ஒரு சீஸ் பீட்சா எக்ஸ்ட்ரா சாப்பிட்டா இங்க என்ன நடக்குதுன்னு பாருங்க!

Posted By:
Subscribe to Boldsky

உடல் நலத்தை கணக்கில் எடுத்துக் கொள்கிறவர்கள் எல்லாரும் முதலில் கவனம் செலுத்துவது அவர்களது உணவில் தான். டயட் பின்பற்றப் போகிறேன் என்று சொல்லிவிட்டு முதல் இரண்டு நாட்கள் மிகவும் ஸ்ட்ரிக்ட்டாக ஃபாலோ செய்வார்கள் அதன் பிறகு ஒரு நாள் மட்டும், இன்றைக்கு ஒரு நாள் தான் கடைசி என்று சொல்லி சொல்லியே அப்படியே பழைய கதைக்குத் திரும்பி விடுவார்கள்.

உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உங்களின் வாழ்க்கை முறை, உடற்பயிற்சிகள் எல்லாம் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறதோ அதேயளவு உணவிற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஒரு நாள் மட்டும், ஆசைக்காக என்று சொல்லி சொல்லியே துரித உணவுகளை சாப்பிட ஆரம்பித்து விடுகிறீர்களா? அல்லது இந்த உணவை எல்லாம் என்னால் தவிர்க்கவே முடியவில்லை என்று கவலைப்படுகிறவர்கள் இந்த கட்டுரையைப் படிங்க....

பொதுவாக ஒவ்வொரு உணவிலிருந்தும் உங்கள் உடலுக்குத் தேவையான எனர்ஜி கிடைக்கிறது, அதனால் டயட் பின்பற்றுபவர்கள் ஒவ்வொரு உணவிலிருந்தும் கிடைக்ககூடிய கலோரியை கணக்கிட்டுத் தான் தங்களின் உணவு அட்டவனையை வடிவமைப்பார்கள். அப்படி உங்கள் தேவைக்கும் அதிகமான கலோரி சேர்வதால் தான் உடலில் கொழுப்பு சேர்கிறது. உடல் எடை அதிகரிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எவ்வளவு நேரம் :

எவ்வளவு நேரம் :

சரி, இப்போது நீங்கள் சாப்பிடக்கூடிய உணவுகள் குறிப்பாக துரித உணவுகள் ஒரு முறை எடுத்துக் கொண்டால் அதிலிருந்து கிடைக்கக்கூடிய அதிகபட்ச கலோரியை கரைக்க எவ்வளவு நேரம் உழைக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மொஹ்ரெல்லா ஸ்டிக்ஸ் :

மொஹ்ரெல்லா ஸ்டிக்ஸ் :

ஒரு பவுல் நிறைய மொஹ்ரெல்லா ஸ்டிக்ஸ் சாப்பிட்டால் உங்கள் உடலில் சேருகிற கலோரியின் எண்ணிக்கை 763.

அதாவது இது சாப்பிடுவதால் மட்டும் தான் இந்த அளவு இதைத் தாண்டி நீங்கள் பிற உணவுகளையும் சாப்பிடுவீர்கள் என்பதால் கலோரியின் அளவு எக்குத்தப்பாக எகிறிவிடும்.

இதிலிருந்து கிடைக்கக்கூடிய கூடுதல் கலோரியை கறைக்க 82 நிமிடங்கள் டென்னிஸ் விளையாட வேண்டும்.

சீஸ் பர்கர் :

சீஸ் பர்கர் :

இன்றைய இளைய தலைமுறையினருக்கு மிகவும் பிடித்தமான ஓர் உணவு இது என்றே சொல்லலாம். இதிலிருந்து மட்டும் உங்களுக்கு கிடைக்கிற கலோரியின் அளவு 343.

30 நிமிடங்கள் தொடர்ந்து நீச்சல் பயிற்சி மேற்கொள்வதால் இதனை கரைக்கலாம்.

