Latest Updates
-
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும்
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 வாட்டி செஞ்சு குடிங்க.. உடல் எடையும் குறையும்.. சுகரும் கட்டுப்பாட்டு-ல இருக்கும்..
Weight Loss Kollu Vendhaya Poondu Kanji Recipe In Tamil: நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் டயட்டில் இருக்கிறீர்களா? அதற்காக தினமும் உடற்பயிற்சியை செய்வதோடு, கடுமையான டயட்டையும் ஃபாலோ செய்கிறீர்களா? ஆனால் உங்களால் கடுமையான டயட்டை ஃபாலோ பண்ண முடியவில்லையா? அப்படியானால் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைக்கும் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளுங்கள்.
முக்கியமாக காலை உணவின் போது கஞ்சி போன்றவற்றை உட்கொள்வது மிகவும் நல்லது. அதுவும் கொள்ளு வெந்தய பூண்டு கஞ்சியை வாரத்திற்கு 3 முறை உட்கொண்டு வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து, உடலானது குதிரை போன்று வலிமையடையும். இந்த கஞ்சியை தயாரிப்பது என்பது மிகவும் சுலபம். முக்கியமாக இந்த கஞ்சியானது சர்க்கரை நோயாளிகளுக்கும் மிகவும் நல்லது.

உங்களுக்கு கொள்ளு வெந்தய பூண்டு கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொள்ளு வெந்தய பூண்டு கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கொள்ளு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* புழுங்கல் அரிசி - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 5 பல் (தட்டி வைத்தது)
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* கருப்பு அல்லது வெள்ளை மிளகுத் தூள் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* தேங்காய் பால் - தேவையான அளவு
* தண்ணீர் - 3 கப்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கொள்ளு பருப்பை
சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து, ஒரு தட்டில் போட்டு குளிர
வைக்க வேண்டும்.
* பின் அதே வாணலியில் புழுங்கல் அரிசியை சேர்த்து, பொரியத்
தொடங்கியதும், அதை இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த கொள்ளு மற்றும் அரிசியை சேர்த்து,
கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 3 கப் நீரை ஊற்றி நன்கு
கொதிக்க ஆரம்பித்ததும், அதில் வெந்தயம், தட்டி வைத்துள்ள பூண்டு
பற்களை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடித்து வைத்துள்ள கொள்ளு மற்றும் அரிசியை
சேர்த்து கட்டிகளின்றி கிளறி விட்டு, கொதிக்க வைக்க வேண்டும்.
* கொதி வந்ததும், குக்கரை மூடி, மிதமான தீயில் வைத்து 3 விசில் விட்டு
இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, பின் அதில் கருப்பு அல்லது
வெள்ளை மிளகுத் தூளை தேவையான அளவு சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி
நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் தேவையான அளவு தேங்காய் பாலை சேர்த்து கிளறினால்,
சுவையான கொள்ளு வெந்தய பூண்டு கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications











