மன அழுத்தம் ஆளைக் கொல்கிறது என்பதற்கான 12 அறிகுறிகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

அமைதியாக இருந்து ஆளைக் கொல்வதில் மன அழுத்தம் முதன்மையானது. இத்தகைய மன அழுத்தம் ஒருவரது வாழ்வில் வந்துவிட்டால், அவை எப்போதும் மனதில் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தி, அமைதியான முறையில் வாழ்க்கையை அழிக்க ஆரம்பிக்கும். பொதுவாக எதற்கெடுத்தாலும், மனதில் குழப்பம் நிலவினால், அதனை சரியான முடிவு எடுக்கத் தெரியவில்லை என்று தான் சொல்வோம். ஆனால் உண்மையில் அவ்வாறு அடிக்கடி குழப்பமானது மனதில் ஏற்பட்டால், உடலின் நிலையானது மிகவும் மோசமாக உள்ளது என்று அர்த்தம்.

இத்தகைய மன அழுத்தம் வேலை செய்வோரின் மத்தியில் மட்டுமின்றி, வீட்டில் இருப்போரிடமும் அதிகம் காணப்படுகிறது. ஆகவே அத்தகைய மன அழுத்தத்தை குறைப்பதற்கான வழிகளை உடனே மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அவை வாழ்வை சீர்குலைத்துவிடும். மேலும் மன அழுத்தத்தால், பல பேரின் உடல் நிலையானது மிகவும் மோசமாக உள்ளது. ஆகவே மன அழுத்தத்தை ஆரம்பக் கட்டத்திலேயே சரிசெய்ய முயல வேண்டும்.

சரி, இப்போது மன அழுத்தமானது அதிகம் உள்ளது என்பதற்கான சில அறிகுறிகளை பட்டியலிட்டுள்ளோம். இத்தகைய அறிகுறிகள் தெரிந்தால், உடனே அவற்றை சரிசெய்வதற்கு தீவிரமாக செயல்பட்டு, உடல் நலத்தை சரியாக பேணிப் பாதுகாத்து வாழுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
படபடப்பு

படபடப்பு

மன அழுத்தம் இருந்தால், பதட்டம் ஏற்படும். இவ்வாறு பதட்டத்தின் போது இதய துடிப்பானது அளவுக்கு அதிகமாக இருப்பதால், உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். ஆகவே அடிக்கடி பதட்டம் ஏற்பட்டால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

தலைவலி

தலைவலி

பொதுவாக டென்சன் ஏற்பட்டாலே தலைவலி ஏற்படும் என்பது தெரிந்த ஒன்றே. ஆனால் அதிகமான அளவில் மன அழுத்தமானது இருந்தால், மூளைக்கு செல்லும் இரத்தக்குழாய்களிலும் அழுத்தம் மற்றும் துடிப்பு அதிகரிக்கும். இதனால் கடுமையான ஒற்றை தலைவலிக்கு ஆளாகலாம்.

மூக்கில் இரத்தம் வடிதல்

மூக்கில் இரத்தம் வடிதல்

இரத்த அழுத்தமானது அதிகமாக இருந்தால், மூக்கில் இருந்து இரத்தம் வடியும். எனவே இவ்வாறு இரத்த அழுத்தத்தினால், மூக்கில் இருந்து இரத்தம் வடிந்தால், அதனை சாதாரணமாக நினைக்காமல், கவனமாக அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

கூந்தல் உதிர்தல்

கூந்தல் உதிர்தல்

நவீன உலகில், கூந்தல் உதிர்தலுக்கு முக்கிய காரணம் மன அழுத்தம் தான். சிலருக்கு இளமையிலேயே வழுக்கை ஏற்படுவதற்கு காரணமும் மனஅழுத்தம் தான். எனவே அதிக வேலைப் பளுவினால் டென்சன் மற்றும் மன அழுத்தம் இருந்தால், உடனே அதனை சரிசெய்ய பாட்டு கேட்பது, உடற்பயிற்சி செய்வது, விளையாடுவது என்பனவற்றில் ஈடுபட வேண்டும்.

