Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
பல நோய்களையும் குணப்படுத்தும் அகத்திக்கீரை! எப்படி சாப்பிடணும் தெரியுமா?
தாவர வகைகளில் கீரைகள் மிக சத்துள்ளவையாகும். ஆனால் நாம் இவற்றை மிகக்குறைந்த அளவு மட்டுமே எடுத்துக்கொள்கிறோம். குறைந்தது வாரத்தில் இரண்டு முறையாவது கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அந்த வகையில் அகத்திக்கீரை மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த பகுதியில் அகத்திக்கீரையின் நன்மைகள் பற்றி காணலாம்.

மலச்சிக்கல்
பல நோய்களுக்கு அடிப்படை காரணமாக இருப்பது மலச்சிக்கல் தான். மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் அகத்திப்பூவைச் சமைத்து உண்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குறையும்.

இருமல் பிரச்சனை
அகத்தி கீரையின் இலைச்சாறை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்த, ஒரு மாதத்தில் இருமல், இரைப்பு மாறும். அகத்திப்பூ சாறு ஒரு கரண்டி எடுத்து, இதோடு ஒரு கரண்டி தேன் கலந்து சாப்பிட இருமல், சளி தீரும்.

வயிற்று வலி
அகத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் சாறோடு, இதே அளவு தேன் கலந்து அருந்த, வயிற்றுவலி தீரும்.

புண்கள்
அகத்தி இலைகளை அரைத்து அடிபட்ட புண்கள் மேல் வைத்து கட்டுப்போட்டால் புண்கள் ஆறும்.

பால் சுரப்பு
அகத்திக்கீரை பொடியை நீர் அல்லது பாலில் கலந்து குடித்துவர, நாள்பட்ட வயிற்றுவலி மாறும். அகத்திக்கீரை பால்சுரப்பைக் கூட்டும்.

தலைவலி
பூக்களைப் பிழிந்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசிட, தலைவலி மாறும். அகத்திக்கீரை உடலிலுள்ள துர்நீரை வெளியேற்றும். இக்கீரை பித்த நோயை நீக்கும்.



Click it and Unblock the Notifications