Just In
- 4 hrs ago
வார ராசிபலன் (26.06.2022-02.07.2022) - இந்த வாரம் நீண்ட பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது....
- 5 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் ஆடம்பர செலவுகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது....
- 15 hrs ago
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
- 16 hrs ago
நீங்க விரும்பி சாப்பிடும் இந்த பொருட்கள் உங்களுக்கு சீக்கிரம் வழுக்கை வர வைக்குமாம்... ஜாக்கிரதை!
Don't Miss
- News
"என் மகனை கண் முன்னாடியே சுட்டு கொன்னுட்டாங்க!" கதறிய ஐஏஎஸ் அதிகாரி.. விஜிலென்ஸ் ரெய்டில் பரபரப்பு
- Finance
3 மாதத்தில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. தரகு நிறுவனத்தின் சூப்பர் கணிப்பு..!
- Automobiles
வெறும் 2 மாதங்களில் ஓலாவின் வருவாய் ரூ.500 கோடிக்கு மேல்!! ஆண்டு முடிவிற்குள் ரூ.7,800 கோடியை எட்ட டார்க்கெட்!
- Movies
ரோஜா சீரியலில் இருந்து ரசிகர்களின் ஃபேவரைட் 'அர்ஜுன் சார்' சிபு சூரியன் விலகல்...கவலையில் ரசிகர்கள்
- Sports
ரோகித் சர்மாவுக்கு கொரோனா உறுதி.. இங்கிலாந்து தொடரில் அடுத்தடுத்த சர்ச்சை.. எப்படி பரவியது??
- Technology
பழைய பாஸ்போர்ட் செல்லுபடியாகுமா? இ-பாஸ்போர்ட் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
படுக்கையில் எழுந்தவுடனே வயிற்று வலியா? இதுவாத் தான் இருக்கும் ? கவனமா இருங்க
ஒருவருக்கு வயிற்று வலி வருகிறது என்பதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வயிற்று வலி வரும் அதற்கான அறிகுறிகள் அவர்களுக்கு தெரிந்திருக்கும். அதுமட்டுமில்லாமல் எண்ணற்ற வகைகளில் வயிற்று வலிகள் நமக்கு ஏற்படுகின்றன.
அதுவும் தூங்கும் போது வயிற்று வலி ஏற்பட்டு தூக்கத்தை இழந்தவர்கள் அதிகம். அது மலம் வருவதற்கான அறிகுறிகளாகக் கூட இருக்கலாம். அல்லது செரிமானப் பிரச்சினையாக இருக்கலாம் வாயுத் தொல்லையாக இருக்கலாம். இதில் எது நம்மை பாதித்திருக்கிறது என்பதைக் கண்டறிய எளிய வலிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மலக்குடல் கதவைத் தட்டும்
எதற்காக நமது வயிறு வலிக்கிறது என்பதைக் கண்டறிவது கடினமானது. ஆனால் எங்கு வலிக்கிறது என்பதை வைத்து இதுவாகத் தான் இருக்கும் என யூகிக்க முடியும். அடிவயிற்றில் வலித்தால் குடல் சார்ந்த பிரச்சினைகளாக இருக்கலாம். காலையில் வயிறு வலித்தால் நீங்கள் பாத்ரூமிற்கு கிளம்ப நேரம் ஆயிற்று என்று அர்த்தம்.
Most Read:உலக ஹெபடைடிஸ் தினம் ஜூலை 28 : நோயின் தாக்கம், வகைகள், அறிகுறிகள்

வலிக்கும் போது புத்தி வேலை செய்யுமா ?
உடலில் வலி என்று வந்தபிறகு எதையாவது யோசிக்கத் தோணுமா? அதுவும் வயிற்று வலி. மிகக் கொடுமையான வலிகளில் வயிற்று வலிகளும் ஒன்று. எனவே கண்டறிவதில் சிக்கல் இருந்தால் மருத்துவருக்கு கால் செய்து பேசலாம். வலி அதிகமாக இருந்தால் மருத்துவமனைக்கு செல்வது நல்லது.

மற்றவர்களும் பாதிக்கப்படிருக்கிறார்களா
பார்ட்டிகளில் ஒன்றாகச் செல்லும் போது ஃபுட் பாய்சனிங் ஆவது என்பது சாதரண விசயம். கெட்டுப் போன உணவுகளையோ முறையாக பதப்படுத்தாத உணவுகளையோ உண்ணும் போது அவற்றை நமது வயிற்றுக்குள் ஒத்துக் கொள்ளாது. ஒரு வேளை அப்படியாக இருந்தால் மலத்தைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுங்கள்.

