கொத்தமல்லியை இப்படி பயன்படுத்தினால் வயிற்று கோளாறுகள் அகலும்!

Posted By:
Subscribe to Boldsky

நமக்கு அனைத்து காலகட்டத்திலும், மிக எளிதாகவும், விலை மளிவாகவும் கிடைக்கக்கூடிய ஒன்று கொத்தமல்லியாகும். இதனை பெரும்பாலும் தினமும் கூட சமையலில் பயன்படுத்திவருகிறோம். இந்த கொத்தமல்லியில் அடங்கியுள்ள அதிசயிக்கத்தக்க மருந்துவ குணங்களை பற்றி இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சருமத்திற்கு..

சருமத்திற்கு..

கொத்தமல்லியை பேஸ்டாக செய்து சருமத்திற்கு தடவினால், சரும பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். புதினா, குப்பை மேனி போன்றவற்றை முகத்திற்கு எப்படி பயன்படுத்துகிறோமோ அதே போல கொத்தமல்லியை பயன்படுத்தலாம். தோல் சுருக்கம் மற்றும் கருமை மறையும்.

கண்களுக்கு

கண்களுக்கு

கொத்தமல்லியை அரைத்து, கண்களுக்கு மேலே பற்று போடுவதால், கண் பிரச்சனைகள் குறைகிறது. கண்களுக்கு பலம் கிடைக்கிறது. கண்கள் பிரகாசம் ஆகிறது. கண்களுக்கு கீழே உள்ள சுருக்கங்கள் மற்றும் கண்களில் உள்ள கருவளையங்கள் ஆகியவை முகத்திற்கு முதிர்ச்சியான தோற்றத்தை தரக்கூடியது. இவற்றை இந்த கொத்தமல்லி போக்குகிறது.

வயிற்று கோளாறுகள்

வயிற்று கோளாறுகள்

வயிற்று வலி, அஜீரண கோளாறுகள் போன்றவற்றை போக்குகிறது. இது இரலை பலப்படுத்துகிறது. உணவிற்கு மனத்தை தந்து இன்னும் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை தருகிறது. இதனை சிறுவர் முதல் பெரியவர் வரை யார் வேண்டுமானலும் பயன்படுத்தலாம்.

இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது

இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது

கொத்தமல்லி இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. இது அம்மை நோய்க்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இந்த மருத்துவம் வெளிநாடுகளில் கூட மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.

தனியா தேநீர்

தனியா தேநீர்

கொத்தமல்லி விதைகளை தேநீராக்கி குடித்தால், சிறுநீர் உடலில் தேக்கி வைக்கப்படாமல் உடலை விட்டு வெளியேறும். சிறுநீர் உடலில் தேங்கினால் கை, கால்களில் வீக்கம் உண்டாகும். இதனை தடுக்க இந்த இந்த தனியா தேநீர் பயன்படுகிறது.

வாயு பிரச்சனை

வாயு பிரச்சனை

தனியா தேநீரை பருகுவதினால், வாயு பிரச்சனைகள் அகலும், அடிக்கடி ஏப்பம் உண்டாவது, ஏப்பத்தினால், நெஞ்செரிச்சல் உண்டாவது போன்றவை குணமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

health benefits of coriander leaves

here are the some medical benefits of coriander leaves
Story first published: Friday, September 8, 2017, 10:45 [IST]
Subscribe Newsletter