For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குவாரண்டைன் காலத்தில் வரும் சோர்வை போக்குவது எப்படி?

|

நம்மில் பெரும்பாலோனோர் இந்த கொரோனா வைரஸ் கிருமியினால் பெரும் அவதிக்குள்ளாகி இருப்போம். இந்த நோய் நம்மை தாக்காவிடிலும் வேறு வகையில் நம்மை பாதித்துக் கொண்டிருக்கிறது. இது போன்றதொரு சூழ்நிலையில் நாம் இருக்க வேண்டியது இருக்கும் என்று நாம் கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டோம்.

பல மாதங்களாக வெளியில் எங்கும் வேறு ஊர்களுக்கு செல்லாமல், சொந்த பந்தங்களை பார்க்க செல்லாமல் இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுளோம். இது போன்றதொரு வைரஸ் கிருமி பரவும் சூழ்நிலைகளை, நாம் கதைகளில் படித்திருப்போம் அல்லது ஆங்கில திரைப்படைகளில் மட்டுமே பார்த்திருப்போம். எப்படி இருந்தாலும், தனியாக இருப்பதும் சமுக இடைவெளியை கடைப்பிடிப்பது மட்டுமே நம் உயிரை காக்கும்.

MOST READ: கொரோனாவின் வேறு புதிய 3 அபாய அறிகுறிகள்!

நம்மில் பலர் சுகாதாரத்தை பேணிகாப்பதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்வதில்லை. இதனால் பெருமளவில் பாதிப்பு ஏற்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் போனில் இன்டர்நெட் வேலை செய்யாவிட்டால் என்ன செய்வீர்கள்? உடனே பிலைட் மோடை ஆக்டிவேட் செய்து பார்ப்பீர்களல்லவா? அதே போலத் தான் நம் உடலும், ஏதும் பிரச்சினை வரும் பொழுது அதற்கு சிறு ஓய்வு கொடுத்து சரிப்படுத்தி கொள்வது நல்லது.

MOST READ: O வகை இரத்தப் பிரிவினருக்கு ஓர் நற்செய்தி: கொரோனா இவங்கள தாக்காதாம் - உண்மை என்ன?

யாராவது கொரோனா பற்றி ஏதும் கூறினால், நாம் உடனே பயப்பட ஆரம்பித்து விடுகிறோம். பயத்துடன் ஒருவித மன உளைச்சலும், எப்பொழுது இந்த வைரஸ் தாக்கம் முடிவுக்கு வரும் என்ற ஏக்கமும் ஏற்படுகிறது. இவை எல்லாம் உங்களுக்கு தனிமைப்படுத்துதலால் சோர்வு ஏற்பட்டுவிட்டது என்பதை உணர்த்துகிறது.

MOST READ: இந்த கொரோனா அறிகுறிகளை சந்திப்பவர்களுக்கு முழு நரம்பு மண்டலமும் பாதிக்கப்படலாம்: ஜாக்கிரதை!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொரோனா வைரஸ் தனிப்படுத்துதலால் வரும் சோர்வை எவ்வாறு கண்டறிவது?

கொரோனா வைரஸ் தனிப்படுத்துதலால் வரும் சோர்வை எவ்வாறு கண்டறிவது?

கொரோனா வைரஸ் வராமல் தடுக்க மிக முக்கியமாக பின்பற்ற வேண்டியது சமுக இடைவெளி மற்றும் தனிமைப்படுத்திக் கொள்வது. ஆனால் இவையே ஒருவருக்கு மனசோர்வை ஏற்படுத்துகிறது. நாள் முழுவதும் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தது, ஏதேனும் ஒரு அவசர தேவைக்கு மட்டும் வெளியே வருவதால், நமக்கு சோர்வு, அமைதியற்ற தன்மை, கவலை மற்றும் விரக்தி ஏற்படுகிறது.

அதிலும் வீட்டிலிருந்தபடியே வேலை செய்பவர்களுக்கு பாதிப்பு மிக அதிகமாகவே இருக்கிறது. லேப்டாப் முன்னாடியே உட்கார்ந்து கொண்டு வேலை செய்வது, அலுவலக போன் கால்களை பேசுவது, உடல் உழைப்பு இல்லாமல் இருத்தல் போன்ற காரணங்களால், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொருவருக்கும் இந்த தாக்கம் மாறுபடுகிறது. இந்த சோர்வு ஏற்பட என்ன காரணம் என்பதை பற்றி கீழே காணலாம்.