காலை உணவைத் தவிர்க்காதீர்கள்
வெறும் வயிறு வலி தான் என்றால் காலை உணவை ஒரு போதும் தவிர்க்காதீர்கள். வெறும் வாயு பிடிப்பாகக் கூட இருக்கலாம். ஆனால் எளிதில் செரிமானம் ஆகக் கூடிய உணவுகளை உண்பதால் எந்தவிதப் பாதிப்பை ஏற்படுத்தி விடாது. மேலும் எண்ணெய் பலகாரம், டோஸ்ட் ப்ரட் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.

காபிக்கு நோ சொல்லுங்கள்
வயிறு பிரச்சினைகள் ஏற்படும் போது வயிற்றுக்குள் அமிலச் சுரப்பு அதிகமாக இருக்கும் அந்த தருணங்களில் காபிகளைத் தவிர்த்து விடுங்கள். காபிக்கு அடிமையாக இருந்தால் இரண்டாவது காபிக்காவது நோ சொல்லுங்கள்.

உடற்பயிற்சி
உடற்பயிற்சி செய்வது காலையில் ஏற்படக்கூடிய வயிறு சம்மந்தமான அசௌகரியங்களை நீக்கும். உடற்பயிற்சிகள் செய்தும் வலி நீங்கவில்லை என்றால் வலியின் போக்கு நிற்கும் வரை காத்திருக்கவும். ஏனெனில் உடனடியாக எந்தப் பலனும் கிடைத்துவிடாது.

மாத்திரைகளை எடுக்கலாமா
வலியின் போக்கு அதிகமாக இருக்கும் போது மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். அதே நேரத்தில் மாத்திரைகள் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தக் கூடும். அப்படி வயிற்றுப் போக்கை ஏற்படுத்துமானால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வது தான் ஒரே வழி.

வாயு மாத்திரை
வயிற்றில் பிடிப்பு போன்ற வலியை ஏற்படுத்தினால் நிச்சயம் வாயு பிடிப்பாகத் தான் இருக்கும் குறைந்த நேரமே நீடித்தாலும் உயிரைக் குடித்துவிடும் அளவுக்கு வலியைத் தந்துவிடும். வாயு மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுவதே இதற்கான போதுமான மருத்துவமாகும்.

அமில நீக்கிகள்
சூடமிட்டாய் போல் காட்சி அளிக்கும் இவ்வகை மாத்திரைகள் வயிற்றில் உள்ள அமிலத்தின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்த உதவும். புளிச்ச ஏப்பம் வருகிறது. வயிற்றெரிச்சல் போன்றவற்றிற்கு தற்காலிக உடனடித் தீர்வை அளிக்கிறது.

இயற்கை வீட்டு வைத்தியம்
வயிறு வீக்கம் மற்றும் வாய் சம்மந்தமான வயிற்றுப் பிரச்சினைகளுக்கு பெப்பர்மிண்ட் எண்ணெய், இஞ்சி மஞ்சள் ஆகியவையே போதுமானது. மேலும் அமிலப் பிரச்சினைகளால் உங்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டது என்றால் பெப்பர்மிண்ட் நிலைமையை மேலும் மோசமாக்கி விடும். எனவே உறுதிப்படுத்திய பிறகு பயன்படுத்த வேண்டும்.

வெப்பமூட்டும் திண்டு
ஹீட்டிங் பேட் என்று அழைக்கப்படும் வெப்பமூட்டும் திண்டை பயன்படுத்தி வயிற்று வலியைக் கட்டுக்குள் கொண்டு வரலாம். குறிப்பாக குடல் எரிச்சல் சார்ந்த நோய்களுக்கு இது நல்ல பலன்களை அளிக்கிறது. ஆனால் உட்செலுத்தும் உணவுகளில் சூட்டை உண்டு பண்ணும் உணவுகளை ஒரு போதும் பயன்படுத்தி விடக்கூடாது.

அலுவலகத்திற்கு விடுமுறை சொல்லுங்கள்
வீடுகளில் இருக்கும் போது வயிற்று வலி ஏற்பட்டால் சமாளித்துவிடலாம். அலுவலகம் என்று வரும் போது கொஞ்சம் அதீத கவனம் தேவை. நிலைமை மோசமாக மாறும் போது உங்கள் பாஸிடம் சொல்லிவிட்டு விடுமுறை எடுப்பது என்பது அவசியம். ஏனெனில் வயிற்று வலி சம்மந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு ஓய்வு என்பது அவசியமாகிறது.