரசாயனங்கள் அடங்கியுள்ளது. இவைகள் வைட்டமின் சி-யுடன் இணையும் போது, கெட்ட கொழுப்பினால் ஏற்படும் தீமைகளை கட்டுப்படுத்தும். மேலும் நெஞ்சு வலி ஏற்பட காரணமாகும் இரத்த உறைக் கட்டிகள் உருவாகாமலும் தடுக்கும்.
சரியான முறை: அரை கப் நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி துண்டுகளை ஓட்ஸ் கஞ்சியுடன் சேர்த்து காலையில் உண்ணுங்கள்.

க்ரீன் டீ மற்றும் எலுமிச்சை
கிடைக்கும் பலன்: ஆரோக்கியமான இதயம்
இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கேடெகின்ஸ் என்ற சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் க்ரீன் டீ-யில் வளமையாக உள்ளது. இருப்பினும் இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளை 20 சதவீதம் வரை தான் நம் உடல் ஈர்த்துக் கொள்கிறது என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இதுவே க்ரீன் டீ-யுடன் எலுமிச்சை ஜூஸை பிழிந்து குடித்தால், நம் உடலில் கேடெகின்ஸ் அளவு 80 சதவீதம் வரை உயர்கிறது.
சரியான முறை: கிரீன் டீ தயார் செய்த பின், ஒரு முழு எலுமிச்சை பழத்தை அதில் பிழிந்து பருகுங்கள்.

லவங்கப் பட்டை மற்றும் முழு தானிய டோஸ்ட்
கிடைக்கும் பலன்: அதிக ஆற்றல் மற்றும் வேகமாக எடை குறைதல்
டோஸ்ட்டின் மீது லவங்கப் பட்டையை தூவி விட்டால் போதும், அது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவும். அதனால் ஆற்றல் குறைவு மற்றும் பசி ஆகிய பிரச்சனைகள் நீங்கும். லவங்கப் பட்டை வயிற்றில் உள்ள உணவுகள் காலியாகும் வேகத்தை கட்டுப்படுத்தும். அதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதும் கட்டுப்படுத்தப்படும் என்று அமெரிக்கன் ஜர்னல் ஆப் க்ளினிகல் நியூட்ரிஷன் என்ற பத்திரிக்கை, தான் நடத்திய ஆய்வை வெளியிட்டுள்ளது.
சரியான முறை: முழு தானிய ரொட்டியுடன் ட்ரான்ஸ் கொழுப்பு இல்லாத செயற்கை வெண்ணெய் மற்றும் ஒரு டீஸ்பூன் லவங்கப் பட்டை தூள் தூவி சாப்பிடவும்.

பூண்டும்... வெங்காயமும்...
கிடைக்கும் பலன்: ஓடு மொத்த உடல் பாதுகாப்பு
இந்த இரண்டு பொருட்களிலும் பல ஆர்கனோ சல்பர் சேர்க்கைகள் மற்றும் ஆரோக்கியமான இதயத்தை உருவாக்கும் ரசாயனங்களும் அடங்கியுள்ளது. இவை இரத்த உறைகட்டிகள் ஏற்படாமல் தடுக்கும். இதில் உள்ள பல பொருட்கள் கார்சினோஜென் நச்சுகளை உடலில் இருந்து நீக்கும்.
சரியான முறை: இந்திய உணவு பலவற்றிலும் இந்த இரண்டு பொருட்களின் சேர்க்கை கண்டிப்பாக இருக்கும். இருப்பினும், புதிதாக ஏதாவது செய்ய விரும்பினால், இவை இரண்டையும் சூப் அல்லது சாஸ் போன்றவைகளில் சேர்த்து உண்ணலாம்.

க்ரீன் டீ மற்றும் கருப்பு மிளகு
கிடைக்கும் பலன்: மெலிவான இடுப்பு சுற்றளவு
உடல் எடை குறைப்பதை பற்றி மறந்து விடுங்கள். உணவு அருந்திய பிறகு கொஞ்சம் கருப்பு மிளகு தூவிய, ஒரு கப் க்ரீன் டீயை பருகுங்கள். இந்த கூட்டு EGCG என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டை, உடல் ஈர்க்க துணை புரியும். டீயில் உள்ள இந்த முக்கிய ஆன்டி-ஆக்ஸிடன்ட் கலோரிகளை 130% வரை எரிக்க உதவும். க்ரீன் டீயில் உள்ள பொருட்கள் பசியை தூண்டும் மற்றும் பசியை அடங்கச் செய்யும் ஹார்மோன்களை தூண்டிவிடும் என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
சரியான முறை: அரை டீஸ்பூன் கருப்பு மிளகை ப்ரீன் டீயுடன் சேர்த்தால், டீயில் உள்ள பயனுள்ள பொருட்களை உடல் சுலபமாக ஈர்த்துக் கொள்ளும்.



Click it and Unblock the Notifications