சீஸ் பிட்சா :

சீஸ் பிட்சா :

இது எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்ப்பைப் பெற்றிருக்கிறது என்று சொல்லவே வேண்டாம். பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் இந்த பீட்சாவிற்கு அடிமையாய் இருக்கிறார்கள்.

சீஸ் பீட்சாவின் ஒரு ஸ்லைஸ் மட்டும் சாப்பிடுவதால் உங்களுக்கு 285 கலோரி வரை கிடைக்கும். ஒரு ஸ்லைஸ் மட்டுமே இவ்வளவு கலோரி என்றால் முழு பீட்சாவையும் சாப்பிட்டு பார்த்தால் என்னாகும் என்று நினைத்துப் பாருங்கள்.

இந்த ஒரு ஸ்லைஸ் பீசாவினால் கிடைக்ககூடிய கலோரியை கரைக்க நீங்கள் 50 நிமிடங்கள் வாக்கிங் செல்ல வேண்டியிருக்கும்.

சாக்லேட் சிப் குக்கீஸ் :

சாக்லேட் சிப் குக்கீஸ் :

உடற்பயிற்சி செய்வது உங்களுக்கு அலுப்பாய் தெரிகிறதா? அப்படியானால் இந்த முயற்சியை முயற்சித்துப் பாருங்கள்.

சாக்கோ சிப்ஸ் கொண்ட குக்கீஸ் சாப்பிடுவதால் உங்களுக்கு 155 கலோரி கிடைக்கும். ஸ்டைர் க்ளைம்பரில் குறைந்தது 15 நிமிடங்கள் பயிற்சி செய்வதற்கு சமம். அதாவது 15 நிமிடங்கள் வரை நீங்கள் மாடிப்படிகளை ஏறி இறங்க வேண்டும்.

நினைத்தாலே கொஞ்சம் ஜர்க் ஆகிறது என்றால் இந்த குக்கீஸ் சாப்பிடுவதை நிறுத்தி விடு்ங்கள்.

டூனா சாலெட் சப்ஜி :

டூனா சாலெட் சப்ஜி :

நீண்ட நேரம் பசியெடுக்காது என்று சொல்லி தேடித்தேடி இதைச் சாப்பிடுவார்கள். ஆம், பசியெடுக்காது தான் ஆனால் உங்கள் உடலில் அதிகப்படியான கலோரி சேர்கிறதே....

45 நிமிடங்கள் நீங்கள் ஜாக்கிங் செல்வதற்கு செலவழிக்கும் எனர்ஜியை இந்த டூனா சப்ஜி சாப்பிடுவதால் கிடைத்துவிடுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

சோடா :

சோடா :

நம்மில் பெரும்பாலானோர் சோடா குடிப்போம். அதிலும் சிறப்பாக, உணவு செரிக்கவில்லையா அப்படியென்றால் ஒரு சோடா குடி என்று சொல்லி சொல்லியே பழக்கப்படுத்தப்பட்டோம்.

உண்மையில் சோடாவெல்லாம் உடல் நலத்திற்கு எவ்வளவு தீங்கானது என்று தெரியுமா? அதில் சர்க்கரையை தவிர வேறு எந்த சத்தும் இல்லை. இருபது நிமிடங்கள் மலையேறினால் செலவழிக்கும் எனர்ஜியை ஒரே நிமிடத்தில் சோடா குடிப்பதினால் நம் உடலில் வந்து சேர்ந்திடுகிறது.

சிக்கன் சாண்ட்விச் :

சிக்கன் சாண்ட்விச் :

இதெல்லாம் ஜஸ்ட் லைக் தட் ஸ்நாக்ஸ் போல வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருப்போம். கிட்டத்தட்ட இதனை எல்லாம் ஸ்நாக்ஸ் ரேஞ்சில் தான் டீல் செய்கிறோம். இப்படிசெய்வதினால் 42 நிமிடங்கள் ஜாக்கிங் செல்லவும் அல்லது ஒரு மணி நேரம் 22 நிமிடங்கள் வாக்கிங் செல்வதற்கான எனர்ஜி கூடுதலாக உங்கள் உடலில் சேர்கிறது.

வறுத்த கடலை :

வறுத்த கடலை :

சாதரண உணவினை விட ஸ்நாக்ஸ் சேர்ப்பதினால் தான் நம் உடலில் அதிகப்படியான எனர்ஜி சேர்கிறது. வறுத்த கடலை, இதனை நாம் மாலை நேரச் சிற்றுண்டியாக சாப்பிடுவதை வழக்கமாக சாப்பிடுவோம். இதிலிருந்து உங்களுக்கு கிடைக்கிற கலோரி 296. அதாவது ஒரு கைப்பிடியளவுக்கு இவ்வளவு கலோரி, இதன் அளவு அதிகமானால் உங்கள் உடலில் சேருகின்ற கலோரியின் அளவும் அதிகரிக்கும்.

ஒரு கைப்பிடியளவு வறுத்த கடலை சாப்பிட்டால் நீங்கள் உங்கள் உடலில் சேர்ந்திருக்கும் கலோரியை குறைக்க ஒரு மணி நேரம் வாக்கிங் செல்ல வேண்டும்.

சாக்லேட் பார் :

சாக்லேட் பார் :

பலருக்கும் பிடித்தமான ஓர் இனிப்பு என்றே சொல்லலாம். அன்பை வெளிப்படுத்த, கொண்டாட்டங்களுக்கு என எல்லாவற்றிற்கும் சாக்லேட் தான் முதலிடத்தை பிடிக்கிறது. சாக்லேட் சாப்பிட்டா பல்லு சொத்தையாகிடும் என்ற ரீதியில் தான் சாக்லெட் குறித்த புரிதல் இருக்கிறது. அதையும் தாண்டி சாக்லேட் சாப்பிடுவதால் உங்கள் உடலில் அதிகப்படியான கலோரி சேர்கிறது.

மீடியம் சைஸ் சாக்லெட் பார் ஒன்று நீங்கள் சாப்பிடுவதால் உங்களுக்கு 22 நிமிடங்கள் ஓடுவதற்கான எனர்ஜி கிடைத்திடும்.

உருளைக்கிழங்கு சிப்ஸ் :

உருளைக்கிழங்கு சிப்ஸ் :

எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகளை எல்லாம் அறவே தவிர்த்திட வேண்டும் என்று அடிக்கடி சொல்லக்கேட்டிருப்போம். ஏன் தெரியுமா? மிகக் குறைவான சிப்ஸ் சாப்பிட்டால் கூட அளவுக்கு அதிகமான கலோரி உங்கள் உடலில் சேர்ந்திடும் என்பதால் தான். நான்கைந்து சிப்ஸ் சாப்பிடுவதால் மட்டும் உங்கள் உடலில் சேருகிற கலோரியின் எண்ணிக்கை 171.

 ப்ர்த்டே கேக் :

ப்ர்த்டே கேக் :

சிறிய அளவிலான ப்ர்த்டே கேக்கினை சாப்பிடுவதால் உங்களுக்கு கிடைக்கக்கூடிய கலோரிகளின் எண்ணிக்கை 312. எதாவது விஷேசத்தின் போது, நான் என்ன அடிக்கடியா சாப்பிடுறேன் எப்போயாவது தான என்று சொல்லி எக்ஸ்ட்ரா பீஸ் வாங்கி சுவைக்கும் நபராக இருந்தால் அந்தப் பழக்கத்தை இத்தோடு நிறுத்தி விடுங்கள். எப்போயாவது, ஒரு பீஸ் என்று நீங்கள் சேர்க்கும் ஒவ்வொரு உணவுமே உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை.

சிறிய கேக் சாப்பிட்டால் அதிலிருந்து கிடைக்கக்கூடிய கலோரியினால் நீங்கள் 45 நிமிடங்கள் வரை வாக்கிங் செல்லலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Burn calories from your favorite foods

Burn calories from your favorite foods
Story first published: Tuesday, January 30, 2018, 11:16 [IST]
Subscribe Newsletter