Just In
- 54 min ago
நாம் அதிகம் விரும்பி சாப்பிடும் இந்த உணவுகளில் எவ்வளவு கலோரி இருக்குன்னு தெரியுமா?
- 5 hrs ago
இன்றைய ராசிப்பலன் (03.03.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…
- 16 hrs ago
ஆரோக்கியத்திற்காக நீங்க சாப்பிடும் இந்த நட்ஸ் வகை உங்க உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்...ஜாக்கிரதை!
- 17 hrs ago
இந்த மந்திர வார்த்தைகள் உங்கள் திருமண வாழ்க்கையை அழகாக்குவதோடு அர்த்தமுள்ளதாகவும் மாற்றும்...!
Don't Miss
- Automobiles
டெஸ்லா மின்சார கார்கள் சீனாவில் கிடைப்பதைவிட மிக குறைந்த விலையில் கிடைக்கும்... சொன்னது யார் தெரியுமா?
- News
ஏன் சரத்குமார் இப்படி சொல்றாரு.. "அணி" உருவாகிறதாம்.. ஆனால் 3வது அணி கிடையாதாம்.. குழம்பும் கட்சிகள்
- Movies
தேர்தலும் தமிழ் சினிமாவும்...அரசியல்வாதிகளை கவனிக்க வைத்த படங்கள்
- Sports
பயப்படாதீங்க... எதுக்கு பயப்படணும்... திறமையை நம்புங்க... அணி வீரர்களுக்கு ஜோ ரூட் ஆலோசனை
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பாலுணர்ச்சியை அதிகரிக்கும் 7 முக்கிய எண்ணெய்கள்!!!
ஆயக்கலைகளை கற்றுக் கொள்ள ஒருவருக்கு ஒரு ஜென்மம் போதாது. செக்ஸ் வாழ்க்கையில் புதிது புதிதாக பலவற்றை சோதனை செய்து இன்பத்தை அதிகரிக்க ஆணும் பெண்ணும் முற்படுகிறார்கள். அப்படிப்பட்ட செக்ஸ் வாழ்க்கையை தூண்டவும், இன்பத்தை அதிகரிக்கவும் பல எண்ணெய்கள் உதவி புரிகிறது. செக்ஸூக்கு பைபிளாக விளங்கும் காமசூத்ராவில், இயற்கை வாசனை திரவியமான இட்டர் மற்றும் வாசனை எண்ணெய்களின் பயன்பாட்டை பற்றி, அதன் இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பழங்காலத்தில் இருந்தே இவ்வகை எண்ணெய்களை காம உணர்வை தூண்டுவதற்காக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த எண்ணெய்களில் இருந்து வரும் வாசனை தான் பிட்யூட்டரி சுரப்பியை தூண்டுகிறது. இது மறைமுகமாக காம உணர்வுகளை அதிகரிக்கிறது. இது தான் இந்த முக்கிய எண்ணெய்களை பயன்படுத்துவதின் விளைவாகும். நம் வேதங்களும் இதன் பயன்களைப் பற்றி வஜிகரனா டன்ட்ராவில் (மலட்டுத் தன்மை மற்றும் ஆண்மையை பற்றிய அறிவியல்) பறை சாற்றுகிறது. இப்போது எந்த எண்ணெய் வகைகளுக்கு பாலுணர்வை தூண்டும் குணம் உள்ளது என்று பார்ப்போம்.

ரோஜா எண்ணெய்
காதல் மற்றும் காமத்தின் கடவுளான அப்ரோடைட் (Aphrodite), தன் காதல் குகையை ரோஜாவின் இதழ்களை கொண்டு அலங்கரித்தது உங்களுக்கு தெரியுமா? அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஏன், எகிப்திய அழகியான கிளியோபட்ரா கூட குளிக்கும் போது ரோஜா இதழ்களை பயன்படுத்தினாராம். ரோஜா பூக்களால் செய்த எண்ணெய் செக்ஸ் விஷயத்தில் உங்களுக்கு ஏற்படும் பதட்டத்தை குறைக்கும். நம் உடம்பில் இருக்கும் சக்கரங்களில் நாலாவது சக்கரமாக விளங்கும் ஹார்ட் சக்கரத்தை நோக்கி இதன் குறி இருப்பதால், மன ரீதியான காதலையும் மற்றும் உடல் ரீதியான காதலையும் இது ஒன்றிணைக்கும்.