ஒரு உறுதியற்றத்தன்மை, கட்டுப்பாடு, பொறுப்புணர்வு மற்றும் நிதி சிக்கல்கல்கள் காரணமாக ஒருவருக்கு சரியான ஊக்கம் கிடைப்பதில்லை. இதனால் அவர்கள் மனசோர்வு அடைந்து சோர்வடைகிறார்கள்

சூழ்நிலை மாற்றம்

சூழ்நிலை மாற்றம்

நாம் எல்லாம் மனிதர்கள், நமக்கு நம் சுற்றுப்புறம் கொஞ்சம் மாறிக்கொண்டே இருந்தால் தான் நம்மால் வழக்கமான நல்ல மனநிலையில் இருக்க முடியும். ஒரே சூழ்நிலையில் வெகு காலம் இருப்பது நமது மன நிலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தனிமைப்படுத்துதல் மற்றும் தனிமையாக இருப்பதாக தோன்றும் உணர்வால், நம் உடலில் கார்டிசோல் அளவு அதிகரிக்கிறது. இதன் மூலம், எடை அதிகரிப்பு, ரத்த அழுத்த பிரச்சினை, உணவு உட்கொள்வதில் குறைபாடு மற்றும் உடல் சோர்வு ஏற்படுகிறது.

தூக்க பிரச்சனை

தூக்க பிரச்சனை

ஒரே மாதிரியாக பின்பற்றும் நமது வாழ்க்கை முறை மற்றும் சரியாக பராமரிக்கப்படாத ஹார்மோன் அளவுகளால் நமது உயிர் கடிகாரம் பாதிக்கப்படுகிறது. இதனால் நமது உடல் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. நம் உடல் ஹார்மோன் அளவு பாதிக்கப்படுவதால், நம் தூக்க-விழிப்பு சுழற்சி பாதிக்கப்பட்டு, ஒருவருக்கு தூக்கமின்மை, தூக்க குறைபாடு மற்றும் சோர்வு ஏற்படுகிறது.

சரி இந்த சோர்வில் இருந்து விடுபட என்ன தான் தீர்வு என்று நீங்கள் கேட்பது எங்களுக்கு தெரிகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் இந்த தனிமைப்படுத்துவதால் வரும் சோர்வினை கட்டுப்படுத்தலாம்.

ஒரே வழக்கத்தை பின்பற்றவும்

ஒரே வழக்கத்தை பின்பற்றவும்

தனிப்படுத்துதலால் வரும் சோர்வை குறைக்க ஒரே வழி தினமும் ஒரே வகையான வழக்கத்தை செய்யும்படி தீர்மானித்து கொள்வது. எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பது மட்டுமே இந்த தனிமைப்படுத்துதல் சோர்வை கட்டுப்படுத்தும். ஒரு ஆரோக்கியமான தினசரி வழக்கத்தை பின்பற்றும் ஒருவருக்கு அவரின் இதய துடிப்பு மற்றும் செயல்கள் சீராக இருக்கும். உங்கள் உடலும் அதனை உணர்ந்து, உங்களுக்கு ஒரே பாதுகாப்பான இடத்தில் இருப்பது போன்றதொரு உணர்வை அளிக்கும்.

முடிந்தவரை தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்

முடிந்தவரை தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்

இப்பொழுதுள்ள சூழ்நிலையில் நம் நண்பர்களையோ அல்லது நம் உறவினர்களையோ நம்மால் நேரடியாக சந்திக்க இயலாது. அனால், தற்பொழுதுள்ள தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியால் நம்மால் உலகில் உள்ள எந்த ஒரு நபருடனும் வெகு எளிதாக தொடர்பில் இருக்க முடியும். உங்களுடைய அன்றைய நாளை பற்றி பேசுங்கள், பின்னால் இந்த பிரச்சினை எல்லாம் முடிந்து எங்கே சுற்றுலா செல்லலாம் என திட்டம் தீட்டுங்கள், உங்களுடைய பிரச்சினைகள், நீங்கள் அன்றைய தினம் சமைத்த உணவு என எதுவாக இருந்தாலும் பேசுங்கள். இதன் மூலம் உங்கள் மனநலம் நன்கு சீராகும்.

பொழுதுபோக்கு வேலையை செய்யுங்கள்

பொழுதுபோக்கு வேலையை செய்யுங்கள்

மன சோர்வு மற்றும் அழுத்தத்தை எதிர் கொள்ள மிக முக்கிய வழி அதனை அப்படியே வெளியில் விட்டு விடுவது. உங்களுக்கு ஏதேனும் ஒரு பொழுதுபோக்காக வேலை அல்லது ஹாபி இருக்குமேயானால் அதனை இப்பொழுது நீங்கள் தொடரும் காலம் வந்து விட்டது. எப்பொழுதெல்லாம் நீங்கள் சோர்வாக உணர்கிறீர்களோ, அப்பொழுதெல்லாம் நடனம் ஆடுதல், ஓவியம் வரைதல், தோட்ட வேலை அல்லது சமையல் போன்ற உங்கள் ஹாபியை செய்யுங்கள். இதனால் உங்கள் மனம் நிம்மதி அடையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Coronavirus Quarantine Fatigue: Tips To Cope With This Condition

Here are some tips to cope with coronavirus quarantine fatigue. Read on...