Latest Updates
-
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்..
அடேங்கப்பா... கோதுமைப்புல் பொடில இவ்வளவு நன்மை இருக்கா?
கோதுமைப்புல் (Wheatgrass) மிகச்சிறந்த ஆரோக்கிய மற்றும் மருத்துவத் தன்மைகளைக் கொண்டுள்ளது. நமது உடல் மிகச்சிறப்பாக இயங்குவதற்குத் தேவையான 19 அமினோ அமிலங்களும், 92 தாதுக்களும், இதில் உள்ளன. இது சாதாரணமாக ரொட்டிக் கோதுமை என்று அழைக்கப்படுகிறது. செயற்கையாக ஒளியூட்டப்பட்ட உள்கூடங்களிலும், கண்ணாடிக் கூரை பொருத்தப்பட்ட கூடங்களிலும் இது பயிரிடப்படுகிறது.
கோதுமைப்புல் பொடி/வீட் கிராஸ் பவுடர் (Wheatgrass Powder) என்பது கோதுமைப்புல்லின் இலைகளை அரைத்து சாறெடுத்து, பின் அதை உலர வைத்து பொடி செய்யப்படும் ஒரு உணவுப்பொருளாகும். வயலில் இயற்கையாக வளர்ந்துள்ள மூன்று மாதம் நிரம்பிய கோதுமைப்புல்லின் இலைகளை சாறு எடுத்து, நீர்ப்பதம் போக நன்கு உலர வைத்து, அதிலிருந்து கோதுமைப்புல் பொடி தயாரிக்கப்படுகிறது.
இந்த பொடி மிகுந்த சத்து நிறைந்தது என்று கூறப்படுவதற்குக் காரணம், மேலே கூறப்பட்டுள்ள சத்துக்களுடன், இதில் குளோரோஃபில் (chlorophyll) என்னும் பச்சையமும் மிகவும் அதிகமாக நிரம்பியுள்ளது தான். கோதுமையில் இருப்பது போன்று, இதில் க்ளூட்டன் (gluten) என்பது இல்லாதது ஒரு சிறப்பம்சமாகும். கோதுமைப்புல் பொடியை தண்ணீரில் கலந்து, சத்து பானமாகவும் அல்லது வேறு ஏதாவது ஜூஸ்களில் கலந்தும் அருந்தலாம். கோதுமைப்புல் செடியில் உள்ள அனைத்து சத்துக்களும், கோதுமைப்புல் சாற்றிலும் உள்ளன. இப்போது அந்த கோதுமைப்புல் பொடியின் நன்மைகளைப் பார்ப்போம்.

செரிமானத்தில் உதவுகிறது
கோதுமைப்புல் பொடியானது உணவு செரிப்பதை எளிதாக்குகிறது. இதில் அடங்கியுள்ள சில காரத்தன்மையுள்ள தாதுக்களினால், வயிற்றிலுள்ள புண்கள், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு ஆகியவை குணமாகின்றன. முக்கியமாக இதில் உள்ள மக்னீசியமானது மலச்சிக்கலைக் குணப்படுத்துகிறது.

சிவப்பணு மற்றும் வெள்ளையணுக்களை உற்பத்தி செய்ய உதவுகிறது
கோதுமைப்புல் பொடியில் நிறைந்துள்ள ஏராளமான குளோரோஃபில்கள், இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகப்படுத்த உதவுகின்றன. அதிகமான ஹீமோகுளோபின் உற்பத்தி செய்யப்படுவதால், இரத்தமானது அதிகமான ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லவும், அதன் மூலம் உடல் மேலும் சுறுசுறுப்பாக இயங்கவும் உதவுகிறது. எனவே வீட் கிராஸ் ஜூஸானது இரத்தத்தில் சிவப்பணுக்களையும் வெள்ளையணுக்களையும் உற்பத்தி செய்வதில் மிகவும் உதவுகிறது.

எடைக் குறைப்பில் உதவுகிறது
கோதுமைப்புல் பவுடரை ஜூஸ்களிலும், பழரசங்களிலும் சேர்க்கலாம் என்பதால், இதனை மற்ற உணவுப் பொருட்களில், வாசனைப் பொருளாகவும், மாற்று உணவாகவும் சேர்க்க முடியும். மேலும் இது உடலுக்கு அதிகமான ஆற்றலை அளிக்கிறது. உடற்பயிற்சி நேரங்களில், நீண்ட நேரத்திற்கு உடற்பயிற்சி செய்ய உதவுகிறது. இதனால் உடல் எடை குறைய வழிவகுக்கிறது. மேலும் தைராய்டு சுரப்பிகளைத் தூண்டி, எடை அதிகரிப்பதைக் குறைக்கிறது. இதன் மூலம் வளர்சிதை மாற்றம் அதிகரித்து, உடல் பெருக்கத்தையும், செரிமானமின்மையையும் தடுக்கிறது.

