For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அலுவலகத்தில் ஏற்படும் சோர்வை போக்குவதற்கான 10 எளிய வழிகள்!!!

By Ashok CR
|

வேலைக்கு செல்லும் அனைவருமே விரும்பி காத்திருப்பது விடுமுறை நாட்களுக்காகத் தான். ஏன்னெனில், அன்று மட்டும் தான் எந்தவித பொறுப்புகளும் மன அழுத்தங்களும் இல்லாமல் ஓய்வாக இருக்கலாம். வேலையில் இருக்கும் மன அழுத்தங்களும் பொறுப்புகளும் அவர்களை பெரிதும் சோர்வடையச் செய்கின்றது. இந்த சோர்வை போக்கி நமது உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருப்பது உங்கள் கைகளில் தான் இருக்கின்றது.

வருடத்தின் எந்த மாதமாக இருந்தாலும் சோர்வு ஏற்படுவதற்கு கால நேரம் கிடையாது. நம் எல்லோர் வாழ்விலும் சில சந்தர்ப்பங்களில் சோர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியாது. இதனை எதிர்த்து போராடுவது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். பொறுப்புகளும் வேலைகளும் நமது வாழ்வில் ஒரு பகுதியாகவே இருந்து வருகின்றது. இவற்றோடு மனஅழுத்தமும் ஒரு பகுதியாகவே இருந்து வருகின்றது. இந்த சோர்வை போக்குவதற்கு நாம் பல வழிகளை தேர்வு செய்வோம். அதற்காக நாம் காபின் அல்லது பீர் போன்றவற்றை நாடுவோம். பணியில் ஏற்படும் சோர்வு நமது உடலையும் மனதையும் பாதிக்கக்கூடும். அதனால், பணியில் ஏற்படும் சோர்வை போக்குவதற்கு பல வழிகளை தேடுவது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.

இதனை எவ்வாறு போக்குவது அல்லது எப்படி போக்குவது என்று நீங்கள் நினைத்தால், அதன் முதல் படியாக உங்கள் மனைவியுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். அவர்கள் தான் உங்களை நன்றாக புரிந்து வைத்திருப்பவர்கள். உங்கள் பணியில் ஏற்படும் சோர்வை போக்குவதற்கு உங்களுக்கு உதவுவார்கள். எனினும், இதனை போக்குவதற்கு சில விஷயங்களை நீங்களாகவே செய்ய வேண்டும். அதனை போக்குவதற்கு எந்த முறையையும் ஏற்பதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். உங்கள் மனதில் இருக்கும் எல்லா எதிர்மறை எண்ணங்களை போக்கி நேர்மறையான எண்ணங்களை உருவாக்க வேண்டும். இதனை செய்தால் பலவகை மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு இருக்கின்றது. உங்கள் வேலையில் ஏற்படும் சோர்வை போக்குவதற்கான வழிகளை இப்பொழுது படிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எழுச்சியான காலை வணக்கம்

எழுச்சியான காலை வணக்கம்

இதனை நீங்கள் அன்றாடம் செய்ய வேண்டும். இது வேலையில் ஏற்படும் சோர்வை போக்குவதற்கான வழிகளில் ஒன்றாகும். உங்கள் உடலுக்கு தினமும் காலை ஒரு ஊக்கத்தை அளிக்கவேண்டும். நேர்மறையான நோக்குடன் உங்கள் நாளை தொடங்க வேண்டும். இந்த நாள் நமது சாதகமாகவே இருக்கும் என்றும் நீங்கள் அவற்றை சிறந்த முறையில் கையாளுவீர்கள் என்றும் எண்ண வேண்டும். அன்றைய நாள் முழுவதும் புத்துணர்வுடன் இருப்பதற்கு சிலமணிநேரம் யோகா அல்லது உடற்பயிற்சியில் ஈடுபடலாம்.

காலை உணவை தவிர்க்க கூடாது

காலை உணவை தவிர்க்க கூடாது

உங்களுக்கு ஏற்படும் சோர்வை போக்க நினைத்தால், காலை உணவை தவிர்க்க கூடாது. உங்கள் உடலுக்கு தேவையான புரதச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். உங்கள் காலை உணவில் எல்லா ஊட்டச்சத்துக்களும் நிறைந்து அவற்றின் சரியான கலவையாக இருக்க வேண்டும். இது அன்றைய தினம் முழுவதையும் சமாளிக்க உதவி புரியும்.