மல்லிகை எண்ணெய்
மல்லிகை எண்ணெயும் பாலுணர்வை தூண்ட உதவும் எண்ணெயாகும். அதற்கு காரணம் இது பாலுணர்வால் கிடைக்கும் மகிழ்ச்சியை அதிகரிப்பதாகும். இந்த மலரை பல காலங்களாக ஒருவரை பாலுணர்வு ரீதியாக மயக்குவதற்கு பயன்படுத்துகின்றனர். வளமை, அழகு மற்றும் இதமளிக்கும் பண்பை கொண்டுள்ள இந்த எண்ணெய், காமத்தின் அடுத்த கட்டத்தை அடைய நம்பிக்கையை அளிக்கிறது.

மனோரஞ்சித எண்ணெய் (Ylang-Ylang Oil)
இந்த அதி முக்கிய எண்ணெயும், மல்லிகை எண்ணெயின் குணத்தை கொண்டுள்ளது. அழகிய இந்த எண்ணெய் இனிமையான வாசனையுடன் திகழ்வதால், காம உணர்வை தூண்டும் வகையில் அமையும். இந்த எண்ணெய் ஆக்கத்திறனை அதிகரித்து, தம்பதிகள் மத்தியில் ஒருவர் மீது ஒருவருக்கு அதிகப்படியான கவர்ச்சியை உண்டாக்கும். அதற்கு ஒரு சொட்டு எண்ணெயை பஞ்சுருண்டையில் நனைத்து, கட்டில் அருகில் வைத்து விடுங்கள். அப்புறம் பாருங்கள் மந்திரத்தை.

சீரக எண்ணெய்
பாலுணர்வை தூண்டும் பண்புக்காக சீரக எண்ணெய் அவ்வளவாக புகழ் பெறாவிட்டாலும், இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் அளவுக் கடந்த நன்மைகளை தருகிறது. அதிலும் இது பெண்களுக்கான கருத்தரிப்புத் திறனை மேம்படுத்த உதவுகிறது. மேலும் ஆண்களுக்கு, இது ஈர்ப்பு உணர்வை ஏற்படுத்தி பாலுணர்வையும் தூண்டுகிறது.

க்ளாரி சேஜ் எண்ணெய் (Clary Sage Oil)
மற்ற எண்ணெய்களோடு ஒப்பிடுகையில், க்ளாரி சேஜ் எண்ணெய் முற்றிலும் மாறுபட்டது. இதற்கு அதிலிருந்து ஆசை வெறி கொண்ட வாசனை வருவதே காரணமாகும். அதிலும் இந்த எண்ணெய் மனதில் அமைதி ஏற்படுத்தி, பாலுணர்வை அதிகப்படியாக தூண்டும். ஆனால் கருவுற நினைத்தால், இந்த எண்ணெயை தவிர்க்க வேண்டும்.

கிராம்பு எண்ணெய்
மன அழுத்தத்தை போக்க வேண்டுமானால், இந்த எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும். இந்த எண்ணெய் எழுச்சியை தூண்டிவிடும். மேலும் இது உங்களை எளிதில் உணர்ச்சிக்கு ஆட்பட வைத்து, செக்ஸ் அனுபவத்தை எப்போதும் இல்லாத வகையில் அதிக திருப்தி அளிக்க உதவும்.

பட்சௌலி எண்ணெய் (Patchouli Oil)
பட்சௌலி எண்ணெய் கமகமக்கும் நறுமணத்தை பரப்பும் தன்மை கொண்டவை. இது ஆண், பெண் என இருவரையும் மயக்கும். இதனை க்ளாரி சேஜ், ஜெரேனியம் மற்றும் கர்ப்பூரவள்ளி எண்ணெய்களுடனும் கலந்து பயன்படுத்தலாம். இந்த எண்ணெய் மன அழுத்தத்தை நீக்க பயன்படுகிறது. அதனால் பாலுணர்வானது தானாக உயரத் தொடங்கும்.

எச்சரிக்கை
உங்களுக்கு இரத்தக் கொதிப்பு அல்லது சுவாச கோளாறு போன்று ஏதாவது மருத்துவ பிரச்சனை இருந்தால், மருத்துவரை கலந்து ஆலோசிக்காமல் இவ்வகை எண்ணெய்களை பயன்படுத்தக்கூடாது. மேலும் இவ்வகை எண்ணெய்களை உட்கொள்ளவே கூடாது. அதே போல் நெருப்பிற்கு அருகிலும் இதனை வைக்க கூடாது.