For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கைகளைக் கொண்டே உடலில் இருக்கும் தீவிர பிரச்சனைகளை அறிவது எப்படி?

இங்கு நம் உடலினுள் இருக்கும் தீவிர பிரச்சனைகளை நம் கைகள் எவ்வாறு வெளிக்காட்டும் என கொடுக்கப்பட்டுள்ளது.

|

நம் உடலினுள் தீவிர பிரச்சனைகள் இருந்தால், அது ஒருசில அறிகுறிகளை வெளிப்படுத்தும். எனவே ஒவ்வொருவரும் தங்களது உடலை எப்போதும் கவனித்தவாறு இருக்க வேண்டியது அவசியம். நம் உடலில் இருக்கும் பிரச்சனைகளை நம் கைகளே வெளிக்காட்டும்.

Serious Condition You Can Detect By Simply Looking At Your Hands

Image Courtesy: healthandhealthytips

நம் கைகள் உள்ளுறுப்புக்கள் மற்றும் அவற்றின் ஆரோக்கியத்தை வெளிக்காட்டும் கண்ணாடி போன்றது. இக்கட்டுரையில் நம் உடலினுள் இருக்கும் பிரச்சனைகளை நம் கைகள் எவ்வாறு வெளிக்காட்டும் என கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சோர்வு

சோர்வு

மிகவும் கனமான பொருட்களைத் தூக்குவதன் மூலும் களைப்பும், சோர்வும் அதிகமாக இருக்கும். உடல் மிகுந்த களைப்புடன் இருந்தால், கைவிரலில் கூச்ச உணர்வு அதிகமாக இருக்கும்.

முதுகெலும்பு பாதிப்பு

முதுகெலும்பு பாதிப்பு

இடது கையில் உள்ள சுண்டு விரல் சிவந்தும், அழுத்தம் கொடுத்தால் வலியும் ஏற்பட்டால், முதுகெலும்பில் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம்.

டிப்ஸ்:

இந்த பிரச்சனை இருக்கும் போது, தினமும் சிறிது நேரம் யோகா அல்லது நீச்சல் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். மேலும் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதைத் தவிர்த்து, அடிக்கடி சிறு தூர நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

வைட்டமின் குறைபாடு

வைட்டமின் குறைபாடு

உடலில் வைட்டமின்களான பி1, பி2, பி6 மற்றும் ஈ போன்றவற்றின் குறைபாடு இருந்தால், இடது கை விரல்களில் கூச்ச உணர்வு அதிகம் இருக்கும்.

டிப்ஸ்:

வைட்டமின் குறைபாடுகளை சரிசெய்ய, மருத்துவரை சந்தித்து மருந்து மாத்திரைகளுடன், உணவில் காய்கறிகள் மற்றும் பழங்களை சற்று அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பியூஜெர்ஸின் நோய்

பியூஜெர்ஸின் நோய்

பெரும்பாலும் இந்த நோயால் புகைப்பிடிப்பவர்கள் தான் பாதிக்கப்படுவார்கள். இதற்கு அதிகளவு நிக்கோட்டின் எடுப்பதே முக்கிய காரணம். இப்படி புகைப்பிடிக்கும் போது, உடலினுள் அத்தியாவசிய கனிமச்சத்துக்களின் அளவு குறையும். இப்பிரச்சனை இருந்தால், நம் கைவிரல்கள் மரத்துப் போகும்.

டிப்ஸ்:

இந்த பிரச்சனையில் இருந்து விடுபட, உடனடியாக புகைப்பிடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

இரத்த ஓட்ட பிரச்சனை

இரத்த ஓட்ட பிரச்சனை

நரம்பு அதிர்ச்சி அல்லது தோள்பட்டை கூட்டு வலி போன்ற பிரச்சனை இருக்கும் போது, விரல்நுனிகள் அதிகமாக மரத்துப் போகும். மேலும் இந்த அறிகுறி தீவிர இதய நோய்க்கான அறிகுறியும் கூட. அதோடு, இந்த அறிகுறி இரத்த நாளங்கள் குறுகி, உடலில் இரத்த ஓட்டம் மோசமாக இருப்பதையும் குறிக்கும்.

டிப்ஸ்:

உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்க, தினமும் சிறிது நேரம் நடைப்பயிற்சியை மேற்கொள்வதோடு, ஸ்ட்ரெட்ச்சிங் பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டும்.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய்

இரத்த ஓட்ட பிரச்சனையுடன், நரம்பு முனைகளில் பாதிப்பும் இருந்தால், கால்களில் இருந்த கைகள் வரை, கூச்ச உணர்வு அதிகமாக இருக்கும். இது டைப்-1 சர்க்கரை நோய்க்கான அறிகுறியும் கூட.

டிப்ஸ்:

இன்சுலின் அளவில் பிரச்சனை இருக்கும் போது டைப்-1 சர்க்கரை நோய் வரும். டைப்-2 சர்க்கரை நோயானது செயற்கை சர்க்கரை மற்றும் மோசமான டயட்டின் காரணமாக வரும். எனவே உடனே மருத்துவரை அணுகி, போதிய சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Serious Condition You Can Detect By Simply Looking At Your Hands

Here are some serious condition you can detect by simply looking at your hands. Read on to know more...
Desktop Bottom Promotion