மூலிகை பானங்கள்

மூலிகை பானங்கள்

மூலிகை பானங்களான க்ரீன் டீ, நெல்லிக்காய் சாறு, கற்றாழை சாறு போன்றவை அன்று நாள் முழுவதும் உங்களை தெம்பாக வைக்க உதவும். சோர்வை போக்குவதற்கான வழிகளில் இதுவும் ஒன்றாகும்.

காப்ஃபைனை தவிர்த்தல்

காப்ஃபைனை தவிர்த்தல்

காப்ஃபைனை தவிர்த்து மூலிகை டீயை அருந்தலாம். அதில் நிறைந்துள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலுக்கும், மனதுக்கும் நன்மை அளிக்கும். உங்கள் உடலுக்கு சற்று ஓய்வையும் அளிக்கும். இந்த முறையை பின்பற்றி உங்கள் சோர்வை போக்கிக் கொள்ளலாம்.

இடைவேளை விடுதல்

இடைவேளை விடுதல்

சில நேரங்களில் உங்கள் மேஜை முழுவதும் வேலைகள் குமிந்து இருக்கலாம். ஏராளமான வேலை நிமித்த சந்திப்புகள் இருக்கலாம். ஆனால், இவற்றிக்கு நடுவில் இடைவேளை எடுக்க மறந்து விடக்கூடாது. இது உங்கள் வேலையில் ஏற்படும் சோர்வை போக்குவதற்கான சிறந்த வழியாகும்.

மதிய உணவில் கவனம் தேவை

மதிய உணவில் கவனம் தேவை

உங்கள் மதிய உணவை குறைவாக சாப்பிடுவதோ அல்லது தவிர்க்கவோ கூடாது. இது மதிய நேரங்களில் உங்கள் சக்தியை குறைத்து சோர்வை ஏற்படுத்தும். அதனால், மதிய உணவில் கவனம் கொள்ள வேண்டும். அதிக காய்கறிகளை உட்கொள்வதன் மூலமாக வேலையில் ஏற்படும் சோர்வை போக்கலாம்.

காற்றோட்டம்

காற்றோட்டம்

ஒரு அறையின் உள்ளேயே நாள் முழுவதும் உட்கார்ந்து வேலைப்பார்க்கக் கூடாது.. சிறிது இடைவேளை எடுத்து வெளியில் வந்து காற்றோட்டமான இடத்தில் நிற்க வேண்டும். இது உங்கள் சோர்வை போக்குவதற்கான வழிகளில் ஒன்றாகும்.

நண்பர்களுடன் உரையாடுவது

நண்பர்களுடன் உரையாடுவது

உங்கள் வேலை இருக்கும் சக நண்பர்களுடன் சிறிது நேரம் பேச வேண்டும். இதன் மூலமாக நீங்கள் சற்று ரிலாக்ஸ் ஆகலாம். இந்த நேரங்களில் வேலை பற்றியோ அல்லது அதில் இருக்கும் பிரச்சினைகளை பற்றியோ பேசக்கூடாது. உங்களுக்கு ஏற்படும் சோர்வை இப்படிக்கூட போக்கிக்கொள்ளலாம்.

மாலை நேரங்களில் ஓய்வு

மாலை நேரங்களில் ஓய்வு

வேலை முடிந்து வீடு திரும்பிய பிறகு சற்று நேரம் டிவி பார்ப்பதோ அல்லது நடைபயிற்சியோ மேற்கொள்ளலாம். இதன் மூலமாக பணியில் ஏற்படும் சோர்வை போக்கலாம்.

சிறிது நேரம் குடும்பத்துடன் செலவிடுவது

சிறிது நேரம் குடும்பத்துடன் செலவிடுவது

வேலையில் என்னதான் நேர்ந்தாலும், சிறிது நேரம் குடும்பத்திற்கு என்று நேரம் ஒதுக்க வேண்டும். இது உங்களுக்கு மனவலிமையையும் அமைதியும் அளிக்கும். இது வேலையில் ஏற்படும் சோர்வை போக்குவதற்கான வழிகளில் சிறந்த ஒன்றாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Simple Ways To Fight Fatigue At Work

The fatigue at work may affect you both physically and emotionally. It is hence mandatory to find ways to fight fatigue at work in your own terms. Here are a few ways to fight fatigue at work.
Story first published: Tuesday, December 10, 2013, 19:25 [IST]
Desktop Bottom Promotion