வலிப்பு வருபவர்கள் தினப்படி என்ன செய்ய வேண்டும்?

By: Peveena Murugesan
Subscribe to Boldsky

வலிப்பு நரம்பு மண்டலத்தில் உண்டாகும் பாதிப்பாகும். மூளை மற்றும் நரம்பு செல்களில் தகவல் பரிமாற்றம் செய்வதற்கு அந்தச் செல்களுக்கிடையில் இயல்பாகவே மிகச் சிறிய அளவில் மின்சாரம் உற்பத்தியாகிறது.

ஏதாவது ஒரு காரணத்தால் மூளையில் உண்டாகிற அதீத அழுத்தத்தால் இந்த மின்சாரம் அபரிமிதமாக உற்பத்தியாகி, ஒரு மின் புயல் போல் கிளம்புகிறது. அது நரம்புகள் வழியாக உடல் உறுப்புகளுக்குக் கடத்தப்படுகிறது. அப்போது உறுப்புகளின் இயக்கம் மாறுபட்டு, கை, கால்கள் உதறத் தொடங்குகின்றன. இதைத்தான் 'வலிப்பு' என்கிறோம். அவ்வாறு வலிப்பு நோய்கள் வருபவர்கள் தினபப்டி வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும்? இதோ உங்களுக்காக.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாத்திரை :

மாத்திரை :

தினமும் எடுக்க வேண்டிய மாத்திரைகளை சரியாக எடுக்க வேண்டும். மாத்திரைகளை மாற்றுவதோ (அ) மாத்திரைகளின் டோஸ் அளவை குறைப்பதோ மருத்துவரின் ஆலோசனையின்றி செய்ய வேண்டாம்.

மற்ற பிரச்சனைகள் :

மற்ற பிரச்சனைகள் :

நீரிழிவு (அ) உயர் ரத்த அழுத்தம் இவை இருந்தால் மருத்துவரை அணுகி சம்பந்தப்பட்ட சிகிச்சை எடுக்கவும். அதிகப்படியான சர்க்கரை மற்றும் அதிகப்படியான கார்போஹைட்ரெட் தவிர்க்க வேண்டும்.

உங்களைப் பற்றிய குறிப்பு :

உங்களைப் பற்றிய குறிப்பு :

ஒரு சிறிய தாளில் உங்களுடைய பெயர்,உங்களுக்குள்ள நோய்களின் பெயர்,மருந்துகளின் விவரங்கள்,குடும்ப உறுப்பினர்களின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய விவரங்கள்,குடும்ப மருத்துவரின் பெயர் மற்றும் முகவரி இவை அனைத்தையும் குறிப்பெடுத்து பாதுகாப்பாக உங்கள் சட்டை பையில் எப்பொழுதும் வைத்திருக்க வேண்டும்.

குளியலறை மற்றும் அறைக் கதவு :

குளியலறை மற்றும் அறைக் கதவு :

தினசரி குளிப்பது மிகவும் நல்லது.தலைக்கு குளிக்க அனுமதிக்கப்படுகிறது.ஆனால் குளியலறையையோ (அ) கழிப்பறையையோ உள்பக்கமாக பூட்ட வேண்டாம்.

குளியலறையில் மின்சார உபகரணங்கள் உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் வீட்டில் உள்ள அனைத்து கதவுகளையும் இரண்டு வழிகளிலும் திறந்து மூடும் படி மாற்ற வேண்டும்.

மூக்குக் கண்ணாடி :

மூக்குக் கண்ணாடி :

நீங்கள் கண்ணாடி அணிபவராக இருந்தால் லென்ஸ்களை பிளாஸ்டிக்காக மாற்றி விட வேண்டும்.ஏனெனில் இவை எளிதாக உடையாது.

உங்கள் வீட்டில் அதிகமான கண்ணாடி பொருட்கள் இருந்தால் அவை அனைத்தையும் பிளாஸ்டிக்காக மாற்றி விடுங்கள்.

சமைக்கும்போது :

சமைக்கும்போது :

சமைக்கும்போது பாத்திரத்தின் கைப்பிடியை தொடாமல் தள்ளியே நில்லுங்கள்.இவ்வாறு செய்வதால் சமைக்கும்போது வலிப்பு ஏற்பட்டால் பாத்திரங்களின் கைபிடியைத் தட்டி விடாமலும்,சூடான பதார்த்தங்கள் உங்கள் மேல் கொட்டாமலும் தவிர்க்கலாம்.

அலுவலகம் :

அலுவலகம் :

அலுவலகங்களில் இருந்தால் உங்கள் மேலதிகாரியிடமோ (அ) உடன் வேலை பார்ப்பவர்களுக்கும் மேலே கூறப்பட்டுள்ள அனைத்து விவரங்களும் அடங்கிய குறிப்பை கொடுத்து விடுங்கள்.

வாகனங்கள் :

வாகனங்கள் :

வெளியே செல்லும்போது உங்கள் மருத்துவர் அனுமதி இன்றி வாகனங்களை ஓட்ட வேண்டாம்,அருகில் நீச்சல் தெரிந்த நபர் ஒருவர் இல்லாவிட்டால் ஆறு,ஏறி,குளங்கள்,நீச்சல் குளம் இவற்றில் குளிக்க வேண்டாம்.

இவை அனைத்தையும் பின்பற்றினால் வலிப்பு ஏற்பட்டால் எளிதாக கையாளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tips to deal with fits that you must know

Tips to deal with fits that you must know
Story first published: Tuesday, April 11, 2017, 13:40 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter