Latest Updates
-
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்!
ராகி கஞ்சி முதல் கம்பு கஞ்சி வரை - எந்த கஞ்சி குடிச்சா, என்ன நன்மை கிடைக்கும்? - விளக்கும் டாக்டர்!
Kanji Benefits In Tamil: தற்போது அதிகரித்து வரும் நோய்கள் மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகளால் மக்கள் தங்கள் ஆரோக்கியத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர். அதன் விளைவாக முதலில் உண்ணும் உணவுகளில் கூடுதல் கவனத்தை செலுத்தி, ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொண்டு வருகின்றனர். அதுவும் சமீப காலமாக மக்களிடையே நம் முன்னோர்களால் அதிகம் உட்கொள்ளப்பட்டு வந்த கஞ்சி வகைகள் பிரபலமாகி வருகின்றன.

நிறைய பேர் காலை வேளையில் கஞ்சியை எடுத்து வருகின்றனர். அதுவும் பழைய கஞ்சி மட்டுமின்றி, சிறுதானியங்களைக் கொண்டும் கஞ்சி தயாரித்து உட்கொண்டு வருகின்றனர். என்ன தான் கஞ்சியை குடித்தாலும், பலருக்கு எந்த கஞ்சி என்ன நன்மைகளைத் தரும் என்பது குறித்து சரியாக தெரிவதில்லை. அதைத் தெரிந்து கொண்டு, நமது உடல் தேவைக்கேற்ப கஞ்சியை எடுத்து வந்தால், இன்னும் சிறப்பான பலனைப் பெறலாம் அல்லவா?
இதுக்குறித்து சித்த மருத்துவரான டாக்டர் ஜெயரூபா அவர்கள் கஞ்சி வகைகளையும், அவை ஒவ்வொன்றின் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்தும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது என்னவென்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
1. ராகி கஞ்சி
"ராகி கஞ்சியில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து அதிகமாக உள்ளன. குறிப்பாக இந்த கஞ்சி எலும்புகள் மற்றும் தசைகளை வலுப்படுத்தும். அதுவும் இதை ஒரு நாள் நொதிக்க வைத்து சாப்பிட்டால் இன்னும் நல்லது " என்று டாக்டர் கூறினார். எனவே எலும்பு தொடர்பான பிரச்சனைகள் வரக்கூடாதெனில் ராகி அல்லது கேழ்வரகு கஞ்சியை அடிக்கடி உட்கொள்ளலாம்.
2. பழைய சாத கஞ்சி
"பழைய சாதம் ஒரு அற்புதமான உணவு. இதை அமிர்தம் என்றே சொல்லலாம். அதுவும் காலையில் எழுந்ததும் நீராகாரம் அல்லது பழைய சாத கஞ்சியை எடுக்கும் போது, குடல் சமநிலையில் இருக்கும். குறிப்பாக கோடையில் இதை உட்கொள்ளும் போது, உடல் குளிர்ச்சியாக இருக்கும்" என்று கூறினார்.
3. கருப்பு உளுந்து கஞ்சி
"கருப்பு உளுந்து கஞ்சி பெண்களுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக இது பெண்களின் எலும்புகளை வலுப்படுத்த, ஹார்மோன்களை சமநிலையில் வைத்துக் கொள்ள, நல்ல தரமான கருமுட்டைகள் உருவாக உதவுகிறது. அதுவும் இந்த கருப்பு உளுந்து கஞ்சியுடன் வெல்லம், தேங்காய் பால் சேர்த்து உட்கொண்டால், இன்னும் நல்லது" என்று டாக்டர் கூறினார்.
4. வெந்தய கஞ்சி
"வெந்தய கஞ்சி உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும். குறிப்பாக வெள்ளைப்படுதல் பிரச்சனையைக் கொண்ட பெண்கள், உடலில் எப்போதும் பருக்களைக் கொண்டவர்கள், உடல் சூடு, தூக்கமின்மை பிரச்சனையை கொண்டவர்கள் வெந்தய கஞ்சியை எடுத்துக் கொள்ளலாம்" என்று கூறினார்.
5. பூண்டு கஞ்சி
"பூண்டு கஞ்சி செரிமானத்தை மேம்படுத்தும். காய்ச்சல் உள்ளவர்கள், செரிமான பிரச்சனையைக் கொண்டவர்கள், பூண்டு, சீரகம் சேர்த்த கஞ்சியை எடுத்துக் கொள்வது நல்லது" என்று டாக்டர் கூறினார்.
6. கருப்பு கவுனி அரிசி கஞ்சி
"கருப்பு கவுனி அரிசியில் ஆந்தோசையனின்கள் என்னும் மிகச்சிறந்த சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இது சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், முதுமைத் தோற்றத்தை தள்ளிப் போடவும், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற பல பிரச்சனைகளைக் கொண்டவர்களுக்கு இந்த கஞ்சி உகந்தது. முக்கியமாக எல்லோரும் இந்த கஞ்சியை எடுக்கலாம்" என்று டாக்டர் கூறினார்.
7. கம்பு கஞ்சி
"கஞ்பு குடலை சுத்தம் செய்யக்கூடிய ஒரு சிறந்த சிறுதானியம். கம்பை உட்கொள்ளும் போது, உடலுக்கு கால்சியம், இரும்புச்சத்து போன்றவை கிடைக்கும். முக்கியமாக குடலில் கழிவுகள் தேங்குகிறது, மலச்சிக்கல் அதிகமாக உள்ளது என்று கூறுபவர்கள் கம்பு கூழை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது" என்று டாக்டர் கூறினார்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