இரத்தத்தில் pH அளவை சமப்படுத்துகிறது
கோதுமைப்புல் பொடியில் காரத்தன்மை அதிகமாக உள்ளதால், இரத்தத்தில் இருக்க வேண்டிய pH அளவை நிலைப்படுத்தி பேணுகிறது. எனவே, இரத்தத்தில் உள்ள அமிலத்தன்மையைக் குறைத்து, காரத்தன்மையை நிலைநிறுத்த உதவுகிறது.

நச்சு நீக்கும் தன்மை
கோதுமைப்புல் பவுடரில் அற்புதமான நச்சு நீக்கும் தன்மை உள்ளது. புதிய காய்கறிகளில் உள்ள அளவுக்கு, இதிலும் தாதுக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், என்ஸைம்கள் ஆகியவை நிறைந்துள்ளன. இதனால் உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைக்கும் தன்மை பெற்றுள்ளது. இரத்த செல்களின் வலிமையைக் கூட்டுகிறது. இரத்த ஓட்டம் மற்றும் ஈரலின் நச்சுத்தன்மையை நீக்குகிறது. மேலும் குடலை சுத்தப்படுத்தி, கார்ஸினோஜன்களிலிருந்து (carcinogens) காக்கிறது.

இரத்த சோகையை குணப்படுத்துகிறது
வீட் கிராஸில் உள்ள குளோரோபில் மூலக்கூறு அமைப்பானது இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின்களின் மூலக்கூறு அமைப்பை ஒத்துள்ளது. இதிலுள்ள குளோரோபில்லானது எளிதில் உடலால் உறிஞ்சப்பட்டு இரத்தத்தில், இரத்த உற்பத்தியையும், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியையும் அதிகரிக்கச் செய்து, அவற்றை இயல்பான நிலையில் பேண உதவுகிறது. எனவே இது இரத்த சோகையை நீக்க உதவுகிறது என்ற முடிவுக்கு வரலாம்.

புற்றுநோயாளிகளுக்கு உதவுகிறது
இதிலுள்ள குளோரோபில் கதிரியக்கங்களின் தீமையைக் குறைக்கிறது. எனவே ஹீமோதெரபி மற்றும் ரேடியோதெரபி மருத்துவத்தை மேற்கொள்ளும் புற்றுநோயாளிகள், வீட்கிராஸ் பவுடரை உணவில் சேர்த்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

சர்க்கரை நோய்க்கு இயற்கை வழியில் தீர்வு
இரத்தத்தில் கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சும் வீதத்தை மட்டுப்படுத்துவதால், இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவினை இது கட்டுப்படுத்த மிகவும் உதவுகிறது. இதன் மூலம் சர்க்கரை நோய் மருத்துவத்தில் இது மிகவும் உதவிகரமாக உள்ளது. எனவே சர்க்கரை நோயை, அது எந்த நிலையில் இருந்தாலும், கட்டுப்படுத்துவதில் இது சிறப்பிடம் வகிக்கிறது.

மூலநோயைக் குணப்படுத்துதல்
மிகவும் பயன் தரக்கூடிய சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளதால், வீட் கிராஸ் பவுடரானது மூல நோயைக் கட்டுப்படுத்தும் இயற்கையான நிவாரணியாகக் கருதப்படுகிறது. இதில் குளோரோபில், நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள் ஆகியவை நிறைந்துள்ளன. இவை மூலநோயைக் குணப்படுத்த வல்லவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மூலநோயாளிகள், வீட் கிராஸ் பவுடரை ஒரு நாளுக்கு இரண்டு தடவை வீதம், மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து உட்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பற்சிதைவிலிருந்து பாதுகாப்பு
பற்சிதைவு மற்று இதர பல் சார்ந்த பிரச்சனைகளுக்கு கோதுமைப்புல் பவுடர் மிகச்சிறந்த மாற்றாகப் பயன்படுகிறது. அதற்கு கோதுமைப்புல் பொடியைக் கொண்டு, ஈறுகளை மசாஜ் செய்து வந்தால், ஈறுகள் வலிமையடைந்து, ஈறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும்.

வலி மற்றும் வீக்கங்களிலிருந்து நிவாரணம்
கோதுமைப்புல் பொடியானது சாதாரணமாகவே, உடலிலுள்ள வீக்கங்களைக் கட்டுப்படுத்தும் தன்மையைப் பெற்றுள்ளது. எனவே உடல் வலிகளையும், வீக்கங்களையும் கட்டுப்படுத்தும் சிகிச்சைகளில் இது நல்ல பயன் தருகிறது. அதிலும் வலிகளைக் குறைத்து, உடல் ஆரோக்கியமாகவும் இயல்பாகவும் திகழ இது உதவுகிறது.

