For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீரிழிவும் அல்சீமர் நோய் பாதிப்பும்... !

By Mayura Akilan
|

Alzheimer’s Disease
அல்சீமர் எனப்படும் ஞாபகமறதிநோய் மிகவும் ஆபத்தானது. நினைவுத்திறன் பாதிப்பினால் அன்றாட வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. அல்சீமர் நினைவு தடுமாற்றம் மிக வயதான காலத்தில் பெரும்பாலோனோருக்கு ஏற்படுகிறது. அலோய்ஸ் அல்சீமர் என்ற ஜெர்மனி நரம்பியல் நிபுணர் பெயரில் அல்சீமர் நோய் அழைக்கப்படுகிறது.மனிதர்களுக்கு ஏற்படும் அல்சீமர் நோய்க்கு நீரிழிவும் முக்கியகாரணமாக கூறப்படுகிறது. டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு அல்சீமர் நோய் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று ஜப்பானில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

நரம்பு மண்டல பாதிப்பு

சர்க்கரை நோயாளிகளை அதிகமாக தாக்குவது நரம்பு மண்டல பாதிப்புகளும், இரத்த குழாய்களில் ஏற்படும் பாதிப்புகளே ஆகும். இவையே, பல பிரச்சினைகளான பாதப்புண்கள், கண் பாதிப்புகள், மற்றும் சிறுநீரக பாதிப்புகளுக்கு அடிப்படையாகவும் அமைந்து விடுகின்றது.

நாம் உண்ணும் உணவில் இருந்து ரத்தத்திற்கு தேவையான சரியான அளவு சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டால் அதற்கு தேவையான அளவு இன்சுலினை கணையம் சுரக்கிறது. இந்த அளவுகளில் மாறுபாடு ஏற்படும் போதுதான் நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

எனவே அதிக அளவு இன்சுலின் சுரப்பவர்களையும், குறைந்த அளவு இன்சுலின் சுரப்பவர்களையும் வைத்து அவர்களின் மூளை நரம்புகளை ஆய்வு மேற்கொண்டதில் நீழிரிவு நோய்க்கும் அல்சீமர் குறைபாட்டிற்கும் தொடர்ப்பு இருப்பது கண்டறியப்பட்டது. எனவே நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதன் மூலம் அல்சீமர் நோயை குணப்படுத்தலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அல்சீமரை தடுக்கும் காபி

காபியை தொடர்ந்து குடித்து ரத்த அளவை மேம்படுத்தி அல்சீமர் நோயை தவிர்க்கலாம் என தெற்கு ப்ளோரிடா பல்கலைகழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.என்பது ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

இதற்கு காபியில் உள்ள மர்ம கூட்டுப் பொருள் நாம் குடிக்கும் பானத்தில் உள்ள காபினுடன் செயல்பட்டு அல்சீமர் நோயை தடுக்கிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காபியில் உள்ள காபின் என்ற ரசாயனப் பொருள் மத்திய நரம்பு மண்டலத்தை தூண்டக்கூடியது ஆகும். காபி குடிப்பது மட்டும் அல்லாமல் அன்றாட நடைமுறை வாழ்க்கை மற்றும் மூளைச் செயல்பாட்டு நிகழ்ச்சிகள் மூலமாகவும் அல்சீமர் நோயை தவிர்க்க முடியும். என ஆய்வாளர் காரி அரேன்டஷ் தெரிவித்துள்ளார்.

English summary

Alzheimer’s disease and diabetes | நீரிழிவும் அல்சீமர் நோய் பாதிப்பும்... !

Japanese researchers say that having insulin resistance or type 2 diabetes raises your risk of developing the brain plaques associated with Alzheimer’s disease. The research team found that people with the highest levels of fasting insulin had nearly six times the odds of having plaque deposits between nerves in the brain, compared to people with the lowest levels of fasting insulin.
Story first published: Tuesday, March 13, 2012, 10:57 [IST]
Desktop Bottom Promotion