ஹோட்டல்ல சாப்பிடறதுக்கு முன்ன இந்த 7 விஷயம் கவனிச்சிருக்கீங்களா?

Posted By:
Subscribe to Boldsky

வீட்டில் என்ன தான் அம்மா, மனைவியின் கையில் ருசியான உணவு சாப்பிட்டுருந்தாலும், நமக்கு பிடித்த நபர்களுடன் சென்று ஹோட்டலில் உணவருந்தி வருவது நம்மில் பலருக்கு ஒரு தனி சுகமான அனுபவமாக இருக்கும்.

உணவருந்த செல்கிறோம், என்பதை தாண்டி அங்கே நமக்கான சில நினைவுகள் சேகரித்தும் வருவோம். சில நாட்கள் கழித்து "அன்னிக்கி அந்த ஹோட்டல்ல சாப்டமே, சாப்பாடு சூப்பர்ல..." என பேசவதற்கான நிகழ்வாக இருக்கும்.

Things You Should Be Care Full on Before Eating Hotel Food!

ஹோட்டல் சாப்பாடு ஆரோக்கியமானது தானா? இல்லை என்று நம் அனைவருக்கும் தெரியும்!

ஆனாலும், சாப்பிடுவோம்! அடிப்படையாக சில விஷயங்களை நீங்கள் ஹோட்டலில் கவனித்தால், ஹோட்டலில் சாப்பிடும் போது மாற்றிக் கொண்டால், ஆரோக்கிய சுகாதார நிலை பெரிதாக மோசமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
# எண்ணெய் உணவுகள்!

# எண்ணெய் உணவுகள்!

ஹோட்டலுக்கு செல்வது என்றால் நமக்கு அலாதி பிரியம் வந்துவிடும். அதே நேரத்தில் உண்ணும் உணவில் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதிலும் முக்கியமாக எண்ணெய் உணவு ஆர்டர் செய்யும் போது.

பெரும்பாலும் ஹோட்டல்களில் உபயோகப்படுத்திய எண்ணெய்களை தான் மீண்டும், மீண்டும் வடிக்கட்டி பயன்படுத்துவர். இது உடல் நலத்திற்கு கேடானது.

எனவே, ஹோட்டலில் சாப்பிடும் போது கிரில் அல்லது தந்தூரி, வேக வைத்த உணவுகள் தேர்வு செய்து உண்பது கொஞ்சம் ஆரோக்கியமானதாக இருக்கும்.

# தட்டு, டம்ளர்!

# தட்டு, டம்ளர்!

சாப்பிட வைக்கப்படும் தட்டை நீங்களே கொஞ்சம் தண்ணீர் தெளித்து, டிஷு பேப்பர் வைத்து துடைத்த பிறகு சாப்பிட பயன்படுத்துங்கள். சில உணவகங்கள் மட்டுமே பீங்கான் தட்டுகளை சுடு தண்ணியில் இட்டு கழுவி, துடைத்து பயன்படுத்துவார்கள்.

பல உணவகங்கள் வெறும் நீரில் அலாசி தான் மீண்டும் பயன்படுத்துவார்கள். இதை நீங்கள் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

# டிஷு பேப்பர்!

# டிஷு பேப்பர்!

பெரும்பாலும் இப்போது பல கடைகளில் டிஷு பேப்பர்கள் உபயோகத்திற்கு வந்து விட்டன. ஆயினும், இன்னும் சில கடைகளில் கை கழுவும் இடத்தில் டவல்கள் தான் தொங்கவிட்டிருப்பார்கள், பலர் பயன்படுத்திய அந்த டவலில் இருந்து பாக்டீரியாக்கள் தான் அண்டுமே தவிர, கைகள் சுத்தம் ஆகாது. இதை தவிர்க்க வேண்டும்.

# மூலப் பொருட்கள்!

# மூலப் பொருட்கள்!

நாம் ஹோட்டல் செல்லும் போது உணவு ஆர்டர் செய்வதோடு நிறுத்திக் கொள்வோம், அவர்கள் எப்படி சமைக்கிறார்கள், என்னென்ன பொருட்கள் பயன்படுத்துகிறார்கள் என கேட்டறிந்துக் கொள்ள வேண்டியது அவசியம். பெரும்பாலான பெரிய ஹோட்டல்களில் கேட்டால் நிச்சயம் பதில் அளிப்பார்கள். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.

# ஜூஸ்!

# ஜூஸ்!

ஹோட்டலில் சாப்பிட்ட பிறகு கடைசியாக ஜூஸ் எதாவது குடிக்க நமது மனம் அலைபாயும். இதில் தவறில்லை. ஆனால், எக்காரணம் கொண்டும் கார்பனேட்டட் பானங்கள் பருக வேண்டும். இது உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும். பழரசம் குடிப்பது சிறந்தது.

# மீன்!

# மீன்!

மீன் பிரியர்களே, முடிந்த வரை மீன் உணவுகளை வெளியே ஹோட்டல்களில் சாப்பிட வேண்டாம். முக்கியமாக பொறித்த, வறுத்த மீன்கள். குழம்பு மீன்களில் கூட பெரிதாக எந்த தாக்கமும் இருக்காது. ஆனால், மீண்டும், மீண்டும் பயன்படுத்தப்படும் எண்ணெயில் பொறிக்கப்படும் மீன்கள் ஆரோக்கியத்தை பதம்பார்க்கும்.

# மைதா!

# மைதா!

ஹோட்டலில் உணவு உண்ணும் போது மைதா உணவுகள் தவிர்ப்பது நல்லது. முக்கியமாக இரவு நேரங்களில், மைதா எளிதாக செரிமானம் ஆகாது. அவை செரிக்க நீங்கள் அதிக உடல் வேலை செய்ய வேண்டும்.

எனவே, இரவு மைதா உணவுகள் சாப்பிட்டால், உடல் எடை உடனே கூட நிறைய வாய்ப்புகள் உண்டு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things You Should Be Care Full on Before Eating Hotel Food!

Things You Should Be CareFull on Before Eating Hotel Food!
Story first published: Friday, September 1, 2017, 12:58 [IST]
Subscribe Newsletter