தக்காளி எந்தவகையான புற்று நோயை தடுக்கிறது என உங்களுக்கு தெரியுமா?

Posted By: Lakshmi
Subscribe to Boldsky

வயிற்றில் கேன்சர் வளர்ச்சியை அதிகமாக்கும் உருவாக்கும் வீரியமிக்க குரோமோசோம்களை தக்காளி கட்டுப்படுத்தும் என புதிய ஆய்வுகள் கூறுகின்றன. ஒரு முழு தக்காளியில் உள்ள அனைத்து சத்துக்களையும் வைத்து எப்படி கேன்சர் செல்களின் வளர்ச்சியை தடுப்பது என ஆய்வுகள் செய்துவருகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இத்தாலி ஆராய்ச்சி மையம்

இத்தாலி ஆராய்ச்சி மையம்

தக்காளியில் உள்ள லிகோபீனைப் போன்ற குறிப்பிட்ட ஒரு பகுதி மட்டுமல்லாமல், முழு தக்காளி வயிற்று கேன்சருக்காக பரிந்துரைக்கப்பட வேண்டும் என்று இத்தாலியில் Mercogliano (CROM) என்னும் ஆன்காலஜி ஆராய்ச்சி மையத்தின் ஆய்வாளர் டேனியல் பாரோன் தெரிவித்துள்ளார்.

சான் மர்சனோ மற்றும் கார்பரினோ

சான் மர்சனோ மற்றும் கார்பரினோ

ஆய்வின் படி, சான் மர்சனோ மற்றும் கார்பரினோ வகை தக்காளிகளின் சாறு, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தாமதப்படுத்தியது. முழு தக்காளி சாறுகள் மூலம் சிகிச்சை செய்யப்படும்போது, சில இடையூறுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

புற்றுநோய் அழிவு

புற்றுநோய் அழிவு

உயிரணுச் சுழற்சியை ரெட்டினோபிளாஸ்டோமா குடும்ப புரதங்கள் மற்றும் குறிப்பிட்ட உயிரணுக் குறைபாடுகள் ஆகியவற்றின் மூலம் சரிசெய்ய முடிந்தது. இறுதியாக புற்றுநோய் உயிரணுவை அப்போப்டொசிஸ் மூலம் அழிக்க முடிந்தது.

தக்காளியில் உள்ள சத்துக்களை புற்றுநோய் சிகிச்சைக்காக மட்டுமின்றி புற்றுநோய் வராமல் தடுக்கவும் பயன்படுத்தலாம் என இத்தாலி ஆராய்ச்சி மையம் கூறுகிறது.

இதனை சில பொருட்களுடன் சேர்த்து உண்ணும் போது இது வேறு சில விளைவுகளை ஏற்படுத்தலாம் என கூறுகின்றனர்.

4 ஆவது இடம்

4 ஆவது இடம்

உலகளாவிய ரீதியில் மிகவும் பொதுவான புற்றுநோய்களில் இரைப்பை புற்றுநோயானது 4 வது இடத்தில் உள்ளது. அதன் காரணங்கள் மரபணு, ஹெலிகோபாக்டிக்கர் பைலோரி தொற்று மற்றும் உணவு உண்ணும் உணவு வகைகள் போன்றவையாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

will tomato cure cancer

The use of tomatoes in cancer treatment is given
Please Wait while comments are loading...
Subscribe Newsletter