கண்களுக்கு அளிக்கும் நன்மைகள்
வீட் கிராஸ் பவுடரைத் தவறாமல் சாப்பிட்டு வந்தால், கண்கள் பிரகாசமாகத் திகழ்ந்து பார்வை பொலிவு பெறும்.

இரத்த நாளங்கள் தடிப்புறுவதைத் தடுக்கிறது
வீட் கிராஸ் பவுடரைத் தவறாமல் சாப்பிட்டு வந்தால், இரத்த நாளங்கள் தடிப்புறும் (varicose veins) வாய்ப்பு குறைகிறது.

இரத்தத்தை சுத்திகரிக்கிறது
நச்சு நீக்கும் தன்மை கொண்டதால், இது இரத்தத்தை சுத்திகரித்து, மூச்சு மற்றும் வியர்வையில் உள்ள கெட்ட நாற்றத்தைப் போக்குகிறது.

கருவுறும் வாய்ப்பை அதிகரிக்கிறது
ஆண்களுக்கும், பெண்களுக்கும் இனப்பெருக்க சக்தியை அதிகரித்து, கருவுறுதலில் மிகவும் உதவுகிறது.

சருமத்தை சுத்தம் செய்கிறது
சருமத்திலுள்ள இறந்த செல்களை நீக்குவதன் மூலம், இது சிறந்த சரும சுத்திகரிப்பானாகச் செயல்படுகிறது. நமது உடலுக்குள்ளும் ஊடுருவி, இளமையைப் பேணும் பணிகளையும் செய்வதால், சருமத்தின் பொலிவையும், மென்மையையும் அதிகரிக்கிறது.

பருக்களை குணப்படுத்துதல்
நச்சு நீக்கும் தன்மை கொண்டிருப்பதால், கோதுமைப்புல் பொடியானது பருக்கள் உண்டாவதைத் தடுத்து, மென்மையான வழவழப்பான சருமத்தினை அளிக்கிறது. கோதுமைப்புல் பொடியுடன் சிறிது பால் சேர்த்து பசை போலாக்கி, சருமத்தின் மீது தடவிக் கொள்வதால், பருக்கள், வெடிப்புகள், கரும்புள்ளிகள், சரும நிறம் மங்குதல் ஆகியவை மறையும்.

கிருமிநாசினி குணங்கள்
கோதுமைப்புல் பொடிக்கு கிருமி நாசினித் தன்மை உள்ளதால், இதை புண்கள், காயங்கள், வெடிப்புகள், பூச்சிக்கடிகள், வெட்டுக்காயங்கள், சிராய்ப்புகள் ஆகியவற்றைக் குணப்படுத்த பயன்படுத்தலாம். மேலும் தேமலை நீக்கவும் இது பயன்படுகிறது. வெயிலால் கருமையடைந்த சருமம், கொப்புளங்கள் மற்றும் பித்தவெடிப்புகளைக் குணப்படுத்தவும் இது உதவுகிறது.

முதுமையைத் தடுக்கும் குணங்கள்
ஃப்ரீ ராடிகல்களினால் (free radicals) ஏற்படும் பாதிப்புகளை இது தடுக்கிறது. முதிர்ந்த செல்களைப் புத்துயிரூட்டும் தன்மையைக் கொண்டிருப்பதால், முதுமையைத் தடுக்கும் ஆற்றல் பெற்று, இளமையைப் பேண உதவுகிறது. சருமத்திலுள்ள சுருக்கங்களை நீக்கி சருமத்தின் நெகிழும் தன்மையை நிலை நிறுத்த உதவுகிறது. இதன் மூலம் சருமத்தின் இளமைப் பொலிவை மீட்டுத் தருகிறது.

பொடுகு மற்றும் தலைமுடிப் பிரச்சனைகள்
கோதுமைப்புல் பொடியைத் தலையில் தடவிக் கொண்டு குளித்து வந்தால், பொடுகு, வறட்சி மற்றும் உச்சந்தலை அரிப்பு போன்ற தலை சார்ந்த பிரச்சனைகள் தீரும். ஆகவே வழக்கமாகப் பயன்படுத்தும் ஷாம்புவுடன் கோதுமைப்புல் பொடியைக் கலந்து, தலையில் தடவிக் கொண்டு குளித்துவரலாம். இதனால், ஆரோக்கியமற்ற தலைமுடியை நல்ல ஆரோக்கியத்துடன் திகழும்.

நரை முடியைக் குறைக்கும்
நரைத்துப் போன தலைமுடியின் நிறத்தை மாற்றி, பழைய படி கருமையாக்கும் தன்மை கோதுமைப்புல் பொடிக்கு உண்டு. இந்த பவுடரைத் தலை முடியில் தடவிக் கொண்டு, குளித்து வந்தால், நரைமுடிகள் கருமையாகும்.



Click it and Unblock the Notifications











