நுரையீரலில் தேங்கி இருக்கும் சளியை முற்றிலுமாக அகற்ற வேண்டுமா? எளிய 5 வழிகள்!

Posted By: Lakshmi
Subscribe to Boldsky

அனைவரும் கபம் மற்றும் சளியால் அதிகமாக பாதிக்கப்படுகிறோம். அது மூக்கு துவாரங்களில் இருந்தாலும் சரி அல்லது தொண்டையில் இருந்தாலும் சரி நம்மை வாட்டி எடுத்து விடும் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. மேலும் கூடுதலாக, நெஞ்சில் இறுக்கத்தையும், இருமல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமத்தை உண்டாக்குகிறது.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள இயற்கையான மருத்துவ முறையின் மூலம் விரைவாக உங்களது சளி மற்றும் கபத்தை விரட்டியடிக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. மஞ்சள்

1. மஞ்சள்

மஞ்சளில் உள்ள ஆக்டிவ் இன்கிரியண்ட் மற்றும் குர்குமின் ஆகிய இரண்டு மருத்துவ பயன்பாடுகளுக்காக அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது பாக்டீரியாக்களுடன் போராடுகிறது. இது உப்புடன் சேரும் போது, தொண்டையில் ஏற்பட்டுள்ள வறட்சியை போக்குகிறது.

தேவையான பொருட்கள்:

1 டீஸ்பூன் மஞ்சள்

1/2 டீஸ்பூன் உப்பு

1 டம்ளர் மிதமான சூடுள்ள நீர்

தயாரிக்கும் முறை

1 டீஸ்பூன் மஞ்சளை மிதமான சூடுள்ள நீரில் சேர்க்க வேண்டும். பின்னர் உப்பு சேர்த்து கலக்க வேண்டும். இந்த நீரை தினமும் மூன்று முதல் நான்கு முறை குடித்து வந்தால் தொண்டை சளி மற்றும் கபம் நீங்கும்.

2. இஞ்சி

2. இஞ்சி

இஞ்சியில் இயற்கையாகவே வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் திறன் அடங்கியுள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, பல நோய்களில் இருந்து காக்கிறது.

இந்த சக்திவாய்ந்த இஞ்சியானது. சளி மற்றும் கபத்தால் உண்டான வறட்சியை போக்க வல்லது. நீங்கள் தினமும் சில இஞ்சி துண்டுகளை மென்று சாப்பிட வேண்டும் மற்றும் 3-4 கப் அளவு இஞ்சி டீ குடிப்பது சிறந்தது.

தேவையான பொருட்கள்

6-7 துண்டு இஞ்சி

1 டீஸ்பூன் கருப்பு மிளகுத்தூள்

1 டீஸ்பூன் தேன்

2 கப் தண்ணீர்

செய்முறை

அடுப்பை சிம்மில் வைத்து தண்ணீரை சூடாக்க வேண்டும். இதில் இஞ்சி மற்றும் கருப்பு மிளகு தூளை சேர்க்க வேண்டும். ஒரு நிமிடம் கழித்து இந்த தேநீரை மூடி வைக்க வேண்டும். சிம்மில் 5-7 நிமிடங்கள் காய்ச்சவும். பின்னர் தேன் சேர்த்து பருகுங்கள்.

3. ஆப்பிள் சீடேர் வினிகர்

3. ஆப்பிள் சீடேர் வினிகர்

ஆப்பிள் சீடேர் வினிகர் ஒரு இயற்கை அதிசயம். இது உடலில் PH அளவை சமமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும் அதிகமாக கபம் உண்டாவதில் இருந்து தடுக்கிறது.

வடிகட்டாத ஒரு டீஸ்பூன் வினிகரை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து தினமும் சில முறை குடித்தால், சளி மற்றும் கபம் நீங்கும். மேலும், தொண்டை வறட்சியை நீக்கும்.

4. ஆவி பிடித்தல்

4. ஆவி பிடித்தல்

ஆவி பிடிப்பது சளி மற்றும் கபத்தின் கெட்டித்தன்மையை குறைக்கும். மேலும் தடையின்றி சுவாசிக்க உதவுகிறது. இது வறட்சியை போக்கி உடனடி தீர்வு தருகிறது.

தேவையான பொருட்கள்

1/2 டீஸ்பூன் தைம்

1/2 டீஸ்பூன் காய்ந்த ரோஸ்மேரி

4-5 கப் சுடுதண்ணீர்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் சூடான நீரை ஊற்றி, இந்த மூலிகைகளை சேர்த்து, முகத்தில் நன்றாக படும்படி ஆவி பிடிக்க வேண்டும். இதே போன்று, தினமும் மூன்று அல்லது நான்கு முறை செய்ய வேண்டும்.

5. தேன் மற்றும் எலுமிச்சை

5. தேன் மற்றும் எலுமிச்சை

தேன் ஒரு சிறந்த பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை எதிர்ப்பு பொருளாகும். இது எரிச்சலடைந்த சுவாசக்குழாயை சரி செய்கிறது. மேலும் எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும்,சுவாச பாதையை சுத்தம் செய்கிறது. இது சளி மற்றும் இருமலை போக்கும் மிகச்சிறந்த இயற்கை மூலிகையாகும்.

தேவையான பொருட்கள்

1 டீஸ்பூன் தேன்

1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு

செய்முறை

இந்த இரண்டு பொருட்களையும் நன்றாக கலந்து, ஒரு நாளைக்கு மூன்று முறை குடித்தால், மூச்சுக்குழாயில் உள்ள நெரிசல் நீங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Remedies That Remove Phlegm and Mucus Fast

Here are the some remedies that remove phlegm and mucus fast
Please Wait while comments are loading...
Subscribe Newsletter