தற்காலிக ஞாபக மறதி

தற்காலிக ஞாபக மறதி

மன அழுத்தம் இருந்தால், அடிக்கடி மறதி ஏற்படும். ஏனெனில் வாழ்க்கையானது ஒரே அழுத்தத்தில் இருக்கும் போது, எதையும் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. இவ்வாறான மறதி ஏற்பட்டால், உடனே மனதை அமைதிப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.

அதிகபடியான வியர்வை

அதிகபடியான வியர்வை

எப்போதுமே வியர்த்துக் கொண்டிருந்தாலும், அது மன அழுத்தம் அதிகமாக உள்ளது என்பதற்கான அறிகுறி. ஆகவே உடனே மன அழுத்தத்தை குறைப்பதற்கான முறைகளை பின்பற்ற வேண்டும்.

நரைமுடி

நரைமுடி

பொதுவாக நரைமுடியானது பரம்பரை வழியாக அல்லது அதிகப்படியான மன அழுத்தத்தினால் தான் ஏற்படும். அதிலும் தற்போது இளம் வயதிலேயே நரைமுடியானது வந்துவிடுகிறது. எனவே இவ்வாறு இளம் வயதிலேயே நரைமுடியானது ஏற்பட்டால், உடனே அதனை சரிசெய்ய முயற்சிக்க வேண்டும்.

தொடர்ந்து எரிச்சல்

தொடர்ந்து எரிச்சல்

எப்போதும், எதற்கெடுத்தாலும் எரிச்சலானது ஏற்பட்டால், அது நிச்சயம் மன அழுத்தத்திற்கான அறிகுறியே. சில சமயங்களில் எரிச்சல் அல்லது கோபம் வந்தால் பிரச்சனையில்லை. ஆனால் அதுவே எப்போதும் இருந்தால், அது பெரும் பிரச்சனை.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவு

நோய் எதிர்ப்பு சக்தி குறைவு

மாதம் மாதம் ஏதாவது ஒரு காரணத்திற்கு உடல் நிலை சரியில்லாமல் போகிறதென்றால், அதற்கு மன அழுத்தத்தினால், உடல் நோய் எதிர்ப்பு சக்தியானது குறைவாக உள்ளது என்பதற்கான அறிகுறியாகும்.

முதுமை

முதுமை

மன அழுத்தமானது அதிகம் இருந்தால், சீக்கிரமாகவே முதுமைத் தோற்றமானது காணப்படும். மேலும் மன அழுத்தம் அளவுக்கு அதிகமாக இருந்தால், சருமத்தில் சுருக்கங்களை ஏற்படுவதோடு, ஆங்காங்கு கரும்புள்ளிகளையும் ஏற்படுத்தும்.

காதல் வாழ்வில் பிரச்சனை

காதல் வாழ்வில் பிரச்சனை

ஒருவர் மன அழுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டவராக இருந்தால், விறைப்புத் தன்மை குறைபாடு அல்லது முன்கூட்டியே விந்து வெளியேறும் வாய்ப்பு உள்ளது. இதனால் சரியான காதல் வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் போகும்.

வாந்தி

வாந்தி

ஆம், உண்மையில் மன அழுத்தமானது அதிகம் இருந்தால், வாந்தி ஏற்படும். அதிலும் இந்த வாந்தியானது ஒரு சுழற்சி முறையில் ஏற்படும். இவ்வாறு வாந்தி சுழற்சி முறையில் ஏற்பட்டால், அது மன அழுத்தத்திற்கான அறிகுறியாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

12 Signs That Stress Is Killing You | மன அழுத்தம் ஆளைக் கொல்கிறது என்பதற்கான 12 அறிகுறிகள்!!!

Stress is a silent killer. It comes into your life, creates havoc and destroys your health without giving you slightest inkling. If you have the following signs of stress, then you need to buck up before you fall seriously ill.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter