ஒரு நாளைக்கு ஒன்பது மணிநேரம் தூங்கினால் டிமென்ஷியா நோய் வரும் தெரியுமா?

Posted By: Lakshmi
Subscribe to Boldsky

உடல் மற்றும் மூளைக்கு நாம் கொடுக்கும் ஓய்வு தான் தூக்கம். இந்த தூக்கம் மட்டும் சரியாக இருந்துவிட்டால் நாம் பாதியளவு ஆரோக்கிய நன்மைகளை அடைந்துவிடலாம். நம்மில் சிலர் மட்டுமே சரியான அளவு நேரம் தூங்குகின்றனர். பெரும்பான்மையானோர், மிகக்குறைந்த நேரம் அல்லது மிக நீண்ட நேரம் தூங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

மிக குறைந்த நேரம் மட்டுமே தூங்குவது பல ஆரோக்கிய சீர்கெடுகளுக்கு வழிவகுக்கும் என்பது நமக்கு தெரியும், ஆனால் மிக அதிக நேரம் தூங்குவதும் கூட ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

இந்த பகுதியில் மிக அதிகநேரம் தூங்குவதால் உண்டாகும் டிமென்ஷியா என்ற நோய் பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாதிக்கப்பட்டவர்கள்

பாதிக்கப்பட்டவர்கள்

அதிக நேரம் தூங்குவதால் உண்டாகும் இந்த டிமென்ஷியா நோயால் தற்போது மட்டும் உலகளவில் 46 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை வருகின்ற 2050-ஆம் ஆண்டில் மூன்று மடங்காக உயர வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அல்சீமர் நோய்

அல்சீமர் நோய்

அதிக நேரம் தூங்குவதால் உண்டாகும் அல்சீமர் நோய் என்ற நோய்க்கு அமெரிக்காவில் மட்டும் 5 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மூன்றில் ஒரு பகுதி வயதானவர்கள் இந்த அல்சீமர் நோய் மற்றும் டிமென்ஷியாவால் உயிரிழந்துள்ளனர்.

கார்வாஸ்குலர் நோய்

கார்வாஸ்குலர் நோய்

1948-ல் தொடங்கப்பட்ட ஆய்வு ஒன்றில் 30 முதல் 62 வயதிற்குற்பட்ட 5,209 ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். இவர்கள் அதிக நேரம் தூங்கும் பழக்கம் உள்ளவர்கள் என்பதால் இவர்களுக்கு கார்வாஸ்குலர் இருதய நோய் வருவதற்கான அபாயம் அதிகரித்திருந்தது அந்த ஆய்வில் அறியப்பட்டது.

9 மணிநேரம்

9 மணிநேரம்

மக்கள் தூங்கும் நேரத்தை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் ஒன்பது மணிநேரம் தூங்குபவர்களுக்கு அல்சீமர் நோய் வருவதற்கான வாய்ப்பு பத்து வருடத்தில் இரட்டிப்பாக அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

சிந்திக்கும் திறன்

சிந்திக்கும் திறன்

நீண்ட நேரம் தூங்குவதால், மூளையின் செயல்பாடு குறைகிறது, அதுமட்டுமின்றி சிந்திக்கும் திறனும் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

People who sleep longer chance to develop dementia

this article about people who sleep longer chance to develop dementia
Story first published: Monday, July 10, 2017, 17:49 [IST]