Latest Updates
-
தலைசுற்ற வைக்கும் இந்திய அரசர்களின் ஆடம்பரம் - எதுக்கெல்லாம் கோடிக்கணக்குல செலவு பண்ணிருக்காங்க பாருங்க -
ராகு-கேது பெயர்ச்சி 2026: மேஷம் முதல் கன்னி வரை யாருக்கு ராஜயோகம்?- விளக்கும் ஜோதிடர்! -
கேரட் தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
செப்டம்பர் 11, 2026: இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சொஜ்ஜி அப்பம் ரெசிபி - இந்த வருஷம் இந்த சூப்பரான இனிப்பை செஞ்சு பாருங்க -
காளான் வாங்குனா ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருடைம் இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. அள்ளும்.. -
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடத்துல கண்ணாடியை வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பீங்க.. -
97 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா? இந்த நாட்டில் ஒரு ஹாஸ்பிடல் கூட இல்லையாம்
இந்த கம்பு கஞ்சியை தினமும் 1 கப் குடிச்சா.. 1 வாரத்துல தொப்பையில் நல்ல மாற்றம் தெரியுமாம்.. ட்ரை பண்ணி பாருங்க
Vegetable Kambu Kanji Recipe In Tamil: உங்களுக்கு பானை போல தொப்பை இருக்கா? இந்த தொப்பையை குறைக்க எவ்வளவு ட்ரை பண்ணாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்கமாட்டீங்குதா? ஈஸியா தொப்பையை குறைக்கணுமா? அப்ப உண்ணும் உணவில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
அதுவும் காலை வேளையில் கஞ்சியை குடித்து வாருங்கள். அதுவும் சிறுதானியங்களுள் ஒன்றான கம்பு கொண்டு கஞ்சி செய்து சாப்பிடுங்கள். குறிப்பாக சில காய்கறிகளை சேர்த்து கஞ்சி செய்து பாருங்கள். இந்த கம்பு கஞ்சியை தொடர்ந்து குடித்து வந்தால், 1 வாரத்தில் தொப்பையில் நல்ல மாற்றத்தைப் பார்க்கலாம்.

உங்களுக்கு வெஜிடேபிள் கம்பு கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெஜிடேபிள் கம்பு கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கம்பு குருணை- 50 கிராம்
* பிரஷ்ஷான சோயா பீன்ஸ் - 50 கிராம்
* தண்ணீர் - 5 கப்
* உப்பு - சிறிது
தாளிப்பதற்கு...
* நெய் - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 2 பல் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 5 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* தேங்காய் பால் - 1/4 கப்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் கம்பு குருணையை ஒரு வாணலியில் போட்டு லேசாக மணம் வரும்
வரை வறுத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் வறுத்த கம்பை நீரில் 2 முறை கழுவி, வடிகட்டி சிறிது நேரம்
தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு வடிகட்டி வைத்துள்ள கம்பு குருணையை மிக்சர் ஜாரில் போட்டு
ஒருமுறை மீண்டும் அரைத்துக் கொள்ள வேண்டும். இதனால் கம்பு வேகமாக
வெந்துவிடும்.
* பிறகு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பிரஷ்ஷான சோயா பீன்ஸை
போட்டு, அத்துடன் அரைத்து வைத்துள்ள கம்பையும் சேர்த்து, 6 கப் நீரை
ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து குக்கரை மூடி, உயர் தீயில் வைத்து
2 விசிலும், பின் குறைவான தீயில் வைத்து 1 விசிலும் விட்டு இறக்க
வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும்,
வெந்தயம், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு சேர்த்து
வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பீன்ஸ், கேரட், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம்
சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு 2 நிமிடம் கிளறி விட
வேண்டும்.
* பின் காய்கறிகள் வேக தேவையான அளவு நீரை ஊற்றி, மூடி வைத்து, 10
நிமிடம் மிதமான தீயில் வைத்து, வேக வைக்க வேண்டும்.
* காய்கறிகள் வெந்ததும், அடுப்பை அணைத்து விட வேண்டும்.
* பின்னர் கம்பு வேக வைத்த குக்கரில் உள்ள கம்பை நன்கு கிளறி விட்டு,
மீண்டும் அடுப்பில் வைத்து, கொதி வர ஆரம்பித்ததும், வேக வைத்துள்ள
காய்கறிகளை அப்படியே சேர்த்து கிளறி, கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக 1/4 கப் தேங்காய் பாலை ஊற்றி, தேவையான அளவு நீரை ஊற்றி
கிளறி, 1 நிமிடம் கொதிக்க வைத்து, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால்,
சுவையான வெஜிடேபிள் கம்பு கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications
