ஒரு நாளைக்கு 10,000 அடிகள் நடப்பதால் என்னவாகும் தெரியுமா?

By: Lakshmi
Subscribe to Boldsky

உலகளாவிய ரீதியில் மரணத்திற்கு பங்களிப்பு செய்யும் காரணிகளின் பட்டியலில் உடல் செயல்பாடு இல்லாமை நான்காவது காரணியாக உள்ளது. இதில் நல்ல செய்தி என்னவென்றால், நீங்கள் ஜிம் அல்லது எந்த விதமான கடின உடற்பயிற்சியும் மேற்கொள்ளாமல், வெறும் நடைபயிற்சி மூலம் மட்டுமே உங்களது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.

மாறிவரும் வாழ்க்கை முறையில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே உடலுக்கு தேவையான உடற்பயிற்சியை செய்கின்றனர். உடலுக்கு தேவையான உடற்பயிற்சி இல்லாத காரணத்தால், அமெரிக்கர்கள் பலரும் கீழ்காணும் நோய்களினால் பாதிக்கப்படுகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம்

உடலுக்கு தேவையான உடற்பயிற்சி இல்லையென்றால், உயர் இரத்த அழுத்த பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

உடல் எடை அதிகரிப்பு

உடல் எடை அதிகரிப்பு

உடல் உழைப்பில் ஈடுபடாமல் இருப்பது, அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது, போதிய தூக்கம் இல்லாமை ஆகியவை உடல் எடை அதிகரிக்க காரணமாக உள்ளது.

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய்

உடல் உழைப்பு இல்லாமல் போவது 27% நீரழிவு நோய்க்கு காரணமாக அமைகிறது.

அழற்சி

அழற்சி

நீண்ட நேரம் உட்காந்திருப்பது, அழற்சியை ஏற்படுத்துகிறது. இது முடக்குவாதம் மற்றும் வீக்கம் போன்ற மோசமான விளைவுகளை உண்டாக்குகிறது.

தவறாக உட்காருதல்

தவறாக உட்காருதல்

நீண்ட நேரம் உட்காருதல், சாய்ந்து அல்லது குனிந்து உட்காருதல் ஆகியவை உங்களது எலும்புகளை வலுவிலக்கச்செய்கிறது. முக்கியமாக முதுகெலும்பை தேய்மானம் அடையச்செய்கிறது.

10,000 ஸ்டேப்ஸ் நடந்தால் என்ன ஆகும்?

10,000 ஸ்டேப்ஸ் நடந்தால் என்ன ஆகும்?

உங்கள் வாழ்க்கை முறையை மாற்றியமைக்க வேண்டும். எதிர்மறை எண்ணங்களை கைவிடவும். தினசரி ஒரு நடைபயிற்சி இலக்கை அமைக்கவும். அது ஒரு திடமான பழக்கமாக மாறும் வரை விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும்.

ஆரோக்கியமான இதயம்:

ஆரோக்கியமான இதயம்:

வேகமான நடைப்பயிற்சி நீங்கள் வேகமாக சுவாசிக்க உதவுகிறது. இதனால் நீங்கள் அதிகமான ஆக்ஸிஜனை சுவாசிக்கிறீர்கள். மேலும் இதயம் வேகமாக ஆக்ஸிஜனை அடைகிறது.

நோய்க்கான வாய்ப்புகள் குறைவு

நோய்க்கான வாய்ப்புகள் குறைவு

உயர் இரத்த அழுத்தம், ஸ்ட்ரோக், நீரிழிவு, பெருங்குடல் மற்றும் மார்பக புற்றுநோயின் அபாயத்தை குறைக்கும் என்பதால் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கைமுறையானது உங்கள் உடல் நலத்தை பேணிக்காக்கும்.

எடை கட்டுப்பாடு

எடை கட்டுப்பாடு

உடல் எடை குறைப்பது மட்டும் ஆரோக்கியம் அல்ல. சரியான உடல் எடையுடன் இருப்பதும் தான். நடைபயிற்சி நீங்கள் சரியான உடல் எடையுடன் இருக்க உதவுகிறது.

நம்மை அறியாமல் 10,000 காலடி தூரம் நடப்பது எப்படி?

நம்மை அறியாமல் 10,000 காலடி தூரம் நடப்பது எப்படி?

10,000 அடிகள் என்பது மிகவும் அதிகமான தூரம் கிடையாது. இந்த சில செயல்பாடுகள் மூலம் நீங்கள் தூரம் அறியாமல் நடக்கலாம்.

மாடிப்படிகளை பயன்படுத்துங்கள்

மாடிப்படிகளை பயன்படுத்துங்கள்

நீங்கள் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கலாம், அல்லது உங்களது அலுவலகத்தில் மாடிப்படிகள் இருக்கலாம். நீங்கள் லிப்ட்டுகளுக்கு பதிலாக படிகளை பயன்படுத்தலாம்.

ஒய்வு நேரங்களில் நடக்கலாம்.

ஒய்வு நேரங்களில் நடக்கலாம்.

நீங்கள் அலுவலகத்தில் அமர்ந்த இடத்தில் இருந்தே வேலை செய்பவராக இருந்தால், கிடைக்கும் இடைவெளி நேரங்களில் சிறிது தூரம் நடக்கலாம். இது உங்களுக்கு புத்துணர்ச்சியளிக்கும்.

டிரெட்மில்லில்(treadmill) நடந்து கொண்டு டிவி

டிரெட்மில்லில்(treadmill) நடந்து கொண்டு டிவி

நீங்கள் நீண்ட நேரம் உட்கார்ந்து டிவி பார்ப்பதை விட டிரெட்மில்லில்(treadmill) நடந்துகொண்டே டிவி பார்க்கலாம். நீங்கள் நடந்தது போலவும் இருக்கும். ஒரு திரைப்படத்தை பார்த்தது போலவும் இருக்கும்.

உங்கள் நாயுடன் நடக்கலாம்

உங்கள் நாயுடன் நடக்கலாம்

உங்கள் நாயை வாக்கிங் அழைத்து செல்லும் போது நீங்களும் உடற்பயிற்சி செய்துகொள்ளலாம்.

துணையுடன் நடக்கலாம்

துணையுடன் நடக்கலாம்

இரவு உணவிற்கு பின் டிவி பார்ப்பதை விட உங்கள் துணை அல்லது உறவினர்களுடன் நடைபயிற்சி மேற்கொள்ளலாம். உங்கள் வாங்கிங் நண்பர்களை அழைத்து அவர்களுடனும் நடக்கலாம். உரையாடிக்கொண்டே நடந்தால் நேரம் போவதே தெரியாது. ஒருவரை ஒருவர் நடக்க உற்சாகப்படுத்திக்கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

how to improve your health by walking 10,000 steps

Here are the tips for how to improve your health by walking 10,000 per day
Subscribe Newsletter